#mymidwaymoment
6 வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த திரைப்படம் Midway , இரண்டாம் உலகப்போர் குறித்த எந்த ஒரு திரைப்படத்தையும் விட்டு வைப்பதில்லை.அதிலும் விமானம் தாங்கி கப்பல் குறித்த படமென்றால் மிகவும் விரும்பி பார்ப்பேன். Pearl Harbor, Behind Enemy Lines, Top Gun வரிசையில், Midway திரைப்படம்.
விமானம் தாங்கி கப்பலின் பிரமாண்டத்தை திரைப்படத்தில் பார்த்தாலே இப்படியிருக்கின்றதே நேரில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று நினைத்ததுண்டு. சாண்டியாகோ நகரில் CV-41 விமானம் தாங்கி கப்பலானது பொது மக்கள் பார்வைக்கு போர் விமானங்களுடன் இருக்கின்றது என்று கேள்விப்பட்டிருந்தேன். இந்த விடுமுறையில், அங்கு சென்றபொழுது அந்த கப்பல் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்து பிரமிப்பின் உச்சதிற்கே போய்விட்டேன்.
இந்த கப்பலுக்கு Midway என்று பெயர்வந்த காரனமே சுவாரசியமானது.
விரிவான பதிவை படிக்கும் ஆர்வமும் பொறுமையும் உள்ளவர்கள் தொடருங்கள்.
நான் பார்த்த நாட்டு மக்களிலேயே ஜப்பான் நாட்டு மக்கள்தான், அமைதியான, மிகப்பண்பான, பிறருக்கு உதவும் மனப்பான்மை பெரிதும்கொண்ட, பிறரது அந்தரங்களை மிகவும் மதிக்கக்கூடியவர்கள்.
நமது உடல்மொழியானது பிறரை சங்கடப்படுத்திவிடுமோ என்று பயப்பட்டு கூட, தங்களை வருத்திக்கொள்ளும் ஒரே மக்கள் ஜப்பான் நாட்டுமக்கள் ஆவர்.
இவர்கள் எப்படி இரண்டாம் உலகப்போரில் இப்படி ஆக்ரோஷமாக நாடு பிடிக்கும் ஆசையில், கொலைவெறியுடன், மனிதப்பன்புகளை மதிக்கமல் ஆடித்தீர்த்தனர் என்று ஆச்சரியமாக இருக்கின்றது. (ஆமாம் நம்ம சோழ மன்னர்கள்கூட நாடுபிடித்தவர்கள்தானே).
இரண்டாம் உலகபோரைபற்றிய நிகழ்வுகள் பேசித்தீராது,
பெரும்பான்மையான ஆசிய நாடுகளை போரிட்டு பிடித்த ஜப்பான், இந்தியாவை பிடிக்க முடியாமல் அடிவாங்கிஓடியது. 2ம் உலகப்போரில் ஈடுபட்ட மிகப்பெரிய குழுவானது இந்திய மக்கள்தான். பிரிட்டீஷ் அரசின் விடுதலை உறுதிமொழியினால் 25 லட்சம் இந்தியர்கள் ஈடுபட்டனர். 1944 ம் ஆண்டு நடந்த Battles of Imphal and Kohima என்ற போர் மனிப்பூர் பகுதியில் நடைபெற்றது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், ஜப்பான் படையினருடன், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசியப்படையும் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக போரிட்டது.
இந்தியாவின் சுதந்திரம்வேண்டி ஜப்பான் நாட்டிடம் பேசி, இங்கிலாந்து அரசை வெளியேற்ற ஒப்பந்தம்போட்டு வந்தார். அவரது படையை, இந்தியர்களை வைத்தே அழித்தொழித்தது இங்கிலாந்து அரசு.
ஜப்பான் படையினர், ஒவ்வொரு நாட்டிலும் லட்சக்கனக்கான மக்களை கொன்றூ குவித்து, பதின்ம மற்றும் இளவயது பெண்களையெல்லாம் கடத்தி வந்து பாலியல் அடிமைகளாக ஜப்பானிய வீரர்களுக்கு அளித்தது. இன்னுமும், சீனா, கொரியா, கம்போடியா, தைவான், இந்தொனேஷியா, சிங்கப்பூர் மற்றும் பல நாட்டு மக்கள் ஜப்பானை உள்ளப்பூர்வமாக வெறுக்கின்றனர். ஆசிய பகுதிகளில் கோர தாண்டவமாடிய ஜப்பான், தனது பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்த நினைத்து பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளை கைப்பற்ற நினைத்ததுதான் அதற்கு வினையாகிப்போனது,
1945 ல் அமெரிக்கா அனுகுண்டு போடுவதற்கு முன்னமே 1942ல் மிட்வே (Midway) (ஜப்பனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பசிபிக் க்டலில் உள்ளதால் அந்த பெயர்) எனும் தீவினை கைப்பற்றூம் முயற்சியில் செம்ம அடி வாங்கியது ஜப்பான். 6 மாதத்திற்கு முன்னர் பேர்ல் ஹார்பர் தக்குதலில் வெற்றி பெற்ற மமதையுடன் அடுத்து இருக்கும் மிட்வே தீவினை கைப்பற்ற , ஒரு தந்திர திட்டம் தீட்டினர். அலாஸ்கா பகுதியில் இருக்கும் ஒரு தீவினை தாக்கும்படி சிறிய படையை அனுப்பி, அமெரிக்க ரானுவத்தின் கவனத்தை திசை திருப்பி, அசந்த நேரத்தில், மிட்வே யை தாக்கி பிடிக்குமம் உத்தி அது.
ஆனால்,அந்த திட்டத்தின் செய்தி பரிமாற்றத்தினை அமெரிக்க ரானுவ உளவுத்துறை இடைமறித்து குத்துமதிப்பாக அறிந்து தனது படைகளை மிட்வேயிலேயே வைத்திருந்து ஜப்பான் படைகள் வந்தவுடன், தாக்கி அழித்தனர்.
அழிவு என்றா சாதாரன அழிவு அல்ல, 4 பெரிய விமானந்தாங்கி கப்பல்கள் உள்பட பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் ஜப்பானுக்கு ஏற்ப்பட்டது.
அந்த வெற்றியின் நினைவாகத்தான், அதன் பிறகு கட்டுமானம் செய்யப்பட்ட CV-41 விமானம் தாங்கி கப்பலுக்கு USS Midway (CV-41) என்று பெயரிட்டனர். 50 வருட பணிக்கு பிறகு அது பொது மக்கள் பார்வைக்கு காட்சியாக கலிபோர்னியாவின் சாண்டியாகோ நகரில் கம்பீரமாக நிற்க்கின்றது






















