Tuesday, March 26, 2013

K7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் வேலை.(பாகம் 10)


K7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் வேலை.

(இதைப்படித்து விட்டு இங்கு வரவும் ( கம்ப்யூட்டர் குறித்த உயர் நுட்பப் பயிற்சி வகுப்பு )

1995 ம் வருடம் எனக்கு காரைக்குடி யை சேர்ந்த குனசுந்தரி அவர்களுடன் திருமனம் ஆனது. இதுவரை அதீத பொறுப்புகள் எதுமில்லாமல் மனம்போன போக்கில் வேலை பார்த்து வருமானம் பார்த்துக்கொன்டிருந்த நான் திருமனத்துக்கு பிறகு ஒருவித இறுக்கத்துக்குள் போகவேன்டியதாயிற்று. முன்னைப்போல விற்ப்பனைக்காக அடிக்கடி வெள்யில் செல்ல முடியவில்லை இரவு முழுதும் விழித்திருந்து வைரஸ் நீக்கிகள் எழுதமுடியவில்லை.
1995 வாக்கில் விண்டோஸ்-95 வந்து எங்களது பிழைப்பில் கைவைத்தது. ஆமாம் இன்டெர்நெட் ஆனது எளிதில் அனைவருக்கும் கிடைக்கப்பெற்றது. பள்ளி மாணவர்களுக்கான சாப்ட்வேர்கள் மற்றும் வைரஸ் நீக்கிகள் இலவசமாக கிடைக்க ஆரம்பித்தன. விண்டோஸ் இயகத்தில் மிகநேர்த்தியானமுறையில் உருவாக்கக்பட்ட சாப்ட்வேர்களுடன் டாஸ் இயக்கத்திலான எங்களது சாப்ட்வேர்கள் போட்டி போட முடியவில்லை. விற்பனைகள் குறைந்தன.

சென்னையில் உள்ள வேல் கம்ப்யூட்டர்ஸ் மற்றும் மதுரையில் உள்ள ஓரியன் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனங்கள் ஆதரவுடன் Vijay Antivirus தான் ஓரளவுக்கு வருமானம் தந்துகொன்டிருந்தது. 1996 ல் எனது மூத்த மகள் சோபிகா பிறந்தாள். எனக்கும் முன்னைப்போல அலைந்து திரிந்து ஆர்டர்கள் எடுக்க முடியவில்லை. நடக்கும் பொழுதும் படிகளில் ஏறும்பொழுதும் நெஞ்சை இறுக்கிபிடித்ததுபோல வலிக்கும், அப்பொழுதுஎல்லாம் நான் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன் ஒவ்வொரு மணிக்கும் ஒரு சிகரெட் புகைப்பேன். அதுதான் நெஞ்சு வலிக்கு காரனமாக இருக்கும் என்று ஒரு டாக்டரிடம் கான்பித்தேன். அவர் வழக்கமான பரிசோதனைகளை செய்தபிறகு அனைத்தும் சரியாக இருக்கின்றது ஆனால் E.C.G யில் மட்டும் எதோ பிரச்சினை மாதிரி இருக்கு எனவே இருதயத்துக்கான டாக்டரிடம் செல்ல சொன்னார். அவரும் ஒரு எக்கோகிராம் எடுத்து வரச்சொல்லி பார்த்துவிட்டு இருதயத்தில் பிறப்பிலேயான ஒரு துளை உள்ளது அது எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆகவே உடனே அறுவைசிகிச்சை செய்து சரிசெய்யவேன்டும் என்று சொல்லிவிட்டார். ஒரே குழப்பமாகிவிட்டது. சரி பின்நாளில் பர்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். (பின்நாளில் அறுவைசிகிச்சை செய்து சரி செய்த பிறகும் நடக்கும்போது நெஞ்சை பிடித்தது போல இருந்தது இந்தமுறை வாயுப்பிடிப்பு என்று சொன்னார்கள்).

தமிழ் கம்ப்யூட்டர் இதழுக்கு எழுதிக்கொன்டிருந்த காலத்தில் ஒருமுறை அதன் ஆசிரியர் திரு ஜெயகிருஷ்னன் அவர்கள் என்னிடம் சென்னையில் உள்ள K7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தை பற்றி சொன்னார். அதன் நிறுவனர் திரு கேசவர்த்தனன் அவர்கள் VX2000 எனும் வைரஸ் நீக்கும் சாப்ட்வேர் தயரித்து இந்தியா முழுதும் விற்பனை செய்து வந்தார். அவரை உடனே அவரது சைதாப்பேட்டை அலுவலகம் சென்று சந்தித்தேன். அவர் அன்புடன் உபசரித்து அன்னைப்பற்றிய முழு வரமும் அறிந்தார். பின்பு அவரே என்னை சென்னைக்கு வந்து அவருடன் சேர்ந்துகொள்ளூம்படி கேட்டுக்கொன்டார். நானும் யோசித்து சொல்லுகிறேன் என்று வந்துவிட்டேன்.

சென்னையில் மேன்சன், நன்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள்ளில்
சிலகாலம் தங்கி இருந்து K7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் பகுதி நேரம் வேலை பார்த்தேன். மேன்சனில் எனக்கு பல மாவட்டத்து நன்பர்களின் நட்பு கிடைத்தது. அவைகள் அழகான நாட்கள். திருநெல்வேலி நன்பர்களெ அதிகம் இருந்தனர். அவர்களின் அழகான தமிழ் மற்றும் கின்டலான பேச்சுக்கள் அந்தும் ரசனையாக இருந்தன.

பிறகு மதுரையில் ஒரு கம்ப்யூட்டர் கண்காட்சியில்வரை சந்தித்தேன் மீன்டும் அவருடன் வந்துவிடுமாறு வலியுறுத்தினார்.

எனக்கும் வியாபாரம் மிக மோசமாக ஆன காரணத்தினால் 1998 வருடம் நவம்பர் மாதம் உசிலம்பட்டியில் உள்ள விஜய் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். K7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் புராஜெக்ட் லீடராக சேர்ந்தேன். அங்கு வேலை நன்றாக போய்க்கொன்டிருந்தது. அங்குதான் விசுவல் சி++ மூலம் விண்டோஸ் புரொகிராம் கற்றுக்கொன்டேன். 1999 ம்வருடம் எனது மகன் ராகுல் பிறந்தான். 2000 ம் வருடம் இருதய அறுவை சிகிச்சை செய்துகொன்டேன்.

 எனது மனைவி குனசுந்தரி, மகள் சோபிகா மற்றும் மகன் ராகுல் ஆகியோரது அன்பினால் எந்த ஒரு கஷ்டமும் எங்களை வாட்டவில்லை, அனைத்தையும் சுகமாகவே எதிர்கொன்டோம்.

 நன்பன் ஒருவன் உதவியால் T&B International என்ற நிறுவனத்தில் நேர்முகத்தேர்வில் கலந்து வெற்றிபெற்று கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமான சம்பளத்தில் Senior Programmer ஆக சேர்ந்தேன்.

தொடர்ச்சி இங்கே (ஜப்பான் நாட்டில் வேலை பார்த்த அனுபவம்)