உசிலம்பட்டியில் பூசணிக்காய் பஞ்சாயத்து என்பது மிகவும் பிரபலமான மற்றும் நகைச்சுவையான ஒரு நிகழ்வாகும். அம்மாவாசை நாளில் கடையடைக்கும் பொழுதில் , கற்பூரம் ஏற்றி, சாமிகும்பிட்டு கடைவாசலில் பூசணிக்காய் உடைப்பது பெரும்பாலோரின் வழக்கம் ஆகும். தெருவெங்கும் குங்குமம் தினிக்கப்பட்ட பூசணிக்காய் உடைந்து சிகப்பு நிறத்தில் நிறைந்து கிடக்கும். அதில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் மோட்டர் சைக்கிள் நிகழ்வுகள் சரவ சாதாரனமாகும்.
அப்படி நகைக்கடைத்தெருவில், ஒரு கடையில் அம்மாவாசையன்று பூசணிக்காய் உடைத்த ஒருவர்மீது 2 கடை தள்ளியிருக்கும் மற்றொரு கடைக்காரர் பஞ்சாயத்து கொடுத்தார். இவர் உடைத்த பூசணிக்காயின் ஒரு துண்டுபகுதி எனது கடைக்கருகில் விழுந்தது, அவர்கழித்த திருஷ்ட்டியானது அந்த பூசணிக்காய் துண்டுவழியாக எனது கடைக்குள் வந்து எனக்கு வியாபாரத்தில் நட்டம் ஏற்ப்பட்டுவிட்டது,, அதற்கு ஈடாக 1 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று பிராது கொடுத்தார். பஞ்சாயத்து தலைவர்களும் சரிப்பா அவன் கேட்பது நியாயம்தான், 1 லட்ச ரூபாய் கொடுத்துவிடு என்று அறிவுறுத்தினார்கள்(தீர்ப்பு இல்லை).
கடைக்காரரோ அரண்டுபோய் , யோவ் நானே வியாபாரம் சரியில்லை என்று கவலைபட்டுப்போய் பூசனிக்காய் உடைத்தேன், அதற்கு இன்னொரு கஷ்ட்டமா? முடியாது என்று சொல்லிவிட்டார்.
வழக்கு தொடுத்தவரோ, அடிக்கடி கடைக்கு சென்று தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார், சம்பளத்திற்கு ஆள்வைத்து நிதானமின்றி கடைக்குமுன் சலம்பல்கள் செய்ய வைத்தார். அடிக்கடி பஞ்சாயத்து விசாரனைகள் வந்தவன்னம் இருந்தன.
இறுதியில், பஞ்சாயத்து தலைவர்கள், மிகவும் இறங்கி கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர், சரிப்பா இவன் அடியாள் வைத்தெல்லாம் செலவுசெய்துவிட்டான், ஒரு பத்தாயிரமாவது கொடுத்துவிடு என்றனர். அந்த கடைக்காரரோ என்னடா வம்பா போச்சே, சரி இவனுகளிடம் மல்லுகட்ட முடியாது என்று முடிவிக்கு வந்து ஐந்தாயிரம் ரூபாய் தருகின்றேன் முடித்துவிடுங்கள் என்றார். வழக்கு தொடுத்தவரும் வந்த வரைக்கும் லாபம் என்று 5000 ரூபாய் பெற்று வழக்கை முடித்துக்கொண்டார்.
இதைபற்றி கேட்டால் இன்றும் உசிலையில் அனைவரும் சிரிப்பாக நினைவுகூர்வார்கள்.
அதே நிகழ்வு இப்பொழுது பஞ்சாயத்து கொடுத்தவர் இரேல், பஞ்சாயத்து தலைவர் அமெக்கா, தலையெழுத்தே என்று தண்டம் கட்டியது ஹிரான் நாடு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.