Friday, November 03, 2023

கல்வி தேவையா?.

கல்வி தேவையா?. SIN, COS TAN போன்ற கணக்கீடுகள் னது வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும்பொழுது அதை எதற்க்காக படிக்கவேண்டும் போன்ற கேள்விகள் சங்கித்தனமான பரப்புரைகள், பிக்பாஸ் மற்றும் நீயா நானா புண்ணியத்தில் மக்களிடையே விவாதப்பொருட்கள் ஆகி இருக்கின்றன.

மொழி, அறிவியல், கணக்கியல் போன்ற தொழில்முறை அல்லாத பொதுக் கல்வியில் கற்ற வித்தைகள் வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ யாரும் பயன் படுத்தப்போவதே இல்லை என்றுதான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

கூட்டமாக தத்தனித்தனி இனமாக வாழ்ந்து மற்ற இனத்தினை சண்டையிட்டு அழித்து பொருட்களை கொள்ளையிட்டு வாழ்ந்திருந்தத மனித இனம்.

சண்டையிடுவது தவறு, இன்றைக்கு இருக்கும் உணவு எத்தனைபேருக்கு இத்தனைநாள் தேவைப்படும் எவ்வளவு சேமித்துவைக்கவேண்டும். மற்றும் உணவை நாமே எப்படி தயாரிக்கலாம் என்றல்லாம் எண்ணி நாகரீக முன்னேற்றம் அடைந்ததெல்லாம் என்னவென்று நினைக்கிண்றீர்கள்?

சமூகவியல், கணக்கியல், அறிவியல் போன்ற கல்விகளினால்தான் நிகழ்ந்தது இது என்பதுதான் உண்மை..

இதெல்லாம் பொது அறிவுதான் இதை கல்வி என்று சொல்ல முடியாது என்று நினைப்பீர்களேயானால் அது தவறு.

பொது அறிவு கொண்ட ஒருவர் அவைகளை மற்றவருக்கு அறிவுறுத்தி கடத்தினால் மட்டுமே இது செயலாக்கம் ஆகும். அந்த அறிவுறுத்தல் என்பதுதான் கல்வி ஆகும்.

கல்வியானது தேடும் ஆர்வத்தை உண்டாக்கி, சிந்திக்கும் சக்தியை அதிகரித்து , குழப்ப சிக்கலுக்கு தீர்வு காணவும் , புதிய உத்திகளை உருவாக்கவும் கற்றுத்தருகின்றது. எந்த ஒரு தொழிலுக்கும் இவைகள் மூன்றும் தேவைதான்.

கல்வி என்பது மிக முக்கியமானது ஆகும். விவசாயம் செய்பவர்களும் வியாபாரம் செய்பவர்களும், கண்டவர்கள் பேச்சை கேட்டு கல்வியை கைவிடல் ஆகாது.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

பள்ளிப் படிப்பு அல்லது கல்லூரி படிப்புக்குப் பிறகுதான் நமக்குள் என்ன ஆர்வம் இருக்கின்றது என்று தெரியும். அதன் பிறகு அதற்க்கு தகுந்த தொழில் கல்வியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அப்படி சிரமப்பட்டு படிக்கவேண்டுமா என்றால் இல்லைதான். முடிந்த அளவிற்கு சற்று முயற்சி செய்யத்தான்வேண்டும்.

என்னதான் செய்தாலும் நமக்குள் இருக்கும் ஆர்வத்தை அறிந்துகொள்ளலாமே தவிர நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மையான திறமையை அந்த கடவுள் தவிர யாராலும் அறியமுடியாது.எனக்குத்தெரிந்து இந்த உலகில் தான் கொண்ட திறமைக்கேற்ற தொழிலை பெற்றவர்கள் இரண்டே பேர்தான்,

1). இளையராஜா
2). பீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குனர்)

இரண்டு கேள்விகள் உங்களுக்கு

1).அணில் அம்பானி மகனுக்கு கல்வி தேவையா?
2). SIN, COS கணக்கீடுகளை வாழ்க்க்கையில் போட்டுப்பார்காத மனிதனே இவ்வுலகில் இருக்கமுடியாது. வாழ்க்கை தேவைக்கு நீங்களும் போட்டுத்தான் இருக்கிறீர்கள் எப்படியென்று தெரியுமா?



Sunday, July 09, 2023

தமிழ் மன்றம் இளசு அண்ணா

 உயிர் வாழ்தல் எனும் நோக்கத்தை அடுத்து தேடுதல் என்பது மனிதனின் முக்கியமாக இருக்கின்றது. எத்தனையோ தேடல்கள், 


எந்த ஒரு கதையையும் (நாவல், சிறுகதை, திரைப்படம்) பார்த்தால் அதன்  மூல முக்கிய கருவானது தேடலாகத்தான் இருக்கும். மனிதனின் இந்த தேடலை அருமையானதொரு வியாபார உத்தியாக்கி வெற்றிகொண்டது கூகிள். 

பலவகை தேடலில் சுவாரசியமானது, நேரில் பார்க்காத ஒருவரை அவரைப்பற்றிய கேள்விகளினால் தேடுவதாகும், 

சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தில் தேன்மொழி என்பவரை பற்றி அனைவரும் சிலாகித்து பேசுவதை  கேட்கையில் அவரை சந்திக்கத்துடித்து தேடியலைந்து தன வாழ்க்கையை தொலைத்து பின்னர் எப்படி வாழ்க்கையை சரி செய்கின்றார் அந்த கதாநாயகன் என்ற கதை.

மாறா திரைப்படத்தில் கதாநாயகன் சுவற்றில் வரைந்த ஓவியங்களை கண்டு பிரமித்து, வரைந்தவரின் உள்ளக்கிடக்கை எப்படிப்பட்டதாக இருந்தால் இப்படி ஒரு ஓவியமாக வரும் என்று அவரை சந்திக்க தேடியலைந்து கண்டுபிடித்து சேரும் அந்த கதாயாயாகியின் கதை.

Wicker Park திரைப்படத்தில் திருமணமான விளம்பர நிர்வாகி ஒருவர் தற்செயலாக பார்க்கும் ஒருபெண் தனது பழைய காதலி இருப்பதால் அவரை வெறித்தனமாக தேடியலைந்து சந்திக்கும் கதை .

வெற்றிவிழா திரைப்படத்தில் சுயத்தை தொலைத்து தன்னையே தேடியலைந்து அறியும் கதாநாயகனின் கதை.

(இன்னும் பல)

இவைகள் போலவே எனக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது.

ஆமாம் நானும் இளசு அண்ணா என்பவரை தேடியலைந்து இன்றுவரை சந்திக்காமலும் இருக்கின்றேன். நான் மட்டுமல்ல என்னைப்போல நூற்றுக்கணக்கணவர்கள் தேடியலைந்து கொண்டுதானிருக்கின்றனர்.

2000ம் ஆண்டு வாக்கில் , முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் அதிகம் இல்லாத நாட்களில் http://tamilmantram.com/ தளம்தான் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. துபாய் , அமெரிக்கா , ஜப்பான் , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , டென்மார்க் (இன்னும் பல )  நாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்றிருந்த தமிழர்களை இணைத்த அந்த தமிழ் மன்றத்தில் குழு தலைவராக இருந்தவர்தான் இளசு அண்ணா . நேரில் சந்திக்காத, முகமறியாத ஒருவர் எப்படி நூற்றுக்கணக்கணவரின் அன்புக்குரிய அண்ணனாக ஆகா முடியும்?

முடியும்தான். நான் கீழே கொடுத்துள்ள இணைப்பினை பாருங்கள் அவரை காணாமல் துடித்து போன தம்பி தங்கைகளின் பதிவுகள்.

நான் குடும்பத்தை பிரிந்து 2004ம் வருடம் ஜப்பான் நாட்டிற்க்கு சென்றபொழுது பிரிவுத்துயர் மற்றும் குடும்ப நோயினால் பாதிக்கப்பட்டு மனம் குழம்பிஇருக்கையில்தான் இளசு அண்ணா அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் தமிழ் மன்றத்தில் கிடைத்தது. அவரும் புலத்தினை  பிரிந்தது இங்கிலாந்தில் பணியாற்றுவதாக சொன்னார். ஆனால் உண்மை பெயர் மற்றும் தொடர்பு விவரத்தை தரவேயில்லை. உடன் பிறந்த அன்னான் போல என்பால் அக்கரை கொண்டிருந்தார்.

அவர் என்னை மிகவும் பாதித்தது ஒரு உரையாடலில்தான்.

மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை உண்டா என்ற தலைப்பிலான விவாதத்தில் நான் ஒரு பதிலிட்டிருந்தேன்.

அதைக்கண்டு வியந்த இளசு அண்ணா அவர்கள் ஒரு அறிவியல் கோட்பாட்டினை சொல்லி , இப்படிப்பட்ட ஒரு சிக்கலான அறிவியல் கோட்பாட்டினை இப்படி எளிதாக விளக்கிவிட்டீர்களே இந்த புதிரை  விடுவித்த அந்த உலகப்புகழ் பெற்ற அறிவியல் வித்தகர்கூட குழப்பமான விளக்கம்தான் தந்திருந்தார் என்று வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.

நான் திடுக்கிட்டு போய்விட்டேன். அந்த அறிவியல் கோட்பாட்டினை படித்து பார்த்து வியந்தேன், அப்படியே நான் நினைத்தது போலவே இருந்தது. அப்பொழுதுதான் எனக்குள் இயற்பியல் அறிவு தொடர்பான சிந்தனைகளும் இருக்கின்றது என்று உணர்ந்தேன். அது குறித்த ஆராய்ச்சியில் இன்னும் இருக்கின்றேன். 

அது குறித்து பின்னர் விளக்குகின்றேன். 

இங்கே பாருங்கள் இளசு அண்ணா குறித்து மற்றவர்களின் தேடல் மற்றும் கோரிக்கைகள் . 

http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5344.html

இதில் பாருங்கள், அவர் திரும்ப வருவதாக அறிவித்த பின் மற்றவர்களின் பதில்களை 

http://tamilmantram.com/vb/archive/index.php/t-5690.html

Sunday, June 25, 2023


 திரைப்படங்கள் என்பன ஒரு கருத்தியலை போதிக்கும் ஊடகம்தான் , வரலாற்றை திரித்து கூறும் மற்றும்  தவறாக வழிநடத்தும் உள்நோக்கத்தோடோ  இருந்தால் கண்டிப்பாக அது எதிர்க்கப்பட வேண்டியதுதான்.

இவைநீங்களாக படைப்பாளிகளின் படைப்பாற்றல்கள் ஒன்றுகூடி சங்கமித்து அருவியாக கொட்டும்பொழுது அதை கிடைக்கும் அனுபவம் மனிதனுக்கு வேறு எதிலும் கிடைக்காது.


தேவர் மகன் படத்தில் அப்படி திரித்துக்கூறப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய காட்சிகள் இல்லை. சாதிப்பெருமை பேசும் திரைப்படம் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. ஆமாம், குறிப்பிட்ட சாதி பற்றிய படம்தான் அது. சமூகத்தில் ஒரு குழுக்களைப்பற்றி எடுக்கப்பட்ட எத்தனை திரைப்படங்களை கண்டு கழித்து ரசித்திருந்திருக்கின்றோம்?

"the last samurai " திரைப்படத்தில் ஜப்பான் நாட்டில் இருந்த சாமுராய் கள் வீர தீரங்கள் குறித்து சிலிரித்துப்போய் பார்த்திருந்தோம்?

"inglorias basterds" திரைப்படத்தில் யூத குழு வீரர்களின் திறமைகளை பார்த்து பாராட்டியிருக்கின்றோம்.

இப்படி பல படங்கள் உள்ளன.

இன்றும் அமெரிக்க அருங்கட்சியகங்களில் குழுக்களாக வாழ்ந்த மக்களின் வாழ்க்க்கைமுறை , உள்  சண்டைகள் மற்றும் உள்நாட்டு சண்டைகள் குறித்து அறிந்து வியக்கின்றோம்?,

அதை சுவைபட ஒரு இட்டுக்கட்டி கதைமூலம் சொல்லுவது என்பது சாதாரணமானது அல்ல. அதை திறம்பட மற்றும் செவ்வனே செய்து மக்களின் மனதில் சேர்ப்பதில் மாபெரும் வெற்றியாளனாகத்தான் கமல் ஹாசன் அவர்கள் இருக்கின்றார்.

இன்னொருபடமான விருமாண்டி .

சண்டியர் என்ற பெயரை கிருஷ்ணசாமி விரும்பாததால் பெயர் மாற்றப்பட்ட படம். தென் மாவட்டங்களில் ஒரு  மக்கள் பாத்திரம் கொண்டுள்ள பெயர். மற்ற மாவட்டங்களில், மைனர், தல , என்று பல பெயர்களில் உள்ளது.

இந்த சண்டியர் கதாபாத்திரமானது மற்ற மாவட்டங்களில் எப்படியோ தென் மாவட்ட கிராமங்களில் ரெம்ப வேறு மாதிரியானது.


எதிலும் அடங்காமல் சண்டித்தனம் பண்ணுவதை  யாருமே கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதுதான் சிறப்பு.


எங்க ஊர் உசிலம்பட்டி ஆனதுதான்,  சுற்றியுள்ள 48 கிராமங்களுக்கும் டவுன். அங்கிருந்து வரக்கடைசியில் பொழுது களித்து கழிக்க உசிலம்பட்டி  வரும் கிராம சண்டியர்கள் தங்களது அடிப்பொடிகள்  நண்பர்களுடன் வருவார். தங்கள் ஊரு நினைப்பிலேயே சண்டித்தனம் செய்து, ஓட்டல்கள், திரையரங்கில், கடைகளில் , மது கக்கடைகளில் ஓரண்டியிழுத்து அடிவாங்குவார்கள், இறுதியில் , நான் யார் தெரியுமா என்று சொல்லி தாட்டியம் காண்பிக்கையில், ஓ , பள்ளப்பட்டி சண்டியனா , சரிப்பா விடுப்பா , சரி போங்கப்பா எல்லோரும் என்று சொல்லி களைந்து போவர். இது ஒரு சாம்பிள்தான்.இதோபோக, நகரம், கிராமம், குக்கிராமம் போற இடங்களுக்கு தகுந்தவாறு சண்டியத்தனம் இருக்கும்.


விருமாண்டி, கிழக்கு சீமையிலே பாண்டியன், எங்க சின்னராசா படத்தில், பாக்யராஜுக்கு மாமா பையன், போன்ற மற்றும் பலதரப்பட்டிய சண்டியர்கள் மதுரை & தேனி மாவட்டங்களில்  உள்ளனர், 


இதில் என்ன திரைப்பட பெயர் பிரச்சினை என்கிறீர்களா?


இந்த சண்டியர்கள் எல்லாம் குறிப்பிட்ட அந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் இருக்கமுடியும். மாரிசெல்வராஜ் , கிருஷ்ணசாமி (இவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும்தான்) எல்லோருக்கும் இந்தப்பெயர் ஆனது அந்த சாதியின் வீரத்தை தூக்கி மற்றவர்களின் துன்ப குமுறல்களை இயலாமையாக காட்டுகின்றதே என்ற கோபம்தான்.


ஆனாலும், கமல் ஹாசன் அவர்களின் இத்திரைப்படங்கள் எல்லாம் பல்சுவைகொண்ட தரமான ஆவணங்கள்தான். மாறாக எந்தவிதமான கெட்ட விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதுதான் எனது எண்ணம்.


மாரி செல்வராஜ் அவர்களே அதற்கு சரியான உதாரணம். கமல் ஹாசன் அவர்களின் படைப்பு எவ்வளவு யதார்த்தமாக இருந்திருந்தால், மாரிசெல்வராஜ் அவர்கள் அதை உள்வாங்கி தன்னை மேம்படுத்தி, பெரிய தேவர் இருக்கும் இடத்தில் எனது தந்தையை கொண்டுவரவேண்டுமென்று வடிவேலுவை அங்கு நிறு த்தியிருப்பார்.

கமல்ஹாசன் அவர்களுக்கு சபாஷ். அவருக்குத்தான் உண்மையில் வெற்றி.