Thursday, March 20, 2014

ஜப்பான் நாட்டில் வேலை பார்த்த அனுபவம் (பாகம் 11)

[இதைப்படித்து விட்டு இங்கு வரவும் (K7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் வேலை.)]


T&B Internatinoal நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொன்டிருக்கும்பொழுதே எனது மனைவியின் தம்பி சரவனன் அமெரிக்கா சென்று பணியாற்றினான். அப்பொழுது எனக்கும் வெளிநாடு சென்று பணியாற்றவேன்டும் என்று ஆவல் வந்தது. சென்னைக்கு வந்த புதிதில் வந்த வெளிநாட்டு வாய்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டேன். இப்பொழுது தேடும்பொழுது எதுவும் கிடைக்கவில்லை.
அப்பொழுதுதான் ஒருநாள் எனக்கு எங்கள் உசிலம்பட்டியை சேர்ந்த அய்யாவு சுரேஷ் என்பவர் மினஞ்சல் அனுப்பி இருந்தார். தான் ஜப்பான் நாட்டில்  வேலை பார்ப்பதாயும், அந்நிறுவனத்துக்கு டெவலப்மென்ட் மானேஜர் தேவைப்படுவதாகவும் கூறினார். எங்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் சிபாரிசு செய்கின்றேன் என்றார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.

உடனே வேலைக்கான ஆபர் மற்றும் விசா எடுத்து அனுப்பிவைத்து உடனே வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார். நானும் கிளம்பிவிட்டேன். மனைவி பிள்ளைகளை விட்டு தனியேதான் கிளம்பினேன். ஒரு வருடம் இருந்து நன்றாக சம்பாதித்துவிட்டு ஊருக்கு திரும்பலாம் என்று நினைத்துதான் கிளம்பினேன். அப்பொழுது எல்லாம் தெரியலை இது ஒரு மாயச்சுழல், திரும்ப அனுமதிக்காது என்று.

ஜப்பான் நாட்டில் ஒசாகா அருகே அமைந்துள்ளது கோபே நகரம். அங்குதான் 5Digistar என்ற நிறுவனத்தில் எனக்கு வேலை. Port-Island என்று அழைக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய செயற்கைத் தீவில்தான் எங்களது அலுவலகம் இருந்தது.

இதுவரை தனியே இருந்திராத எனக்கு அய்யாவு சுரேஷ்தான் அனைத்து உதவியும் செய்து கொடுத்தார். சமையல் கூட அவர்தான் கற்றுக்கொடுத்தார்.

கோபே ஒரு அழகான நகரம். ஒருபுறம் கடற்க்கரை மறுபுறம் நீன்ட ரொக்கொ மலைத்தொடர். அருமையான மக்கள். எனக்கும் நிரம்பவும் பிடித்துப்போனது. அங்கு எனக்கு நிறைய ஜப்பானிய நன்பர்கள் கிடைத்தனர்.

அலுவலகத்தில் எனக்கு வேலை ஒன்றும் அவ்வளவாக திருப்திகரமாக இல்லை. மேலாளர் பணியில் அனுபவமும் விருப்பமும் இல்லாமல் சரிவர பணி புரிய முடியவில்லை. எப்படியோ ஓடிக்கொன்டு இருந்தது.

குடும்பத்தைவிட்டு தனியே முதன்முதலாக வந்திருப்பதால், மிகுந்த குழப்பம், சோகம் கொன்டவனாக இருந்தேன். அதுவும் அங்கே தனிமை வேறு என்னை கொலை செய்தது. நிறுவனத்தில் அய்யாவு சுரேஷ் தவிற மற்றும்  நம்ம ஊர் காரர்கள் இரண்டு பேர்களும்  பணி புரிந்தனர். அவர்கள் எல்லாம் குடும்பத்துடன் இருந்ததனால் பெரும்பாலும் நான் தனியேதான் சுற்ற வேன்டியிருந்தது.

ஜப்பானில் கொன்ட தனிமைதான் என்னை நிறைய படிக்க மற்றும் சிந்திக்க வைத்தது.

 2004  நவம்பர் மாதம் இங்கு வந்தேன். 2005 ஏப்ரல் மாதம் எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் கோடை கால விடுமுறைக்காக ஜப்பன் வந்தனர். 6 மாத காலத்துக்கு அப்புறம், குடும்பத்தை சந்திக்கப்போவதில் அப்படி ஒரு மகிழ்சி எனக்கு. ஒசாகா விமான நிலையத்தில் காத்துக்கிடந்த அந்த 2மணி நேர சந்தோசமான அவஸ்தையை வாழ்க்கையில் மறக்க முடியாது.

அவர்கள் எல்லோரும் வந்திருந்து 3 மாதங்கள் என்னுடன் தங்கி இருந்தனர். சந்தோசமாக ஜப்பான் நாட்டையே சுற்றினோம். குழந்தைகளும் 8 மற்றும் 5 வயதில் இருந்ததனால் பிரச்சினையே இல்லை. 3 மாதங்கள் சந்தோசமாக இருந்தது.

3மாதத்துக்கு பிறகு என்னுடன் வேலை பார்த்த ஒரு பிஒரு பிராமனனால் திட்டமிட்டு தாக்குதலுக்கு உள்ளாகி கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகப் போகின்றேன் என்று நினைத்தோ என்னமோ கடவுள் அப்படி ஒரு சந்தோசத்தை எனக்கு அந்த 3 மாதங்களில் தந்தார்.

என்னை கடுமையான மனவேதனைக்குக்குள்ளாக்கி  ஒரு பயங்கரமான நெருக்கடிக்குள்ளாக்கிய அந்த கயவனைப்பற்றி அடுத்த பதிவில்.

தொடர்சி இங்கே [ஒரு கயவனால் ஜப்பானில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் (பாகம் 12)]