கல்வி தேவையா?. SIN, COS TAN போன்ற கணக்கீடுகள் னது வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும்பொழுது அதை எதற்க்காக படிக்கவேண்டும் போன்ற கேள்விகள் சங்கித்தனமான பரப்புரைகள், பிக்பாஸ் மற்றும் நீயா நானா புண்ணியத்தில் மக்களிடையே விவாதப்பொருட்கள் ஆகி இருக்கின்றன.
மொழி, அறிவியல், கணக்கியல் போன்ற தொழில்முறை அல்லாத பொதுக் கல்வியில் கற்ற வித்தைகள் வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ யாரும் பயன் படுத்தப்போவதே இல்லை என்றுதான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
கூட்டமாக தத்தனித்தனி இனமாக வாழ்ந்து மற்ற இனத்தினை சண்டையிட்டு அழித்து பொருட்களை கொள்ளையிட்டு வாழ்ந்திருந்தத மனித இனம்.
சண்டையிடுவது தவறு, இன்றைக்கு இருக்கும் உணவு எத்தனைபேருக்கு இத்தனைநாள் தேவைப்படும் எவ்வளவு சேமித்துவைக்கவேண்டும். மற்றும் உணவை நாமே எப்படி தயாரிக்கலாம் என்றல்லாம் எண்ணி நாகரீக முன்னேற்றம் அடைந்ததெல்லாம் என்னவென்று நினைக்கிண்றீர்கள்?
சமூகவியல், கணக்கியல், அறிவியல் போன்ற கல்விகளினால்தான் நிகழ்ந்தது இது என்பதுதான் உண்மை..
இதெல்லாம் பொது அறிவுதான் இதை கல்வி என்று சொல்ல முடியாது என்று நினைப்பீர்களேயானால் அது தவறு.
பொது அறிவு கொண்ட ஒருவர் அவைகளை மற்றவருக்கு அறிவுறுத்தி கடத்தினால் மட்டுமே இது செயலாக்கம் ஆகும். அந்த அறிவுறுத்தல் என்பதுதான் கல்வி ஆகும்.
கல்வியானது தேடும் ஆர்வத்தை உண்டாக்கி, சிந்திக்கும் சக்தியை அதிகரித்து , குழப்ப சிக்கலுக்கு தீர்வு காணவும் , புதிய உத்திகளை உருவாக்கவும் கற்றுத்தருகின்றது. எந்த ஒரு தொழிலுக்கும் இவைகள் மூன்றும் தேவைதான்.
கல்வி என்பது மிக முக்கியமானது ஆகும். விவசாயம் செய்பவர்களும் வியாபாரம் செய்பவர்களும், கண்டவர்கள் பேச்சை கேட்டு கல்வியை கைவிடல் ஆகாது.
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
பள்ளிப் படிப்பு அல்லது கல்லூரி படிப்புக்குப் பிறகுதான் நமக்குள் என்ன ஆர்வம் இருக்கின்றது என்று தெரியும். அதன் பிறகு அதற்க்கு தகுந்த தொழில் கல்வியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
அப்படி சிரமப்பட்டு படிக்கவேண்டுமா என்றால் இல்லைதான். முடிந்த அளவிற்கு சற்று முயற்சி செய்யத்தான்வேண்டும்.
என்னதான் செய்தாலும் நமக்குள் இருக்கும் ஆர்வத்தை அறிந்துகொள்ளலாமே தவிர நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மையான திறமையை அந்த கடவுள் தவிர யாராலும் அறியமுடியாது.எனக்குத்தெரிந்து இந்த உலகில் தான் கொண்ட திறமைக்கேற்ற தொழிலை பெற்றவர்கள் இரண்டே பேர்தான்,
1). இளையராஜா
2). பீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குனர்)
இரண்டு கேள்விகள் உங்களுக்கு
1).அணில் அம்பானி மகனுக்கு கல்வி தேவையா?
2). SIN, COS கணக்கீடுகளை வாழ்க்க்கையில் போட்டுப்பார்காத மனிதனே இவ்வுலகில் இருக்கமுடியாது. வாழ்க்கை தேவைக்கு நீங்களும் போட்டுத்தான் இருக்கிறீர்கள் எப்படியென்று தெரியுமா?
Friday, November 03, 2023
கல்வி தேவையா?.
Sunday, July 09, 2023
தமிழ் மன்றம் இளசு அண்ணா
உயிர் வாழ்தல் எனும் நோக்கத்தை அடுத்து தேடுதல் என்பது மனிதனின் முக்கியமாக இருக்கின்றது. எத்தனையோ தேடல்கள்,
எந்த ஒரு கதையையும் (நாவல், சிறுகதை, திரைப்படம்) பார்த்தால் அதன் மூல முக்கிய கருவானது தேடலாகத்தான் இருக்கும். மனிதனின் இந்த தேடலை அருமையானதொரு வியாபார உத்தியாக்கி வெற்றிகொண்டது கூகிள்.
பலவகை தேடலில் சுவாரசியமானது, நேரில் பார்க்காத ஒருவரை அவரைப்பற்றிய கேள்விகளினால் தேடுவதாகும்,
சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தில் தேன்மொழி என்பவரை பற்றி அனைவரும் சிலாகித்து பேசுவதை கேட்கையில் அவரை சந்திக்கத்துடித்து தேடியலைந்து தன வாழ்க்கையை தொலைத்து பின்னர் எப்படி வாழ்க்கையை சரி செய்கின்றார் அந்த கதாநாயகன் என்ற கதை.
மாறா திரைப்படத்தில் கதாநாயகன் சுவற்றில் வரைந்த ஓவியங்களை கண்டு பிரமித்து, வரைந்தவரின் உள்ளக்கிடக்கை எப்படிப்பட்டதாக இருந்தால் இப்படி ஒரு ஓவியமாக வரும் என்று அவரை சந்திக்க தேடியலைந்து கண்டுபிடித்து சேரும் அந்த கதாயாயாகியின் கதை.
Wicker Park திரைப்படத்தில் திருமணமான விளம்பர நிர்வாகி ஒருவர் தற்செயலாக பார்க்கும் ஒருபெண் தனது பழைய காதலி இருப்பதால் அவரை வெறித்தனமாக தேடியலைந்து சந்திக்கும் கதை .
வெற்றிவிழா திரைப்படத்தில் சுயத்தை தொலைத்து தன்னையே தேடியலைந்து அறியும் கதாநாயகனின் கதை.
(இன்னும் பல)
இவைகள் போலவே எனக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது.
ஆமாம் நானும் இளசு அண்ணா என்பவரை தேடியலைந்து இன்றுவரை சந்திக்காமலும் இருக்கின்றேன். நான் மட்டுமல்ல என்னைப்போல நூற்றுக்கணக்கணவர்கள் தேடியலைந்து கொண்டுதானிருக்கின்றனர்.
2000ம் ஆண்டு வாக்கில் , முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் அதிகம் இல்லாத நாட்களில் http://tamilmantram.com/ தளம்தான் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. துபாய் , அமெரிக்கா , ஜப்பான் , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , டென்மார்க் (இன்னும் பல ) நாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்றிருந்த தமிழர்களை இணைத்த அந்த தமிழ் மன்றத்தில் குழு தலைவராக இருந்தவர்தான் இளசு அண்ணா . நேரில் சந்திக்காத, முகமறியாத ஒருவர் எப்படி நூற்றுக்கணக்கணவரின் அன்புக்குரிய அண்ணனாக ஆகா முடியும்?
முடியும்தான். நான் கீழே கொடுத்துள்ள இணைப்பினை பாருங்கள் அவரை காணாமல் துடித்து போன தம்பி தங்கைகளின் பதிவுகள்.
நான் குடும்பத்தை பிரிந்து 2004ம் வருடம் ஜப்பான் நாட்டிற்க்கு சென்றபொழுது பிரிவுத்துயர் மற்றும் குடும்ப நோயினால் பாதிக்கப்பட்டு மனம் குழம்பிஇருக்கையில்தான் இளசு அண்ணா அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் தமிழ் மன்றத்தில் கிடைத்தது. அவரும் புலத்தினை பிரிந்தது இங்கிலாந்தில் பணியாற்றுவதாக சொன்னார். ஆனால் உண்மை பெயர் மற்றும் தொடர்பு விவரத்தை தரவேயில்லை. உடன் பிறந்த அன்னான் போல என்பால் அக்கரை கொண்டிருந்தார்.
அவர் என்னை மிகவும் பாதித்தது ஒரு உரையாடலில்தான்.
மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை உண்டா என்ற தலைப்பிலான விவாதத்தில் நான் ஒரு பதிலிட்டிருந்தேன்.
அதைக்கண்டு வியந்த இளசு அண்ணா அவர்கள் ஒரு அறிவியல் கோட்பாட்டினை சொல்லி , இப்படிப்பட்ட ஒரு சிக்கலான அறிவியல் கோட்பாட்டினை இப்படி எளிதாக விளக்கிவிட்டீர்களே இந்த புதிரை விடுவித்த அந்த உலகப்புகழ் பெற்ற அறிவியல் வித்தகர்கூட குழப்பமான விளக்கம்தான் தந்திருந்தார் என்று வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.
நான் திடுக்கிட்டு போய்விட்டேன். அந்த அறிவியல் கோட்பாட்டினை படித்து பார்த்து வியந்தேன், அப்படியே நான் நினைத்தது போலவே இருந்தது. அப்பொழுதுதான் எனக்குள் இயற்பியல் அறிவு தொடர்பான சிந்தனைகளும் இருக்கின்றது என்று உணர்ந்தேன். அது குறித்த ஆராய்ச்சியில் இன்னும் இருக்கின்றேன்.
அது குறித்து பின்னர் விளக்குகின்றேன்.
இங்கே பாருங்கள் இளசு அண்ணா குறித்து மற்றவர்களின் தேடல் மற்றும் கோரிக்கைகள் .
http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5344.html
இதில் பாருங்கள், அவர் திரும்ப வருவதாக அறிவித்த பின் மற்றவர்களின் பதில்களை
Sunday, June 25, 2023
திரைப்படங்கள் என்பன ஒரு கருத்தியலை போதிக்கும் ஊடகம்தான் , வரலாற்றை திரித்து கூறும் மற்றும் தவறாக வழிநடத்தும் உள்நோக்கத்தோடோ இருந்தால் கண்டிப்பாக அது எதிர்க்கப்பட வேண்டியதுதான்.
இவைநீங்களாக படைப்பாளிகளின் படைப்பாற்றல்கள் ஒன்றுகூடி சங்கமித்து அருவியாக கொட்டும்பொழுது அதை கிடைக்கும் அனுபவம் மனிதனுக்கு வேறு எதிலும் கிடைக்காது.
தேவர் மகன் படத்தில் அப்படி திரித்துக்கூறப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய காட்சிகள் இல்லை. சாதிப்பெருமை பேசும் திரைப்படம் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. ஆமாம், குறிப்பிட்ட சாதி பற்றிய படம்தான் அது. சமூகத்தில் ஒரு குழுக்களைப்பற்றி எடுக்கப்பட்ட எத்தனை திரைப்படங்களை கண்டு கழித்து ரசித்திருந்திருக்கின்றோம்?
"the last samurai " திரைப்படத்தில் ஜப்பான் நாட்டில் இருந்த சாமுராய் கள் வீர தீரங்கள் குறித்து சிலிரித்துப்போய் பார்த்திருந்தோம்?
"inglorias basterds" திரைப்படத்தில் யூத குழு வீரர்களின் திறமைகளை பார்த்து பாராட்டியிருக்கின்றோம்.
இப்படி பல படங்கள் உள்ளன.
இன்றும் அமெரிக்க அருங்கட்சியகங்களில் குழுக்களாக வாழ்ந்த மக்களின் வாழ்க்க்கைமுறை , உள் சண்டைகள் மற்றும் உள்நாட்டு சண்டைகள் குறித்து அறிந்து வியக்கின்றோம்?,
அதை சுவைபட ஒரு இட்டுக்கட்டி கதைமூலம் சொல்லுவது என்பது சாதாரணமானது அல்ல. அதை திறம்பட மற்றும் செவ்வனே செய்து மக்களின் மனதில் சேர்ப்பதில் மாபெரும் வெற்றியாளனாகத்தான் கமல் ஹாசன் அவர்கள் இருக்கின்றார்.
இன்னொருபடமான விருமாண்டி .
சண்டியர் என்ற பெயரை கிருஷ்ணசாமி விரும்பாததால் பெயர் மாற்றப்பட்ட படம். தென் மாவட்டங்களில் ஒரு மக்கள் பாத்திரம் கொண்டுள்ள பெயர். மற்ற மாவட்டங்களில், மைனர், தல , என்று பல பெயர்களில் உள்ளது.
இந்த சண்டியர் கதாபாத்திரமானது மற்ற மாவட்டங்களில் எப்படியோ தென் மாவட்ட கிராமங்களில் ரெம்ப வேறு மாதிரியானது.
எதிலும் அடங்காமல் சண்டித்தனம் பண்ணுவதை யாருமே கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதுதான் சிறப்பு.
எங்க ஊர் உசிலம்பட்டி ஆனதுதான், சுற்றியுள்ள 48 கிராமங்களுக்கும் டவுன். அங்கிருந்து வரக்கடைசியில் பொழுது களித்து கழிக்க உசிலம்பட்டி வரும் கிராம சண்டியர்கள் தங்களது அடிப்பொடிகள் நண்பர்களுடன் வருவார். தங்கள் ஊரு நினைப்பிலேயே சண்டித்தனம் செய்து, ஓட்டல்கள், திரையரங்கில், கடைகளில் , மது கக்கடைகளில் ஓரண்டியிழுத்து அடிவாங்குவார்கள், இறுதியில் , நான் யார் தெரியுமா என்று சொல்லி தாட்டியம் காண்பிக்கையில், ஓ , பள்ளப்பட்டி சண்டியனா , சரிப்பா விடுப்பா , சரி போங்கப்பா எல்லோரும் என்று சொல்லி களைந்து போவர். இது ஒரு சாம்பிள்தான்.இதோபோக, நகரம், கிராமம், குக்கிராமம் போற இடங்களுக்கு தகுந்தவாறு சண்டியத்தனம் இருக்கும்.
விருமாண்டி, கிழக்கு சீமையிலே பாண்டியன், எங்க சின்னராசா படத்தில், பாக்யராஜுக்கு மாமா பையன், போன்ற மற்றும் பலதரப்பட்டிய சண்டியர்கள் மதுரை & தேனி மாவட்டங்களில் உள்ளனர்,
இதில் என்ன திரைப்பட பெயர் பிரச்சினை என்கிறீர்களா?
இந்த சண்டியர்கள் எல்லாம் குறிப்பிட்ட அந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் இருக்கமுடியும். மாரிசெல்வராஜ் , கிருஷ்ணசாமி (இவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும்தான்) எல்லோருக்கும் இந்தப்பெயர் ஆனது அந்த சாதியின் வீரத்தை தூக்கி மற்றவர்களின் துன்ப குமுறல்களை இயலாமையாக காட்டுகின்றதே என்ற கோபம்தான்.
ஆனாலும், கமல் ஹாசன் அவர்களின் இத்திரைப்படங்கள் எல்லாம் பல்சுவைகொண்ட தரமான ஆவணங்கள்தான். மாறாக எந்தவிதமான கெட்ட விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதுதான் எனது எண்ணம்.
மாரி செல்வராஜ் அவர்களே அதற்கு சரியான உதாரணம். கமல் ஹாசன் அவர்களின் படைப்பு எவ்வளவு யதார்த்தமாக இருந்திருந்தால், மாரிசெல்வராஜ் அவர்கள் அதை உள்வாங்கி தன்னை மேம்படுத்தி, பெரிய தேவர் இருக்கும் இடத்தில் எனது தந்தையை கொண்டுவரவேண்டுமென்று வடிவேலுவை அங்கு நிறு த்தியிருப்பார்.
கமல்ஹாசன் அவர்களுக்கு சபாஷ். அவருக்குத்தான் உண்மையில் வெற்றி.
Friday, October 14, 2022
"out of box thinking" எனும் சொற்றொடர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆக்கப்பூர்வமாக , புதுமையான வழியில் , நூதனமான வழியில் மற்றும் ஒரு விதிகளுக்குட்படாமல் சுதந்திரமாக சிந்தித்து தீர்வு கானல் அதுதான் "out of box thinking" என்று புரிந்திருப்பீர்கள் மற்றும் அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் அதுவல்ல. தமிழில் "நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்" மற்றும் "குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுதல்" என்ற சொலவடைகள் உள்ளன. இவைகள்தான் "out of box thinking" இன் அடிப்படை . ஆமாம், நிழலிலேயே இருந்ததால் அதன் அருமை தெரியாது. வெளியே வெயிலுக்கு வந்தால்தான் நிழல் எப்படிப்பட்டது என்று புரியும். இந்த உலகத்தைப்பற்றி அனுபவித்து , மகிழ்ந்து, ஆச்சரியப்பட்டு , புகழ்ந்து எத்தனையோ கவிஞர்கள் எழுதிய கவிதைகளை படித்திருப்பீர்கள். அவற்றில் பாரதியார் கவிதை முற்றிலும் மாறுபட்டு "out of box thinking" வழியில் இருக்கும் . ஆமாம், நான் இந்த பூமி இப்படிப்பட்டது , நான் இப்படியிருக்கின்றேன் என்று பூமிப்பந்ததுக்குள் இருந்துகொண்டே சிலாகித்து எழுதும் கவிஞர்களிடையே , பூமிக்கு வெளியே வந்து பூமியை ஒரு மேசைமீது இருக்கும் பொருளாக ஆக்கி அதை உருட்டி புரட்டி பார்த்து அதிசயப்பட்டு பாரதியார் எழுதிய கவிதைதான் "நிற்பதுவே நடப்பதுவே" . இளையராஜா அவர்கள் அதறகு அருமையாக இசை அமைத்து அப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார். (https://www.youtube.com/watch?v=84KN3uvBnFE) ஆகவே ஆக்கத்தின் விளைவானது நாம் எந்த சூழல், மற்றும் எந்த முன்நோக்கில் இருக்கின்றது என்பதைப்பொறுத்துதான் அமையும். சொல்ல வந்த விசயத்திற்கு , தேவைக்கு அதிகமாகவே பில்டப் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கின்றேன். இந்து மதத்திற்குள்ளே இருந்த வரையில் ஒரு வெறியனாக இல்லாவிட்டாலும், அதீத பற்று கொண்டிருந்த நான், வெளிவட்டத்திரு வந்த அப்புறம்தான் அதுப்பறிய உண்மைகள் புலப்பட்டன. ஹாலிவுட் திரைப்படங்களில், கிரேக்க, எகிப்து , சீன, ரோமானிய , ஏன் ஜப்பானிய புராணங்கள் கூட ஆர்வமாக எடுக்கப்படும் சூழலில் , இந்திய புராணக்கதைகள் என், அந்த அளவிற்க்கு ஆர்வம் காட்டப்படவில்லை? ராமாயண கதைகள் இந்தியாவைத்தாண்டி கிழக்காசிய நாடுகளிலும் தனித்தனி கதைகளாக பிரபலப்பட்டிருந்தாலும், உலக திரைப்படத்தினை ஈர்க்கவே இல்லை . என்? "out of box thinking" வந்தப்புறம் தெரிகின்றது, இவர்கள் இதைச்செய்யணும் இவர்கள் இதைச்செய்யக்கூடாது என்று இலக்கணம் வகுத்து நம்மை ஆதிக்கம் செய்ததுபோல பிரபஞ்சத்தின் முதல் ஆகாய விமானம் இந்து புராணத்தில் உள்ளது, முதல் பிளாஸ்டிக் சர்ஜரி யானது விநாயகர் தலை மாற்றம் ஆகும் இது குறித்து இந்து புராணத்தில் உள்ளது. கம்பியூட்டருக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் . உலகின் முதல் கற்பாலம் காட்டியது அனுமன் சேனைகள். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு நேரே வருகையில் நாசா சொர்க்கை கோள்கள் செயலற்று நின்றுவிடும். உலகத்தின் புவியீர்ப்பு விசையின் மைய்யமானது சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜ பாதத்தின் கீழே உள்ளது . என்று பலவாறாக புருடா விடுவது இந்து மதத்தைப்பற்றி வெளிநாடுகளில் நகைப்பினைத்தான் உண்டாக்கியிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், வர்ணாசிரம கருத்தியல்கள் இப்பொழுது உலக பல்கலைக்கழகங்களில் விவாதப்பொருளாக ஆகியிருக்கின்றது. மற்ற மதங்களில் அதிசயங்கள் நிகழ்த்தப்படுவது குறித்து நிறைய கதைகள் இருந்தாலும், இந்துமதம் மற்றும் சமஸ்கிருதம் இவைகள் நவீன காலத்துக்கு அறிவியலுக்கே சவால் விடுவது ஒரு வெறுப்பினைத்தான் விதைத்திருக்கின்றது. நான்தான் முன்னோடிஎன்று சொல்லும் தோரணையே நான்தான் மேம்பட்டவன் என்று சொல்லுதலாகும் கிரேக்க புராணங்களில் வரும் கதைகளை உள்ளடக்கினால் மகாபாரதக்கதைகளில் 45% தான் வரும், மகாபாரதம் போல ஆயிரக்கணக்கான புராணங்கள் இந்தியாவில் உள்ளன, ஆனால் கிரேக்க புராணங்கள்தான் உலகில் அதிகம் விரும்பப்படும் புராணமாகும். ஆதிக்கம் மற்றும் மேட்டிமையை விட்டொழித்தால்தான் இந்துமதம் அதன் பெருமையை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும்.
Monday, October 10, 2022
சுவைக்காக சமைத்து சாப்பிட ஆரம்பித்தான் மனிதன் அதன் காரணமாக , செரிமான சக்தி குறைந்துபோபோனது. சிட்டுக்குருவி அலட்சியமாக சாப்பிடும் பச்சரிசியை மனிதன் சாப்பிட்டால் வயிறு இடம் மாறிவிடும்.
பூமியில் வெயில் அதிகமாக விழும் பூமத்திய ரேகை பகுதியில் வாழும் மக்களின் உடம்பில் சூரியஒளியின் வீரியம் அதிகமாக தாக்குவதால் அவர்கள் தோல் கடினமாகி Melaninஅதிகம் சேர்க்கப்பட்டு தோல் கருப்பாக ஆகிறது. அதுபோல மற்ற வெயில் குறைந்த இடங்களில் வாழும் மக்களுக்கு வெயில் வேண்டி, தோல் மிருதுவாக்கப்பட்டு, மெலனின் இல்லாமல் வெளிர் நிறத்தில் தோல் ஆகின்றது.
அமேரிக்கா & ஐரோப்பா நாடுகளுக்கு இடம் பெயரும் இந்தியர்களுக்கு பெரும்பாலும் வைட்டமின்-D குறைபாடு வருவதற்க்கு இதுதான் காரணம்.
ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் வரும் மேற்கோள் "Life will find a way.”
மனிதன் என்னதான் தனது பழக்க வழக்கங்கள்கை மாற்றிக்கொண்டாலும் மனிதவாழ்க்கையானது தனது பயணத்திற்கான பாதையை கண்டுபிடித்து செல்லும்.
பெண்ணானவள் ஆண் சார்பு தேவையில்லை என்ற நிலை கொள்வதாலோ அல்லது ஆண் - பெண் பாலின சமதத்துவ சித்தாந்தத்தாலோ, அல்லது என்ன பழக்க மாறுதல் காரணத்தினாலோ மனித பாலின இயக்கங்களில் ஒரு மாறுதல் வர ஆரம்பித்து இருக்கின்றது.
பெண்தன்மையுடன் பிறக்கும் ஆண் மற்றும் ஆன் தன்மையுடன் பிறக்கும் பெண் , குழந்தையின்மை, கருத்தரிப்பு மருத்துவமனைகளின் வளர்ச்சி இவைகளெல்லாம் மிக சாதாரணமாக இருக்கின்றது.
வெளிப்படையாக தெரியும், தோல் குறைபாடு , பருக்கள், உடல் குறை இவைகள் வந்தாலே மனது என்ன பாடுபடும். எத்தனை பேர் மனமுடைந்து தவறான முடிவுகளை எடுக்கின்றார்கள்.
அப்படியிருக்கையில் பாலின குறைபாடு என்பது எப்படிப்பட்ட மாணவலியை கொடுக்கும்? பெற்றோர்கள், உடன் பிறந்தோர், நண்பர் அனைவரும் எப்படி ஒரு அன்பான ஆதரவினை கொடுக்கவேண்டும் அவர்களுக்கு? ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வாழ்வதுதான் அவர்கள் விதியாக இருக்கின்றது.
ஆனால் இப்பொழுது ஒரு விழிப்புணர்வு வந்து இருக்கின்றது. இவர்களும் சமூகத்தில் சமமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்கள். உள்ளக்கிடக்கினை அப்படியே பகிர உதவும் ஊடகத்தின் அசுர வளர்ச்சிதான் இத்தற்கெல்லாம் முக்கிய காரணம்.
அந்தக்காலத்தில் ஒரு சிலர் சொல்லுவது மட்டுமே மக்களிடையே பரவும், மக்களின் கருத்துக்கள் அதுதான் என்று கற்ப்பிக்கப்படும். ஆனால் இந்தக்காலம் ஊடகத்தின் காலம். மக்களின் உணர்வுகள் எளிதாக உலகம் முழுதும் பரவும்.
"பிக் பாஸ்" போட்டியாளராக ஒரு Transgender நுழையில் அவரை பேசிய பேச்சு சூப்பர். அவருக்கு மேடையும் , களமும் கொடுத்த விஜய் டிவி சூப்பர்.
நான் ஏற்க்கனவே சொன்னது போல நீண்டகால மாற்றத்தில், ஆண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளும் படி இயற்கை மாறும்.ஏனென்றால் "Life Will find Way "
Saturday, October 08, 2022
Wednesday, September 28, 2022
Tuesday, August 08, 2017
சான் பிரான்ஸிஸ்கோ வில் தோன்றிய சிவலிங்கம் (கட்டுக்கதை)
சமீபத்தில்தான் ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இங்கே சான்பிரான்ஸிஸ்கோ வந்திருந்து ஒரு கருத்தரங்கத்தில் பைந்தமிழர்கள் எப்படி கடலோடி உலகத்தை இனைத்து வைத்திருந்தனர் என்று விளக்கினார் ஆகா தமிழண்டா என்ற பரவசத்தில் மெய்மறப்பில் இருந்துகொண்டிருந்தேன்.
இவர் வேறு சிவன் சிலை பற்றி சொல்லிவிட்டார் அதுவும் சான்பிராண்ஸிஸ்கோ நகரானது கடலோரம் மற்றும் ஜப்பானிலிருந்து நேராக கடலில் கிளம்பினால் சான்பிரான்ஸிஸ்கோ வில்தான் நிற்கும். ஆகா நம்மவர்கள் முன் காலத்திலேயே இங்கு வந்து கொடி நட்டுப்போயிருக்கின்றார்கள் போல என்று
எனக்கு பரபரப்பாகி அதுகுறித்து கூகிளில் தேடினேன். முடிவு ச்சீ என்றாகிவிட்டது.
1993ம் ஆண்டு அமெரிக்கவில் சான் பிரான்ஸிசஸ்கோ நகரத்தில் உள்ள கோல்டன் கேட் பூங்கவில் ஓரிடத்தில், தெருக்களில் வாகனங்கள் நுளையாமல் தடுக்கும் கல்லை தேவையற்ற கருத்தில் கொண்டுவந்து போட்டனர். அந்த கல்லும் பார்ப்பதற்கு சிவலிங்கம் போலவே இருந்தது.
அதை தற்செயலாக கண்ட பாபா காளிதாஸ் (இவர் இந்துமதத்தில் விருப்பம் கொண்ட அமெரிக்கர் பெயர் michael-bowen), இதை சிவலிங்கம் என்று அறிவித்தார். அத்ற்கு வார்னிஷ் பூசி பட்டை அடித்து மெருகுபடுத்தி, தானே தோன்றிய சிவலிங்கம் என்று அறிவிப்பு விட்டார்.
விடுவார்களா அங்கே இருக்கும் மூடநம்பிக்கை கொண்ட இந்தியர்கள் உடனே மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து, பூ மாலை போட்டு , பாலாபிஷேகம் செய்து, மனியடித்து பூசை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இது தானாகவே இங்கே தோன்றியது நம்பினர். பக்திப்பரவசத்தில் மெய்மறந்து யார் சொல்லுவதையும் காது கொடுத்துகேட்க மறுத்தனர்.
நாளுக்குநாள் கூட்டம் அதிகமாகிகொண்டே போனது. சிறு கடைகளும் பிச்சைக்காரகளும் கூட ஆரம்பித்தனர். கோவில் கட்டவும் தீர்மானிக்கப்பட்டது..
பூங்காச் சரகர்களும், நகர காவலர்களும் இது வெறும் போக்குவரத்துத் தடைக் கல்தான் இதை விடுவிடுங்கள் என்று சொல்லிப்பார்த்தனர். யாரும் கேட்ப்பதாய் இல்லை. பிறகு அதை அப்புறப்படுத்த தீர்மானித்தனர். பாபா காளிதாஸ் மற்றும் இந்து அமைப்பினரும் அப்புறப்படுத்த மறுத்தனர். விசயம் நீதி மன்றத்துக்கும் போனது.
நீதிமன்றமும் சரி, அவர்களது நம்பிக்கை அப்படியென்றால் விட்டு விடுங்கள் அவர்களே வைத்துக்கொள்ளட்டும், ஆனால் வீடுக்கு எடுத்துக்கொண்டு போய்விடனும், தேவையில்லாமல் பூங்காவை அசிங்கப்படுத்தக்கூடாதுன்னு தீர்ப்பு சொன்னது.
காளிதாஸ் பாபாவும் அதைத் தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று வைத்துக்கொண்டார். அவர் 2009 ம் ஆண்டு இறந்து விட்டார். லிங்கம் என்றழைக்கப்படுகின்ற அந்தக்கலானது அந்த இன்னுமும் அவர் வீட்டிலேதான் இருக்கின்ற மாதிரி தெரிகின்றது.
இந்நேரம் இதுமட்டும் தமிழ்நாடாய் இருந்திருந்தால், பெரிய கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு மோடி வந்திருப்பார்.
இந்த வீடியோவைப்பாருங்கள்
Saturday, January 14, 2017
வெளிநாட்டு தமிழர்களும் ஏன் ஜல்லிக்கட்டு தடையை எதிர்க்கின்றார்கள்?
ஜல்லிக்கட்டு என்பது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம் என்பது கேள்விக்குரியது என்று R.J.பாஸ்கர் இந்தியா டுடே விவாதத்தின் போது நெறியாளர் சொன்னதை எத்துனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை.
தென் தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமே தெரியும் ஜல்லிக்கட்டை தடை செய்ததன் உன்மையான வலி என்பது. நகரங்களிலும், இனையத்திலும் ஏன் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் ஏன் தடையை எதிர்த்துப்போராடுகின்றார்கள் என்று தெரியலையா?
அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றா ? இல்லை?
தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதை எதிர்த்துதான்.
ஜல்லிகட்டை எதிர்க்கும் நான்தான் உன்மையான தமிழன். மாடு பிடிக்கும் காட்டுமிராண்டி தமிழானே இல்லை என்ற கருத்தை நிறுத்தும் அதிகாரத்தை எதிர்த்துதான்.
தமிழர்கள் எங்களுக்கு அடங்கித்தான் கிடக்கனும், நீ என்ன செய்யனும்ன்னு நான்தான் முடிவு பன்னுவேன் எனும் ஆனவத்தை எதிர்த்துத்தான்.
Monday, September 19, 2016
ஒரு கயவனால் ஜப்பானில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் (பாகம் 12)
முதலாம் பாகம் இதிலிருந்து ஆரம்பியுங்கள் [என்னைப்பற்றி (பாகம் 1)
முந்தைய பகுதி இதைப்படித்துவிட்டு இங்கு வரவும். [ ஜப்பான் நாட்டில் வேலை பார்த்த அனுபவம் (பாகம் 11) ]
ஒரு கயவனால் ஜப்பானில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் (பாகம் 12)
நான் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு முன்பே அவன் மற்றும் ராஜூ ஆகிய இருவரும் இங்கு வேலை பார்த்து வந்தனர். அவன் என்னுடன் அண்ணா அண்ணா என்று விளித்து மிகவும் நட்புடன்தான் பழகினான்.
ஒருமுறை நானும் ராஜு வும் அலுவலகம் முடித்து வரும் பொழுது ராஜுவின் மனைவிக்கு அந்நிறுவனத்தில் வேலை வாங்குவது குறித்து பேச்சு வந்தது. நான் சொன்னேன், பிராமணப் பெண்கள் போல துனிச்சலாக யாரும் செயல்பட முடியாது. அவர்கள்தான் கண்கொத்திப் பாம்புபோல காத்திருந்து கிடைக்கும் சந்தர்ப்பத்தை கச்சிதமாக கைக்கொள்ளுவார்கள். அதுபோல உயர்நிலைப்பதவிகளுக்கு பிராமணர்களுடன் யாரும் போட்டியிட முடியாது. அதனை முறியடிக்கும் அனைத்து தந்திரகளும் அவர்கள் அறிவர். என்ற கருத்தில் உரையாடிக்கொன்டிருந்தோம். அதை அனைத்தையும் ராஜு அவனிடம் சொல்லி விட்டார். அதுகுறித்து ராஜு அவனிடம் என்ன சொன்னாரோ இல்லை அவன்தான் தப்பாக புரிந்துகொண்டானோ என்ன இழவோ, அதிலிருந்து என்னை விட்டு விலகத்தொடங்கினான்.
என்னடா நாடு விட்டு நாடுவந்து வேலை பார்க்கின்றோம் இப்படி விலகிப்போய் இருப்பது நல்ல இல்லையே என்று கவலையாகத்தான் இருந்தது ஆனாலும் போகப்போக அதை அலட்சியப்படுத்திவிட்டேன். ஆனால் விலகிப்போனவன் மற்றவர்களிடம் என்னைப்பற்றி அவதூறுகள் பரப்பி, குறுக்கு வழியில் என்னை வேலைவிட்டு நீக்க திட்டமிட்டான். அதையும் செய்தான்.
அவன் ஜப்பானிய மொழி நன்றாக பேசுவான். அதனால் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளிடம் நல்ல தொடர்பில் இருந்தான்.. முதல் கட்டமாக என்னைப்பற்றி தவறான அபிப்பிராயங்களை மற்றவர்களிடம் விதைத்தான். நான் மேலாளராக இருந்ததால் மற்றவர்கள் வேலை பற்றிய எனது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை வாரம் ஒருமுறை மேலான் இயக்குநருக்கு நான் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை எப்படியோ பெற்று மற்றவர்களிடம் காட்டி அவர்களிடம் என்மீது வெறுப்பை உண்டாக்கி என்னை தனிமைப்படுத்தினான். அலுவலகத்தில் ஒருவரும் பேசாதிருந்தால் எப்படி இருக்கும், இருப்பது ஒரு 10 பேர்தான், அதிலும் தமிழ் 4 பேர்தான். எனக்கோ மனைவி பிள்ளைகளை ஊரில் விட்டுவிட்டு தனியே இருக்கும் சூழ்நிலை. வெப்-காமெரா மூலம்தான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தோம். இதில் இவன் கைங்கரியத்தினால் தனிமைப்படுத்தப்பட்டேன். பொருளீட்டும் பொருட்டு வந்த காரனத்தினால் வேலையை விட்டுவிட்டு திரும்ப ஊருக்கு வர மனமில்லை.
நிறுவனமும் சரிவர இயங்குவதுபோல தெரியவில்லை. தேவைகள் குறைந்தாலே நமது முக்கியத்துவமும் குறைந்துவிடுமல்லவா. அதையும் சமாளித்து மற்றும் அவன் எப்படி தொந்தரவு கொடுத்தாலும் அதையும் சமாளித்து இருந்துகொண்டிருந்தேன். என்னடா இப்படி சமாளிக்கின்றானே என்று வேறுவிதமான திட்டங்களை நினைக்கத்துவங்கினான். எங்கள் நிறுவனத்தில் ஒரு சட்டம் உள்ளது, அது என்னவென்றால், உடன் வேலைபார்ப்பவரை மனம் நோகத் திட்டினாலோ அல்லது கைகலப்பில் ஈடுபட்டாலோ வேலையிலிருந்து நீக்கப்படுவர்.
அவன் ராஜுவை பொய் சாட்சிக்கு ஏற்பாடு செய்தான், பிறகு மதிய உணவு சாப்பிடும்போது வம்பிழுத்து கைகலக்கச்செய்து இவைகள் மூலம் என்னை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பத்திட்டமிட்டான். அவன் திட்டமிட்டது போலவே கைகலப்பும் நடந்தது, விசாரனை வந்தது, அவன்தான் முதலில் கைகலப்பில் ஈடுபட்டான் என்று சொன்னேன், நான் அவனது மனைவியைப்பற்றி தவறாகச் சொன்னேன் என்று சொன்னான், ரஜுவும் ஆமாம் என்று சொல்லி அந்த்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்தான். விசாரணை ஓடிக்கொண்டுதான் இருந்தது, இதன் இடையில் நான் ஜப்பானிலேயே வேறு வேலை தேட ஆரம்பித்தேன். ஜப்பானில் வேறு நிறுவணத்துக்கு நினைத்த மாத்திரத்தில் தாவ முடியாது, அதற்கு விசாவும் புதிதாக பெறவேண்டும்.எப்படியோ டோக்கியோ வில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது, ஆனால் விசா மற்ற நீண்ட நாட்கள் ஆகும் போல இருந்தது. விசா மாற்றத்துக்கும் விண்ணப்பித்து இருந்தேன். இவைகள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் செய்துகொண்டிருந்தேன். Engineer விசா இருந்தால் நினைத்த நிறுவனத்தில் சேரலாம். ஆனா எனது விசா "Designated Service" வகையைச் சேர்ந்தது.
இந்த நிறுவனத்தில் இப்பவோ அல்லது அப்பவோ என்று நிலைமை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது.
ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவன் போல இந்த நிறுவனத்தில் இருந்தேன். நிறுவனமும் சரிவர இயங்கவில்லை. நானாக ராஜினாமா செய்யவேண்டும் என்று நினைத்து அதை அனைத்து வகையிலும் வெளிப்படுத்தினர். எனக்கோ இன்னொரு நிறுவனத்தில் வேலை கிடைத்தும் விசா இல்லாத காரணத்தால் உடனே போய் சேர முடியவில்லை. புதிய விசாவும் எப்ப வரும்ன்னு தெரியலை.
மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெப்-கேம் வழியாக பேசும்பொழுதெல்லாம், மிகக்கவலையாக இருக்கும். இந்த நிறுவனத்தில் எனது நிலைமை மிக மோசமாகப்போய்விட்டது. நான் புதிய நிறுவனத்தாரிடம் சொன்னேன், அவர்களும் சரி வந்துவிடுங்கள், ஓரிரு வாரங்களில் விசா வரவில்லையென்றால் இந்தியா சென்று விசா கிடைத்ததும் திரும்ப வரலாம் என்றனர். நானும் மூடை முடிச்சுகளை கட்டிக்கொன்டு டோக்கியோ கிளம்பி விட்டேன். மறுநாள் நிறுவனத்தைவிட்டு ஒரு வாரத்தில் விலகுகின்றேன் இந்தியாவுக்குப்போகின்றேன் என்று சொல்லி ராஜினாமா செய்வதாக சொன்னேன். என்னைத்தவிற அனைவரும் சந்தோசப்பட்டனர்.
அந்த ஒருவாரத்திலும், அவன் என்னைப்பற்றி மேலிடத்தில் சொல்லி நான் பர்த்து வந்த மென்பொருள் புரஜக்க்ட்டின் அனைத்து மடுல் களையும் ஆவணபடுத்தித் தரும்படி நிர்ப்பந்தப் படுத்தப்பட்டேன். அதையும் செய்து முடித்தேன்.
அந்த நிறுவனத்தில், எப்பொழுதும் ஒருமாதச்சம்பளத்தை பிடித்துத்தான் வைத்திருப்பர். வேலை விட்டு போகும்பொழுது எதாவது பிரச்சினை என்றால் அதை ஈடு செய்வதர்காக அப்படி செய்வர். அதனால் அவர்கள் மனம் கோணாமல் நடக்கனும் என்று கவனமாக இருந்தேன். அதை அந்தக் கயவன் சாதகமாக எடுத்துக்கொண்டு மிகவும் தொல்லை கொடுத்தான்.
ஒருவாரம் முடிந்தது, மாலையில் டோக்கியோ கிளம்பத்திட்டமிட்டு இருந்தேன், அதற்கு முன்னர் விசா அலுவலகத்துக்குச்சென்று நிலவரம் என்ன என்று கேட்டேன், அவர்களும் சோதித்துப்பார்த்துவிட்டு விசாவுக்கான ஒப்புதல் கிடைத்துவிட்டது, நாளை அனுப்புவோம் உங்களுக்கு வந்து சேர 3 நாட்க்கள் ஆகும். இல்லையென்றால் நாளை காலையில், அடையாள அட்டை கான்பித்து கையோடு வாங்கிக்கொள்ளலாம் என்றனர். எனக்கு அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது. கடந்த 6 மாத காலங்களாக மனதுக்குள் இருந்து என்னைக் கரைத்த உளைச்சல் எல்லாம் ஒருநொடியில் மறைந்தே போய்விட்டன. உடனே சென்னைக்கு என் மனைவிக்கு போன் செய்து மகிழ்ச்சியான செய்தியை சொன்னேன். 6 மாத காலங்களாக கவலையுடன் சுற்றித்திரிந்த கோபே நகரில் அந்த இரவு முழுதும் ஜாபானிய நன்பர்களுடன் மகிழ்சியாக சுற்றித் திரிந்தேன். மறுநாள் காலையில்விசாவை வாங்கிக்கொன்டு டோக்கியோ சென்றேன். புதிய நிறுவனத்தின் கிளையன்ட் Canon நிறுவனமாகும், டோக்கியோவுக்கு அருகில் Musashi-Kosugi என்ற இடத்தில் பிரமாண்டமான கட்டிடத்தில் வேலை. எனக்கு பிடித்தமாதிரியான வேலை மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
பிடித்து வைக்கப்பட்டு இருந்த 1 மாதச்சம்பளத்தையும் கொடுப்பதற்கு தடைகளும் செய்தான். நான் உண்டாக்கிய ஆவணங்கள் சரியாக இல்லை அதால் மீண்டும் செய்து கொடுத்தால் சம்பளம் கொடுக்கப்படும் என்று அந்நிறுவணத்தில் மொழி பெயர்ப்பாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். எனக்கென்றால் கோபம் ஜிவ்வென்று தலைக்கு ஏறியது. திடீரென யோசனை வந்தது, ஒருநிறுவனத்தைவிட்டு விலகிய பிறகு எக்காரணததிக்கொன்டும் மீண்டும் வேலை செய்யச் சொல்ல மாட்டார்களே, ஒருவேளை நிறுவன உரிமையாளருக்குத் தெரியாமல் மொழிபெயர்ப்பளரை கையில் போட்டுக்கொண்டு அந்தக்கயவன் விளையாடுகின்றானோ?.
நான், அப்படியெல்லாம் வேலை பார்க்கமுடியாது, சம்பளம் கொடுக்காவிட்டல் போங்கள் எனக்கு எப்படி வாங்குவது என்று தெரியும் என்று பதில் அனுப்பிவிட்டேன். பிடித்து வைத்திருந்த சம்பளத்தை ஒரு மாத முடிவில் எனக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
கோபே நகரில் அந்தக்கயவன் எனக்கு இழைத்த மன உளைச்சல்கள் எல்லாம் என் மனதில் பெரும் பெரும் பாறாங்கற்களாக கனத்துக்கொன்டிருந்தன. டோக்கியோ வந்த பிறகு அவைகள் எல்லாம் அப்படியே இலவம்பஞ்சு போல லேசாகி காற்றோடு காறாகப் போயின.
டோக்கியோ நகரில் 3 வருடங்கள் பணியாற்றினேன். Canon நிறுவனத்தில்தான் எப்படி தரமான மென்பொருள் படைப்பது என்பதை கற்றுக்கொன்டேன்.Ichigao என்ற இடத்தில் தங்கி இருந்தேன் அங்கிருந்து இரண்டு மெட்ரோ ரயில்களில் பயணித்து வேலைசெய்யும் இடத்துக்குப்போக 1 மணி நேரம் ஆகும்
Ichigao வில் ஒரு மேன்சனில் தங்கி இருந்தேன், 50 ந்றைகள் கொண்ட அந்த மேன்சனில் பெரும்பாலும் ஜப்பானிய இளைஞர்களும் இளைஞிகளுமே இருந்தனர், நான் மட்டுமே தமிழ், சென்னை மேன்சன் போலத்தான் ஜப்பன் மேன்சனும், ஒருவருக்கொருவர், உதவிக்கொண்டு, இருப்பதைப்ப்கிர்ந்துகொண்டு, ஆடிப்பாடி களித்திருந்தோம், மனைவி குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலைகள் எல்லாம் அந்நன்பர்களால்தான் மறக்கடிக்கப்பட்டன. எனது மனைவியும் இங்கு வந்திருந்து 3 மாத காலங்கள் தங்கியிருந்தார். நானும் ஊருக்கு சென்று வந்திருந்தேன்.
இன்று அமெரிகாவில் குடும்பத்துடன் 9 வருடத்துக்கும் மேலக ஒரு நிறுவணத்தில் வெற்றிகரமாக பணியாறிக்கொன்டிருபதற்கு காரணம் கோபே மற்றும் டோக்கியோவில் பெற்ற அனுபவங்கள் என்றால் மிகையாகாது.
மேன்சன் வாழ்க்கை என்பது எனது வாழ்வின் முக்கியமான பகுதியாகும். உலகத்தினை ஓரளவுக்கு புரிந்திருக்கின்றேன் என்று நம்புவதற்கு மேன்சன் வாழ்க்கைதான் காரனம். எத்துனை விதமான நன்பர்கள் எத்துனை விதமான அனுபவங்கள்.
ஜப்பான் தவிற சென்னை, அமெரிக்கா நாடுகளில் மேன்சன் வாழ்க்கையில் இருந்திருக்கின்றேன் அனைத்து இடங்களிலும் நன்பர்கள் ஒரேமாதிரிதான். உணவு, இன்பம், துன்பம் அனைத்தையும் பகிர்வது உலகம் உழுதும் ஒரே மாதிரிதான். வார இறுதி நாட்க்களில், தத்தம் குடும்பம் மற்றும் நன்பர்கள் பற்றிய நினைவுகளை வாஞ்சையுடன் பகிர்வது இனிமையானதொரு அனுபவம்.
காதல் படத்தில் வரும் "புறாக்கூண்டு போல இங்க 30 ரூமு" பாடல்க் காட்சியினை கானும்பொழுது இன்னுமும் கண்கள் கலங்குவது தவிற்கமுடியலை.
அடுத்து நான் அமெரிக்காவுக்கு வந்த கதை.
Tuesday, September 06, 2016
அறிவியலா.? ஆன்மீகமா - #சன்டிவி பட்டிமன்றம்
Thursday, August 25, 2016
உலகின் முதல் பகுத்தறிவாளன் தோன்றிய ஏதன்ஸ் நகரின் தற்பொழுதைய நிலமை
உலகின் முதல் பளிங்குக் கற்களால் நவீன கட்டுமான உத்தியுடன் 2500 வருடங்களுக்கு முன்னர் ஏதன்ஸ் நகரில் கட்டப்பட்ட பார்த்தனான் கட்டிடத்தை பார்க்க ஆவலாக சென்றிருந்தேன். பார்த்தவுடன் திகைப்பும் சோகமும்தான் கொன்டேன்.
நாமெல்லாம் 1000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலை சிலாகித்துப்பேசுகின்றோம். ஆனால் 2500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட பார்த்தனான் கட்டிடத்தை சிறப்பாகக் கட்டி திறமையை பூரிப்புடன் உலகுக்கு வெளிப்படுத்திய கிரேக்கர்கள் அதை பறிகொடுத்து விட்டு கலைத்திறமைக்கு மைல் கல்லாயிருந்த கட்டிடங்கள், சிற்ப்பங்களை அனைத்தும் தொலைத்து சோகத்துடன் இருப்பதுதான் கொடுமை. தொலைந்தவைகளை தேடிஎடுத்து எழுப்பிக் கொன்டேதான் இருக்கின்றனர்.
பாருங்கள் தற்பொழுதுள்ள கட்டிடத்தில் எத்துனை ஒட்டுக்கள்.
எதீனா எனும் பெண் கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோவில் கட்டிடம் 2ம் நூற்றாண்டிலேயே கிருத்துவ மதவெறியர்களாக் தீக்கிரையாக்கப்பட்டது. பின்னர் கத்தோலிக்க சர்ச் ஆக்கப்பட்டது. அந்தக்காலத்திலேயே க்ரேக்க நாட்டில் பல கலை அம்சங்கள் அழிக்கப்பட்டன. சிலைகள் எல்லாம் உடைத்து எறியப்பட்டன.
பிறகு 12ம் நூற்றாண்டில் இது லத்தீன் சர்ச் ஆக்கப்பட்டது.
பின்னர் 14ம் நூற்றாண்டில் துருக்கி ஓட்டோமன் கிரேக்கத்தை கைப்பற்றி பிரமாண்டமான இந்த கிரேக்கர்களின் கோவிலை, இதை மசூதியாக்கினான்.
16ம் நூற்றான்டில் துருக்கியின் மொரோசினி இக்கட்டிடத்தை வெடிகுண்டு வைத்து தரக்த்தான், கடவுள் சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டன.
ஏதன்ஸ் மக்கள் இதையெல்லாம் வேதனையுடன் பார்த்துக் கண்ணீர் வடிப்பதைத்தவிற ஏதும் செய்ய இயலவில்லை. அன்றிலிருந்த்து அதன் கலைப்பொருக்கள் எல்லாம் திருடு போகத்தொடங்கின.
இங்கிலாந்தின் எழாம் எல்ஜின் இதில் இருந்த பளிக்குச்சிலைகளைஎல்லாம் பெயர்த்து எடுத்து இங்கிலாந்துக்கு கொன்டு சென்றுவிட்டான்.
தற்ப்பொழுது அவைகள் எல்லாம் லண்டனின் பிரிடிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளன. பெரும்பான்மையான சிலைகள் மற்றும் கலைப்பொருட்க்கள் எல்லாம் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகத்தில் உள்ளன.
#ஏதென்ஸ் நகரில்உள்ளனைத்து பழமைகட்டிடங்களிலும் சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு தலைகள் இல்லாமல் உடல்கள் மட்டுமே இருக்கின்றன.
சுயத்தை மற்றும் தங்களது அடையாளத்தை தொலைத்த கிரேக்கர்கள் அதை மீட்டெடுக்க அனைத்து நாடுகளையும் திருப்பிக்கொடுக்கும்பட் கெஞ்சி கேட்டுக்கொன்டிருக்கின்றார்கள்.
இந்த கட்டிடம் கிரேக்கர்களின் வாழ்வினை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கின்றது. ஏதன்ஸ் தெருக்களில் நடந்து செல்லுகையில், சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்ட்டாடில் மற்றும் பலர் நடந்த வீதி அதில் நானும் நடக்கின்றேன் என்று பெருமையாக இருந்தது. உலகிற்கே நாகரீகத்தை, வாழும் கலையை, பகுத்தறிவை போதித்த கிரேக்கம், இப்பொழுது பன்நாட்டு அரசியல் மற்றும் வியாபாரிகளின் சதியால், சுரண்டப்பட்டு பார்த்தனான் கட்டிடத்தை போன்றே சக்கையாக இருக்கின்றது. விவசாயம், மற்றும் மீன்ப்பிடித்தலில் தன்நிறைவு கொன்டிருந்த கிரேக்கம், உலகமயமாக்குதலின் தந்திரமான சதியில் சிக்கி சின்னாப்பின்னமாகிக் கிடக்கின்றது.
இருந்தாலும் தங்களின் சுயத்தை மீட்க்க முடிந்த அளவு போராடிக்கொன்டுதான் இருக்கின்றனர். உலகின் முதல் பகுத்தறிவாளன் சாக்ரடீஸை, இளைஞர்களின் மனங்களை கெடுக்கின்றார் என்று பொய்க்குற்றம் சுமத்தி மரண தன்டனை கொந்து விஷமருந்தி சாகவைத்தனர். அதை இப்பொழுத்து நினைத்துப்பார்த்து வருந்தி சாக்ரடீஸை தலையில் தூக்கி வைத்து கொன்டாடுகின்றனர்.
இதிலும் ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது. திவாலான கிரேக்க தேசத்தின் மக்கள் வாழ்க்கைத்தரம், பொருளாதாரத்தில் ஒளிரும் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தினை விட 20 மடங்கு மேலாகத்தான் இருக்கின்றது.
Tuesday, August 23, 2016
1981 ல் பதின்ம வயதினரை எல்லாம் கடும் காய்ச்சலில் தள்ளிய மேஸ்ட்ரோ இளையராஜ மற்றும் நடிகை ராதா
Monday, August 22, 2016
செவாலியே விருதுக்கு தகுதியான நபர்தான் #கமல் ஹாசன்
காதல் மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் அது, இசை மற்றும் பாடல்கள் சொல்லவே வேன்டாம், மேஸ்ட்ரோ இளையராஜா தான்.
அதுபோல ஒரு படம் #கமல் க்கு வராதா என்று ஏங்கித்தவிக்கின்றேன்.
வியாபாரப் புயலில் அடித்துச்செல்லப்பட்ட கலைப்படகு வேறுவழியில்லாமல் வணிகத்துடுப்போடுகின்றது. கலைத்துடுப்போடும் நாள் எந்நாளோ.
அதுமட்டுமல்லாமல், நகைச்சுவையிலும் நாகேஷுக்கு வாரிசு என்று இவரைச்சொல்லலாம். ராணித்தேனீ என்ற பழைய படத்தில் தனி நகைச்சுவை ட்ராக்கில் வந்து கலக்கி இருப்பார். அது போன்ற தனி நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து நம்மை எல்லாம் இன்புறச்செய்ய வேன்டும் என்று வேன்டிக்கேட்டுக்கொள்கின்றேன்.
Friday, August 12, 2016
பாரீஸ் நகரில் ஒருநாள் நள்ளிரவில். (Midnight in Paris)
பாரீஸ் நகர வீதிகளில் நள்ளிரவில் கதாநாயகன் சுற்றி அலையும் பொழுது ஒவ்வொரு நாளும் காலத்தின் பின்நோக்கி பயனித்து வரலாற்று சிறப்பு மிக்க மனிதர்களை சந்தித்து அளாவளாவி மகிழும் அனுபவம் பெறுவார்.
அதுபோல ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று என்னை ஏங்க வைத்த படம் அது.
5 நாள் இன்பச்சுற்றுலா சென்றிருந்த போது நேற்று கிடைத்தது .
இரவு முழுதும் சுற்றி அலைந்தேன் பாரீஸ் நகரவீதிகளில். கதாநாயகன் ஓவன் சென்ற இடங்கள் நானும் சென்றேன். இரவு சரியாக 12 க்கு ஒரு சர்ச் வாசலில் காத்திருந்து வரும் காரில் ஏறி அந்த உலகத்துக்குள் போவார். நானும் 12 மணிக்கு அங்கு சென்றேன். கார்தான் வரவே இல்லை ஆனால் அந்த ராத்திரி உலாவில் நல்ல நன்பர்கள் நிறையபேர் கிடைத்தனர். நல்லதொரு அனுபவமாக இருந்தது.
Tuesday, July 26, 2016
#கபாலி சாதித்தது பெரும் வெற்றிதான், சந்தேகமே இல்லை.
விளம்பர யுக்திகள், வியாபார தந்திரங்கள், பிரசித்திப்படுத்தும் உத்திகள், டிக்கெட் விலை, படத்தின் தரம், நல்லா இருக்கிறது இல்லை என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், பட வெளியீட்டுக்குப்பிறகு அதன் போக்கு அப்படியே மாறிவிட்டது.
Sunday, July 10, 2016
இந்த பிரபஞ்சம் எப்படிப்பட்டது அதன் தன்மை என்ன?
கருந்துளை என்பது மிக அதிகமான , கணக்கில் அடங்காத புவி ஈர்ப்பு விசை கொன்ட நட்சத்திரத்தினை குறிக்கும்.
அதிகமான நிறை கொண்ட நட்சத்திரம் வெடித்துச்சிதறும்பொழுது அதன் மையப்பகுதி அதிகமான நெருக்குதலுக்கு உள்ளாகி நிறை எண்ணிலடங்கத அளவு அதிகமாகும்பொழுது அது கருந்துளை ஆகின்றது.
கருந்துளையானது நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஈர்ப்புவிசையினை கொன்டிருக்கும். அதனுள் விழுந்த எந்த பொருளும் வெளியேற முடியாது. ஒளிகூடஅதில் இருந்து வெளியேற முடியாது. அதனால்தான் அது கருப்பு நிறத்திலேயே இருக்கும். யாரும் பார்க்க முடியாது.
சரி, அதனுள் விழுந்த ஒரு பொருள் என்னவாகும்?
சக்கர நாற்காலி இயற்பியல் கதாநாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் (stephen hawking) என்ன சொல்லுகின்றார் என்றால், "கருந்துளையில் விழுந்த பொருள் சிதைக்கப்பட்டு அதன் அணுக்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டுவிடும், அதன் வடிவம், மற்றும் அது கொண்டிருந்த அடையாளங்கள் எல்லாம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்"
ஆனால் பெரும்பாலான மற்ற இயற்பியல் வல்லுனர்கள் அத்ற்கு மாற்றான கருத்தினையே கொன்டுள்ளனர்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகதில் பணியாற்றும் இயற்பியல் பேராசிரியர் லியனார்டு சஸ்கின்ட் அவர்கள்நுகுறித்து பல விவாதங்களை ஸ்டீபன் ஹாக்கிங் உடன் மேற்கொன்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏழாம் பொருத்தம்தான். (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும் நீல்ஸ் போருக்கும் இருந்தது போலத்தான்).
இருவருக்குமிடையேயான விவாதம் இன்றளவிலும் தொடர்கின்றது. இந்த சன்டை குறித்து சஸ்கின்ட் எழுதிய புத்தகம் "The Black Hole War" மிகவும் பிரசித்தி பெற்றது.
லியனார்டு சஸ்கின்ட் என்ன சொல்லுகின்றார் என்றால்,
"கருந்துளையில் விழுந்த பொருளானது அதன் வடிவத்தை இழந்து அணுக்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டு பல இடங்களில் இருந்தாலும் அவைகளை ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்த்தால் முழு வடிவமும் புலப்படும். அது ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஹாலோகிராம் படம் போலத்தான் (holographic picture) இருக்கும். சொல்லப்போனால் இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒரு ஹாலோகிராம் சித்திரம் போன்றதுதான்."
அவரது இந்த கருத்துக்கு ஒரளவுக்கு ஆதரவு கிடைத்து இருக்கின்றது. ஆனாலும் முழுதாக் நிருபிக்கப்பட்வில்லை.
இது குறித்த விவாதத்தினை இந்த கானொளியில் கன்டேன்.
Raphael Bosso , Herman Verlinde , Gerard 't hooft and Leonard Susskind நால்வரும் தங்களது கருத்துக்களை சொல்லுகின்றார்கள்.
ஸ்டீபன் ஹாக்கிங் குறித்து அவர் ஒரு பிடிவாதக்காரர், மற்ரவர்கள் கருத்துக்களை காதில் கேளாதவர் என்றெல்லாம் குற்றம் சாட்டுகின்றார்கள்.
நான்கு குருடர்கள் யானையை தொட்டுப்பார்த்து எப்படி இருக்கும் என்று சொல்லுவதைபோலத்தான் இவர்கள் இந்த பிரபஞ்சத்தினைப்பற்றி சொல்லுகின்றார்கள்.
உண்மையை யார்தான் அறிவாரோ !!!!
Thursday, May 12, 2016
ரம்மி "touch and dic"
ஞாயிற்று கிழமை ஓய்வு நேரங்களில் மற்றும் கல்யாண வீடுகளில் மிக பிரசித்தமான விளையாட்டு #ரம்மி. இதற்காகவே திருமன நிகழ்சிகளை ஆவலுடன் எதிர் நோக்கி போவது உன்டு.
"நாக் அவுட்" என்ற முறையிலான ரம்மி விளையாட்டில் மிகுந்த பரபரபரப்பு, எதிர்பார்ப்பு மற்றும் எதிர்பாரத திருப்பங்கள் நிறைந்து இருக்கும்.
"touch and dic" , "one card position" மற்றும் "must dic" இந்த நிலைகள் விளையாடுபவர்களின் இருக்கை நுனிக்கே கொன்டு வந்துவிடும்.
நன்பர்கள் உறவினர்கள் கும்பலாக விடிய விடிய, இந்த விளையாடை அனுபவித்து விளையாடுவதோடல்லாமல், உரையால்கள் மற்றும் கின்டல் பேச்சுக்கள் , நொறுக்குத் தீனிகள் என்று களைகட்டும்.
மனைவி பிள்ளைகளை அசந்த நேரத்தில் ஏமாற்றிவிட்டு நன்பர்களுடன் ரம்மியில் ஐக்கியம் ஆவது மிக்க த்ரில் நிறைந்தது ஆகும்.
மக்களுக்கான சேவையில் நவீன உலகில், ஆன்லைன் ரம்மி இதோ.
உலகம் முழுவதும் உள்ள குழுக்களுடன் விளையாடி மகிழலாம்.
https://www.rummycircle.com/
Saturday, February 06, 2016
#விசாரணை. படு பாலாத்தனமான படம்.
நடப்பதைத் தானே காட்டுகின்றோம் என்று சொல்லி நம் இதயங்களை நொறுக்குவதே வேலையா போச்சு. இதையெல்லாம் காட்டினால்தான் மக்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியும் என்ற வாதம் சரி என்றாலும், வக்கிரபுத்த்தியை காசாக்கும் வியாபாரத்தனம்தான் மேலோங்கி இருப்பதுபோல இருக்கு.
இதனால் அப்பாவிகள் விழிப்புணர்வு பெறுவார்கள் என்று நான் நம்பவில்லை. வக்கிரத்துக்கு தீணி என்றே சொல்லுவேன்.
படத்துக்கு விதி ன்னு பெயர் வைத்திருக்கலாம். வெற்றி மாறன் பாலா மாறன் ஆகிவிட்டார்.
ஏழைகளும் அப்பாவிகளும் சினிமாவில்கூட சந்தோஷமான வாழ்கையை கொள்ளமுடியாது என்ற பாலாத்தனமான படம்.
#விசாரணை.
Friday, January 15, 2016
உங்களில் சைக்கோத் தனம் ஒளிந்து இருக்கின்றதா?
ஏன்கொன்றாள்?






