Friday, June 19, 2026

திறமையின் அங்கீகாரம்

 





ஒரு குதிரையோ அல்லது பசுவோ, தன் மீது அமரும் ஈயை விரட்டுவதற்காகத் தன் உடலில் உள்ள ஒரு தசையை பகுதியை மட்டும் குலுக்குவதை பார்த்திருப்பீர்க்கள்.

விலங்குகளுக்கு 'பன்னிகுலஸ் கார்னோசஸ்' (panniculus carnosuச்) என்றொரு சிறப்புத் தசை அடுக்கு உள்ளது, அது அவற்றின் தோலை உடலின் எந்தப் பகுதியிலும் குலுக்க முடிய சக்தியை கொடுக்கின்றது. மனிதர்களாகிய நாம் அந்த இயல்பை பரினாம வளர்ச்சியில் இழந்துவிட்டோம். நம்மால் உண்மையில் நமது முகம், காது, மற்றும் கழுத்துத் தசைகளை மட்டுமே அசைக்க முடியும்.

பண்டைய இந்தியாவில், தசாவதானத்தில் ஒரு புகழ்பெற்ற ஒருவர் இருந்தார்—ஒரே நேரத்தில் நம்பமுடியாத அளவிற்குச் சிக்கலான, தனித்துவமான 10 செயல்களைச் செய்யும் கலை அது.

அஷ்டாவதானம்  என்பது 8 விதமான செயல்களை செய்வதை குறிக்கும்.    

 தனது பிரம்மாண்டமான இறுதி நிகழ்ச்சிக்காக, 10 அவதானத்தில் ஒன்றாக அவர் ஒரு பசுவின் பாத்திரத்தை ஏற்றார்.

பார்வையாளர்கள் அவரை இடைவிடாமல் சோதித்தனர். நிகழ்ச்சியின் முடிவில், கூட்டம் அவர் மீது தங்கம், பட்டு, மற்றும் விலைமதிப்பற்ற வைரங்கள் எனச் செல்வங்களைப் பொழிந்தது. ஆயினும், தனது நன்றியுரையின் போது, அவர் கிழிந்த, அழுக்கான ஒரு துண்டைக் கையில் ஏந்தி நின்றார்.

"இன்று நான் பெற்ற வெகுமதிகளில் அனைத்திலும்,இந்தத் துண்டுதான் எனக்குக் கிடைத்த மிகவும் விலைமதிப்பற்ற பரிசு." என்றார்.

கூட்டம் திகைத்தது. கந்தல் துணிகள் எப்படி வைரங்களை வெல்ல முடியும்?

அவர் விளக்கினார்:

"நான் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தபோது, பின்னணியில் இருந்த ஒரு பணிவான மாடு மேய்ப்பவர் என் மீது ஒரு சிறிய கல்லை எறிந்தார். உண்மையாகவே ஒரு பசுவாக இருக்க, நான் அதைப் போலவே செயல்பட வேண்டியிருந்தது. கல் பட்ட அதே தசையை என் உடல் துடிக்குமாறு நான் கேட்க்கப்பட்டேன்

தன் வாழ்நாள் முழுவதும் உண்மையான பசுக்களுடன் வாழும் ஒரு மனிதரை நான் நம்ப வைத்துவிட்டேனா என்று யோசித்துக்கொண்டே, நிகழ்ச்சியின் மீதி நேரம் முழுவதும் நான் வியர்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில், அவர் தனது ஒரே உடைமையான இந்தத் துண்டை எனக்குக் கொடுத்தார்.

அதன் பிறகுதான் நிம்மதியாக மூச்சு விட்டேன்.

வைரங்கள் நான் ஒரு சிறந்த நடிகர் என்பதைக் குறிக்கின்றன. இந்தக் கிழிந்த துண்டு, உண்மையாகவே அறிந்த ஒரே நபரிடமிருந்து நான் முழுமையை அடைந்துவிட்டேன் என்பதைக் குறிக்கிறது."

சமீபத்தில் நானும் இதே போன்ற ஒரு உணர்வை அனுபவித்தேன்.

நான் HoloQ என்றழைக்கப்படும் ஒரு முப்பரிமாண ஹோலோகிராஃபிக் காட்சியை வடிவமைத்து, ஒரு பெரிய தொழில்நுட்பக் கண்காட்சியில் அதைக் காட்சிப்படுத்தினேன். தற்போதுள்ள பெரும்பாலான ஹோலோகிராம்கள் இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும் மட்டுமே காட்சி அசைவுகளை ஆதரிக்கின்றன. ஆனால் நான் ஹோலோக்யூவை ஒரு தனித்துவமான திறனுடன் வடிவமைத்தேன்: முற்றிலும் மாறுபட்ட ஆழ நிலைகளில் பல பொருட்களைக் காண்பிப்பது, அவை தடையின்றி உள்ளேயும் வெளியேயும் நகர்வது.


நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் எங்கள் அரங்கிற்கு வந்தனர். அவர்கள், எங்களை முழுமையாக உள்ளிழுக்கும் முப்பரிமாண அனுபவத்தையும் அதன் காட்சி ஈர்ப்பையும் கண்டு பிரமித்துப்போனார்கள். ஆனால், அந்தப் புரட்சிகரமான ஆழப் பொறியியலை உண்மையில் யாரும் கவனிக்கவில்லை.


ஒருவரைத் தவிர.


ஒரு ஆப்பிள் நிறுவன பொறியாளர் அங்கு வந்தார். அவர் அந்தக் காட்சித்திரையை உன்னிப்பாகப் பார்த்து, வியந்தார். அவர் என் பக்கம் திரும்பிச் சொன்னார்:


"ஒரு ஹாலோகிராமில், பொருட்கள் முன்னும் பின்னும் நகரும் இத்தகைய உண்மையான ஆழத்தை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இது ஒரு அற்புதமான பொறியியல் சாதனை."


அந்தத் தருணத்தில், கிழிந்த துண்டை ஏந்தியிருந்த அந்தப் பழங்கால அஷ்டாவதான கலைஞரைப் போலவே நான் உணர்ந்தேன்.


Sunday, April 12, 2026

உசிலம்பட்டி பூசணிக்காய் பஞ்சாயத்து

உசிலம்பட்டியில் பூசணிக்காய் பஞ்சாயத்து என்பது மிகவும் பிரபலமான மற்றும் நகைச்சுவையான ஒரு நிகழ்வாகும். அம்மாவாசை நாளில் கடையடைக்கும் பொழுதில் , கற்பூரம் ஏற்றி, சாமிகும்பிட்டு கடைவாசலில் பூசணிக்காய் உடைப்பது பெரும்பாலோரின் வழக்கம் ஆகும். தெருவெங்கும் குங்குமம் தினிக்கப்பட்ட பூசணிக்காய்  உடைந்து சிகப்பு நிறத்தில் நிறைந்து கிடக்கும். அதில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் மோட்டர் சைக்கிள் நிகழ்வுகள் சரவ சாதாரனமாகும்.


அப்படி  நகைக்கடைத்தெருவில், ஒரு கடையில் அம்மாவாசையன்று பூசணிக்காய் உடைத்த ஒருவர்மீது 2 கடை  தள்ளியிருக்கும் மற்றொரு கடைக்காரர் பஞ்சாயத்து கொடுத்தார். இவர் உடைத்த பூசணிக்காயின் ஒரு துண்டுபகுதி எனது கடைக்கருகில் விழுந்தது, அவர்கழித்த திருஷ்ட்டியானது அந்த பூசணிக்காய் துண்டுவழியாக எனது கடைக்குள் வந்து எனக்கு வியாபாரத்தில் நட்டம் ஏற்ப்பட்டுவிட்டது,, அதற்கு ஈடாக 1 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று பிராது கொடுத்தார். பஞ்சாயத்து தலைவர்களும் சரிப்பா அவன் கேட்பது நியாயம்தான், 1 லட்ச ரூபாய் கொடுத்துவிடு என்று அறிவுறுத்தினார்கள்(தீர்ப்பு இல்லை).


 கடைக்காரரோ அரண்டுபோய் , யோவ் நானே வியாபாரம் சரியில்லை என்று கவலைபட்டுப்போய் பூசனிக்காய் உடைத்தேன், அதற்கு இன்னொரு கஷ்ட்டமா? முடியாது என்று சொல்லிவிட்டார்.

வழக்கு தொடுத்தவரோ, அடிக்கடி கடைக்கு சென்று தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார், சம்பளத்திற்கு ஆள்வைத்து நிதானமின்றி கடைக்குமுன் சலம்பல்கள் செய்ய வைத்தார். அடிக்கடி பஞ்சாயத்து விசாரனைகள் வந்தவன்னம் இருந்தன.


இறுதியில், பஞ்சாயத்து தலைவர்கள், மிகவும் இறங்கி கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர், சரிப்பா இவன் அடியாள் வைத்தெல்லாம் செலவுசெய்துவிட்டான், ஒரு பத்தாயிரமாவது கொடுத்துவிடு என்றனர். அந்த கடைக்காரரோ என்னடா வம்பா போச்சே, சரி இவனுகளிடம் மல்லுகட்ட முடியாது என்று முடிவிக்கு வந்து ஐந்தாயிரம் ரூபாய் தருகின்றேன் முடித்துவிடுங்கள் என்றார். வழக்கு தொடுத்தவரும் வந்த வரைக்கும் லாபம் என்று 5000 ரூபாய் பெற்று வழக்கை முடித்துக்கொண்டார்.

இதைபற்றி கேட்டால் இன்றும் உசிலையில் அனைவரும் சிரிப்பாக நினைவுகூர்வார்கள்.

அதே நிகழ்வு இப்பொழுது பஞ்சாயத்து கொடுத்தவர் இரேல், பஞ்சாயத்து தலைவர் அமெக்கா, தலையெழுத்தே என்று தண்டம் கட்டியது ஹிரான் நாடு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Sunday, January 04, 2026

My Midway moment

 #mymidwaymoment

6 வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த திரைப்படம் Midway , இரண்டாம் உலகப்போர் குறித்த எந்த ஒரு திரைப்படத்தையும் விட்டு வைப்பதில்லை.அதிலும் விமானம் தாங்கி கப்பல் குறித்த படமென்றால் மிகவும் விரும்பி பார்ப்பேன். Pearl Harbor, Behind Enemy Lines, Top Gun வரிசையில், Midway திரைப்படம்.


 விமானம் தாங்கி கப்பலின் பிரமாண்டத்தை திரைப்படத்தில் பார்த்தாலே இப்படியிருக்கின்றதே நேரில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று நினைத்ததுண்டு. சாண்டியாகோ நகரில் CV-41 விமானம் தாங்கி கப்பலானது பொது மக்கள் பார்வைக்கு போர் விமானங்களுடன் இருக்கின்றது என்று கேள்விப்பட்டிருந்தேன். இந்த விடுமுறையில், அங்கு சென்றபொழுது அந்த கப்பல் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்து பிரமிப்பின் உச்சதிற்கே போய்விட்டேன்.


இந்த கப்பலுக்கு Midway என்று பெயர்வந்த காரனமே  சுவாரசியமானது.


விரிவான பதிவை படிக்கும் ஆர்வமும் பொறுமையும் உள்ளவர்கள் தொடருங்கள்.


நான் பார்த்த நாட்டு மக்களிலேயே ஜப்பான் நாட்டு மக்கள்தான், அமைதியான, மிகப்பண்பான, பிறருக்கு உதவும் மனப்பான்மை பெரிதும்கொண்ட, பிறரது அந்தரங்களை மிகவும் மதிக்கக்கூடியவர்கள்.


நமது உடல்மொழியானது பிறரை சங்கடப்படுத்திவிடுமோ என்று பயப்பட்டு கூட, தங்களை வருத்திக்கொள்ளும் ஒரே மக்கள் ஜப்பான் நாட்டுமக்கள் ஆவர்.


இவர்கள் எப்படி இரண்டாம் உலகப்போரில் இப்படி ஆக்ரோஷமாக நாடு பிடிக்கும் ஆசையில், கொலைவெறியுடன், மனிதப்பன்புகளை மதிக்கமல் ஆடித்தீர்த்தனர் என்று ஆச்சரியமாக இருக்கின்றது.  (ஆமாம் நம்ம சோழ மன்னர்கள்கூட நாடுபிடித்தவர்கள்தானே).


இரண்டாம் உலகபோரைபற்றிய நிகழ்வுகள் பேசித்தீராது,


பெரும்பான்மையான ஆசிய நாடுகளை போரிட்டு பிடித்த ஜப்பான், இந்தியாவை பிடிக்க முடியாமல் அடிவாங்கிஓடியது. 2ம் உலகப்போரில் ஈடுபட்ட மிகப்பெரிய குழுவானது இந்திய மக்கள்தான். பிரிட்டீஷ் அரசின் விடுதலை உறுதிமொழியினால்  25 லட்சம் இந்தியர்கள் ஈடுபட்டனர். 1944 ம் ஆண்டு நடந்த Battles of Imphal and Kohima என்ற போர் மனிப்பூர் பகுதியில் நடைபெற்றது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், ஜப்பான் படையினருடன், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசியப்படையும் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக போரிட்டது.

 இந்தியாவின் சுதந்திரம்வேண்டி ஜப்பான் நாட்டிடம் பேசி, இங்கிலாந்து அரசை வெளியேற்ற ஒப்பந்தம்போட்டு வந்தார். அவரது படையை, இந்தியர்களை வைத்தே அழித்தொழித்தது இங்கிலாந்து அரசு.


ஜப்பான் படையினர், ஒவ்வொரு நாட்டிலும் லட்சக்கனக்கான மக்களை கொன்றூ குவித்து, பதின்ம மற்றும் இளவயது பெண்களையெல்லாம் கடத்தி வந்து பாலியல் அடிமைகளாக ஜப்பானிய வீரர்களுக்கு அளித்தது. இன்னுமும், சீனா, கொரியா, கம்போடியா, தைவான், இந்தொனேஷியா, சிங்கப்பூர் மற்றும் பல நாட்டு மக்கள் ஜப்பானை உள்ளப்பூர்வமாக வெறுக்கின்றனர். ஆசிய பகுதிகளில் கோர தாண்டவமாடிய ஜப்பான், தனது பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்த நினைத்து பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளை கைப்பற்ற நினைத்ததுதான் அதற்கு வினையாகிப்போனது,


1945 ல் அமெரிக்கா அனுகுண்டு போடுவதற்கு முன்னமே 1942ல் மிட்வே (Midway) (ஜப்பனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பசிபிக் க்டலில் உள்ளதால் அந்த பெயர்)  எனும் தீவினை கைப்பற்றூம் முயற்சியில் செம்ம அடி வாங்கியது ஜப்பான். 6 மாதத்திற்கு முன்னர் பேர்ல் ஹார்பர் தக்குதலில் வெற்றி பெற்ற மமதையுடன் அடுத்து இருக்கும் மிட்வே தீவினை கைப்பற்ற , ஒரு தந்திர திட்டம் தீட்டினர். அலாஸ்கா பகுதியில் இருக்கும் ஒரு தீவினை தாக்கும்படி சிறிய படையை அனுப்பி, அமெரிக்க ரானுவத்தின் கவனத்தை  திசை திருப்பி, அசந்த நேரத்தில், மிட்வே யை தாக்கி பிடிக்குமம் உத்தி அது.


ஆனால்,அந்த திட்டத்தின் செய்தி பரிமாற்றத்தினை அமெரிக்க ரானுவ உளவுத்துறை இடைமறித்து குத்துமதிப்பாக அறிந்து தனது படைகளை மிட்வேயிலேயே வைத்திருந்து ஜப்பான் படைகள் வந்தவுடன், தாக்கி அழித்தனர்.


அழிவு என்றா சாதாரன அழிவு அல்ல, 4 பெரிய விமானந்தாங்கி கப்பல்கள் உள்பட பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் ஜப்பானுக்கு ஏற்ப்பட்டது.


அந்த வெற்றியின் நினைவாகத்தான்,  அதன் பிறகு கட்டுமானம் செய்யப்பட்ட  CV-41 விமானம் தாங்கி கப்பலுக்கு USS Midway (CV-41) என்று பெயரிட்டனர். 50 வருட பணிக்கு பிறகு அது பொது மக்கள் பார்வைக்கு காட்சியாக கலிபோர்னியாவின் சாண்டியாகோ நகரில் கம்பீரமாக நிற்க்கின்றது


மிட்வே தாக்குதல் குறித்த தகல்களை படித்து பிறகு 2019 ல் வந்த Midway திரைப்படத்தை பாருங்கள். இறுதி காட்சிகள் மிக நெகிழ்வாக இருக்கும். பரபரப்பான பேர்ல் ஹார்பர் தாக்குதல் காட்சியும் இதில் இருக்கின்றது.