Tuesday, July 15, 2008

என்னைப்ப‌ற்றி (பாகம் 1)

நான் ம‌துரை மாவ‌ட்ட‌ம் உசில‌ம்ப‌ட்டி கிராம‌த்தில் பிறந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன். 1993 க‌ளில் உசில‌ம்ப‌ட்டியில் க‌ண‌ணிப்ப‌யில‌க‌ம் ந‌ட‌த்திவ‌ந்திருந்தேன். அந்நாட்க‌ளில் நான் த‌யாரித்து ச‌ந்தைப்ப‌டுத்திக்கொன்டிருந்த‌ மென்பொருட்க‌ள் தென் த‌மிழ்நாட்டிட்ல் பிர‌ப‌ல‌மாக‌ இருந்தது. வ‌ணிக‌ க‌ன‌க்கு ப‌திவிய‌ல், ச‌ர‌க்கிருப்பு மேலான்மை, குழ‌ந்தைக‌ள் ப‌யிலும் மென்பொருட்க‌ள் போன்ற‌வைக‌ள் ப‌ர‌வ‌லாக‌ இருந்த‌து. நான் தயா‌ரித்து அளித்த‌ வைர‌ஸ் நீக்கும் மென்பொருள் மிகவும் பிர‌ப‌ல‌மாக‌ இருந்த‌து. அந்நாட்க்க‌ளில் "த‌மிழ் க‌ம்ப்யூட்ட‌ர்" இத‌ழில் நிறைய‌ க‌ண‌னி குறித்த‌ க‌ட்டுரைக‌ள் எழுதியிருக்கின்றேன். கால‌ ஒட்ட‌த்தில், சென்னைக்கு ந‌க‌ர்ந்து பிறகு ஜ‌ப்பான் நாட்டுக்கு சென்று த‌ற்பொழுது அமெரிக்கா நாட்டில் ப‌ணியாற்றி வ‌ருகின்றேன்.

நல்லதொரு படிப்பு என்பது படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைக்க மட்டுமே பயன் படுகின்றது. வேலைக்குள் சேர்ந்தபிறகு எல்லா இழவுமே ஒன்றுதான்.

முதல் 6 மாத காலத்துக்கு நீங்கள் கண்கானிக்கப்படுவீர்கள், அதற்க்குள் எத்துனை ஆர்வமாக இருக்கின்றீர்கள் மற்றும் வேலையை கற்றுக்கொள்கின்றீர்கள் என்பதைப்பொறுத்துதான் உங்கள் பணி வாழ்க்கையின் தலைவிதி நிர்னயிக்கப்படுகின்றது. அதன்பிறகு எந்த அளவுக்கு உங்கள் தலைமை அதிகாரியின் பொறுப்புகளை மற்றும் வேலை-அழுத்தத்தை குறைக்கின்றீர்கள் , எந்தாளவுக்கு உங்கள் வேலையினை நேசிக்கின்றீர்கள், என்பதை பொறுத்தே பணி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கின்றன,

உசிலம்பட்டி கிராமத்தின்,சராசரி படிப்புக்கும் கீழான, B.Com தேறாத மற்றும் தொரச்சியாக 3 வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசத்தெரியாத என்னை வெற்றிகரமாக உலக நாடுகளில் பணியாற்றி, IIT தங்கப்பதக்கம் வாங்கிய மாணவர்கள்கூட எனக்குக்கீழே வேலை பார்க்கும் அளவுக்கு முன்னேற்றியது ஆர்வமும், திறமை மட்டுமல்ல, நேரமும் தான்.

இவையெல்லாம் விட நல்லோர்கள் மனதார செய்த உதவியும்தான்.

என‌து க‌ணிப்பீட்டு வாழ்கையின் வ‌ள‌ர்ச்சிப்ப‌தைக்கு வ‌ழிகாட்டி உத‌வி செய்த‌தில் உசிலம்பட்டி மீனாஷி மெடிக்கல் மார்ட் உரிமையாளர் என் முதலாளி, திரு விநாயக மூர்த்தி

உசிலம்பட்டி பெரீஸ் பிஸ்க்கெட் நிறுவன உரிமையாளர்கள் திரு மகேந்திரவேல், மற்றும் அவரது சகோதரர். திரு பால சுப்ரமணியன்.

சென்னை பேராசிரிய‌ர் திரு டாக்ட‌ர் பெ.ச‌ந்திர‌போஸ் அவ‌ர்க‌ள்,

உசிலம்பட்டி V.K.S.பிஸ்கெட் உரிமையார் திரு V.K.S.சுப்பிரமணியன்.

உசிலம்பட்டி S.M.S.R.உரக்கடை உரிமையாளர் திரு S.M.S.R.சந்திரபோஸ்.

உசிலம்பட்டி கண்மார்க் ஊறுகாய் நிறுவனர் திரு செல்வராஜ்.

த‌மிழ் க‌ம்ப்யூட்ட‌ர்" த‌மிழ் க‌ண‌ணி இத‌ழ் ஆசிரிய‌ர் திரு ஜெய‌கிருஷ்ன‌ன் அவர்கள்

மற்றும் சென்னை கேசவன் கம்ப்யூட்டிங் நிறுவனர் திரு J.கேசவர்த்தனன் அவ‌ர்க‌ளும் பெரும்ப‌ங்கு வகித்தவர்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தொடர்ச்சி இங்கே ( நான் க‌ண‌ணியால் ஈர்க்க‌ப்ப‌ட்ட‌ க‌தை.)

1 comment:

Sridhar Narayanan said...

வாருங்கள் விஜயன்.

உங்களின் செறிவான கட்டுரைகளுக்காக காத்திருக்கின்றோம். :-)