Wednesday, July 16, 2008

என‌து முத‌ல் க‌ண‌ணிப்ப‌ணி (பாகம் 3)

(இதைப்படித்து விட்டு இங்கே வரவும் ( நான் க‌ண‌ணியால் ஈர்க்க‌ப்ப‌ட்ட‌ க‌தை)

BDPS பயில‌க‌த்தில் க‌ண‌ணிப்ப‌யிற்சியை முடித்த‌வுட‌ன் என்ன‌ செய்வது என்று தெரிய‌வில்லை. சென்னை சென்று ச‌ப‌ரி க‌ம்ப்யூட்ட‌ர்ஸ் பயிற்சிய‌க‌த்தில் வேலைத்தேடி சென்றேன் அனுப‌வ‌மில்லைன்னு சொல்லிய‌னுப்பிவிட்டார்க‌ள். BDPS க‌ண‌ணி ப‌யிற்சியின்போது த‌மிழ்நாடு அரசாங்க‌த்தினால் ந‌ட‌த்த‌ப‌ட்ட‌ COBOL, BASIC ம‌ற்றும் FORTRON பாட‌ங்க‌ளுக்கான‌ சான்றித‌ழ் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்று இருந்தேன் அத‌னால் அப்பொழுது இந்திய‌ன் ர‌யில்வே துறையின் க‌ண‌ணி டேட்டா என்ட்ரி வேலைக்கான‌ எழுத்து தேர்வுக்கு ச‌ன்டிகார் வ‌ரும்படி அழைப்பு வ‌ந்திருந்த‌து. யாருடா சொந்த‌ ரூபாய் செல‌வு செய்து இவ்வ‌ள‌வு தூர‌ம் சென்று தேர்வு எழுதுவ‌துன்னு போகாம‌ல் விட்டு விட்டேன்.
சொந்த‌ உசில‌ம்ப‌ட்டியிலேயே க‌ண‌ணி வேலைவாய்ப்புக்கான‌ அதிர்ஷ்ட‌ம் என்னை தேடி வ‌ந்த‌து. ஆமாம் எங்க‌ள் ஊரில் உள்ள‌ ம‌ருந்துப்பொருட்க்க‌ளை மொத்த‌ விற்ப‌னை செய்யும் நிறுவ‌ன‌ம் த‌ன‌து பில் போடும் தேவைக‌ளுக்காக‌ க‌ண‌ணி வாங்கி வைத்திருந்தார்க‌ள். அத‌னை க‌வ‌னிக்கும் பொறுப்புக்கு த‌குந்த‌ ஆள் தேவைப்ப‌ட்டு அத‌ன் உரிமையாள‌ர் திரு வினாய‌க‌ மூர்த்தி அவ‌ர்க‌ள் என்னைத்தேடி வ‌ந்த்தார்க‌ள். உசில‌ம்ப‌ட்டி மீனாட்சி மெடிக‌ல் மார்ட் நிறுவ‌ன‌த்தில் மாத‌ம் 400 ரூபாய் ச‌ம்ப‌ள‌த்துக்கு உட‌னே சேர்ந்துவிட்டேன்.

அப்பொழுது ம‌துரை மாவ‌ட்ட‌த்திலேயே முத‌ன்முத‌லாக‌ க‌ண‌ணியை ஒரு சிறிய‌ வ‌ணிக‌த்த‌ல‌த்துக்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ முத‌ல் நிறுவ‌ன‌ம் உசில‌ம்ப‌ட்டி யில் உள்ள‌ மீனாட்சி மெடிக‌ல் மார்ட் ஆகும். ம‌துரை ந‌க‌ரில் கூட‌ யாரும் ப‌ய‌ன் ப‌டுத்திய‌து இல்லை அந்த‌ப்பெருமையை உசில‌ம்ப‌ட்டி கிராம‌ம் த‌ட்டிச்சென்ற‌து. அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ம‌துரை அதிர்ஷ்ட‌ம் ப‌த்திரிக்கை ம‌ற்றும் திருச்சியில் ஒரு ம‌ருந்துப்பொருள் நிறுவ‌ன‌ம் ம‌ட்டுமே க‌ண‌ணியை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொன்டு இருந்த‌‌து.

MegaByte நிறுவ‌ன‌த்தின் Fact-Finder model ஆன‌ அந்த‌க்க‌ண‌ணி பிராச‌ச‌ர் (8 பிட்) ம‌ற்றும் CombiDos என்ற‌ CP/M ஆப‌ரே‌டிங் வ‌கையைச்சேர்ந்த‌து.

அப்ப‌ழுது எல்லாம் MicroSoft நிறுவ‌ன‌ம் பிர‌ப‌ல‌மே இல்லை. பில்கேட்ஸ் அவ‌ர்க‌ள் ComiDos ஆப‌ரேட்டிங்க்கு MBasic என்ற‌ BASIC interpretor எழுதிக்கொடுத்து பிழைப்பை ஓட்டிக்கொன்டு இருந்தார்.

அந்த‌ க‌ண‌ணியில் வேலை நேர‌ம் போக‌ DBase-II ம‌ற்றும் MBasic ஆகிய‌வைக‌ளில் ப‌யிற்சி எடுத்து என‌து அறிவுப்ப‌சிக்கு தீணி போட்டுக்கொன்டிருந்தேன். ப‌சி அட‌ங்க‌வில்லை. இடையிலே மீனாக்ஷிமெடிக‌ல் மார்ட் வேலையை விட்டுவிட்டு சித‌ம்ப‌ர‌ம் சென்று என‌து பெரிய‌ப்பா வீட்டில் த‌ங்கி இருந்து அன்னாம‌லை ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தில் வேலை தேடினேன். அங்கு க‌ண‌ணி துறையின் பேராசிரிய‌ர் நாக‌ப்பா என்னை நேர்முக‌த்தேர்வுக்கு வ‌ர‌ச்சொல்லி தேர‌வில்லை என்று சொல்லிவிட்டார்.

மீன்டும் மீனாட்சி மெடிக‌ல் மார்ட் இல் வேலைக்கு சேர்ந்தேன். 1991 ம் வ‌ருட‌ வாக்கில்தான் நாமே சொந்த‌மாக‌ க‌ண‌ணி வாங்கி ப‌யிற்சிய‌க‌ம் ந‌ட‌த்தினால் என்ன‌ என்று யோச‌னை வ‌ந்த‌து.

இதன் தொடர்ச்சி இங்கே (விஜய் கம்ப்யூட்டர்ஸ் உசிலம்பட்டி)

சிறிய‌ அள‌விளான‌ க‌ண‌ணி நிர‌ல்

சிறிய‌ அள‌விளான‌ க‌ண‌ணி நிர‌ல்
(how to create small binary executable without the compiler)

க‌ண‌ணி நிர‌ல்க‌ள் C, C++ அல்ல‌து PASCAL மொழிக‌ளின் மூல‌ம் உருவாக்கிட‌ அத‌ற்கென‌ க‌ம்பைல‌ர்க‌ள் தேவை VC++ ம‌ற்றும் DELPHI போன்ற‌ நிர‌லாக்கிக‌ள் இத‌ற்கென‌ ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. நிர‌லாக‌த்தின்போது நாம் எழுதிய‌ உய‌ர்நிலை மொழி நிர‌ல்க‌ள் இய‌க்க‌த்த‌க்க‌ வ‌கையிலான‌ பைன‌ரி நிர‌ல்க‌ளாக‌ மாற்ற‌ப்ப‌டும். அதைத்தான் நாம் இய‌க்கிப்பார்க்க‌முடியும்.

உதார‌ண‌த்துக்கு C++ மொழியில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ myprogram.cpp என்ற‌ நிர‌ல்‍பைலான‌து myprogram.exe என்ற‌ பைன‌ரி பைலாக‌ உருவாக்க‌ப்ப‌டும். myprogram.exe பைலை நாம் இய‌க்கிப்பார்க்க‌லாம்.

மிகச்சிரிய‌ அள‌வினாலான‌ பைன‌ரி நிராலை எப்ப‌டி எளிதாக‌ உருவாக்குவ‌து என்று பார்ப்போம்.

அசெம்பிளி மொழியில் உருவாக்க‌ப்ப‌டும் நிர‌க‌ளின் அள‌வு சிறிய‌தாக‌வே இருக்கும். வின்டோஸ் இய‌க்க‌த்தினுட‌ன் வ‌ரும் DEBUG.EXE என்ற‌ நிர‌லாக்க‌த்தின் மூல‌ம் எப்ப‌டி ஒரு 23 பைட் அள‌விலான‌ பைன‌ரி இய‌க்க‌ நிர‌லை உருவாக்க‌லாம் என்று பார்ப்போம்.

Start->Run மூல‌ம் Run வின்டோவிற்கு வ‌ந்து CMD என்று டைப் செய்து டாஸ் வின்டோவுக்கு வ‌ர‌வும்.


debug என்று டைப்செய்ய‌வும் கீழ்க‌ன்ட‌வாறு வ‌ரும்.

c:\>debug
-

பிற‌கு a100 என்று டைப்செய்ய‌வும் கீழ்க‌ன்ட‌வாறு வ‌ரும்

c:\>debug
-a100
0BA2:0100

பிற‌கு mov dx,10b என்று டைப் செய்ய‌வும், கீழ்க‌ன்ட‌வாறு வ‌ரும்

c:\>debug
-a100
0BA2:0100 mov dx,10b
0BA2:0103

பிற‌கு கீழ்க‌ன்ட‌வைக‌ளை வ‌ரிசையாக‌ டைப் செய்ய‌வும்
c:\>debug
-a100
0BA2:0100 mov dx,10b
0BA2:0103 mov ah,9
0BA2:0105 int 21
0BA2:0107 mov ah,4c
0BA2:0109 int 21
0BA2:010B db "hello world$"
0BA2:0117

db "hello world$" க்குஅடுத்து என்டர் கீ அழுத்திய‌ பின் xxx:0117 ல் வெறுமென‌ இன்னொரு என்ட‌ர் கீ அழுத்த‌வும்.

c:\>debug
-a100
0BA2:0100 mov dx,10b
0BA2:0103 mov ah,9
0BA2:0105 int 21
0BA2:0107 mov ah,4c
0BA2:0109 int 21
0BA2:010B db "hello world$"
0BA2:0117
-

அடுத்து rcx என்று டைப் செய்ய‌வும்.

c:\>debug
-a100
0BA2:0100 mov dx,10b
0BA2:0103 mov ah,9
0BA2:0105 int 21
0BA2:0107 mov ah,4c
0BA2:0109 int 21
0BA2:010B db "hello world$"
0BA2:0117
-rcx
cx 0000
:

இங்கு 17 என்று டைப் செய்ய‌வும்

-rcx
cx 0000
:17

அடுத்து nc:\smallpgm.com என்று டைப் செய்ய‌வும்.

-rcx
CX 0000
:17
-nc:\smallpgm.com

அடுத்து w என்று டைப் செய்ய‌வும்.கீழ்க‌ன்ட‌வாறு வ‌ரும்

-rcx
CX 0000
:17
-nc:\smallpgm.com
-w
Writing 00017 bytes
-

அடுத்து q என்று டைப் செய்ய‌வும்.

dibug லிருந்து வெளி வ‌ந்திட‌லாம். DIR c:\*.com எ என்று க‌ட்ட‌ளை கொடுத்தால் 23 பைட் அள‌விலான‌ நிர‌ல் உருகி இருப்ப‌தை பார்க்க‌லாம்.


அதை இய‌க்க‌ c:\smallpgm என்று க‌ட்ட‌ளை கொடுத்தால் அது இய‌ங்க‌ப்பெற்று "hello world" திரையில் வ‌ருவ‌தைக்கான‌லாம்.

விள‌க்க‌ம்

DOS க‌ட்ட‌ளை 21 ம‌ற்றும் ச‌ர்வீஸ் 9 ஆன‌து எழுத்து வ‌ரிக‌ளை திரையில் கான்பிக்க‌ ப‌ய‌ன் ப‌டுகிற‌து.

0BA2:0100 mov dx,10b - dx எழுத்து வ‌ரியின் முக‌வ‌ரி (கீழே பாருங்க‌ள் 010B என்ற‌ முக‌வரியில் "hello worல்ட்$" இருப்ப‌தைக்கான‌லாம்.)
0BA2:0103 mov ah,9 - ah ச‌ர்வீஸ்
0BA2:0105 int 21 - dos க‌ட்ட‌ளை

DOS க‌ட்ட‌ளை 21 ம‌ற்றும் ச‌ர்வீஸ் 4c ஆன‌து நிர‌லை முடிக்க‌ ப‌ய‌ன் ப‌டுகிற‌து.

0BA2:0107 mov ah,4c -
0BA2:0109 int 21
0BA2:010B db "hello world$"


rcx
எத்த‌னை பைட்க‌ள் பைன‌ரி பைலில் எழுத‌ப்போகின்றோம் என்று சொல்லுகிறோம். நாம் 17 என்று கொடுத்தோம் 17 என்ற‌ hex எண்ணின் த‌ச‌ம‌ ம‌திப்பு 23 ஆகும். அதாவ‌து 23 பைக‌ள் எழுத‌ப்போகிறோம் என்று சொல்லியிருக்கின்றோம்.

nc:\smallpgm
பைன‌ரி பைல் c:\smaalpgm என்ற‌ இட‌த்தில் இருக்கும‌டியாக்க‌ சொல்லுகிறோம்.


w
பைன‌ரி பைலை எழுத‌ச்சொல்லுகிறோம்

ச‌ந்தேக‌ங்க‌ளை கேட்க‌வும் ம‌கிழ்வுட‌ன் காத்திருக்கின்றேன் க‌ளைய‌

நான் க‌ண‌ணியால் ஈர்க்க‌ப்ப‌ட்ட‌ க‌தை. (பாகம் 2)

(இதைப்படித்து விட்டு இங்கு வரவும் (என்னைப்ப‌ற்றி)

நான் க‌ண‌ணியால் ஈர்க்க‌ப்ப‌ட்ட‌ க‌தை.

நான் ம‌துரை, நாக‌மலை புதுக்கோட்டை யில் உள்ள‌ வெள்ளைச்சாமி நாடார் க‌ல்லூரியில் B.Com ப‌டித்துக்கொன்டிருந்தேன், ப‌டிப்பு என்றால் ச‌ராச‌ரிப்ப‌டிப்புத்தான் ச‌ராச‌ரி அரிய‌ர்களுட‌ன் க‌ல்லூரிப்ப‌டிப்பு முடி‌ந்த‌து. தேறாத‌ கார‌ண‌த்தால் M.Com., படிக்க‌ முடிய‌வில்லை. த‌ந்தை ந‌ட‌த்தி வந்த‌ முக‌மைத்தொழிலில் ஐக்கிய‌மாக‌ ம‌ன‌ம் இட‌ம் கொடுக்க்வில்லை. ம‌துரையில் என‌து க‌ல்லூரி ந‌ன்ப‌ர்க‌ளுட‌ன் சுற்றி க‌ல‌க்கிய‌ சந்தோஷ‌மான‌ த‌ருன‌ங்க‌ளை இழ‌க்க‌ விரும்ப‌வில்லை என்ன‌ செய்வ‌து என்று யோசித்தேன்.

என‌க்கு அறிவிய‌ல் எழுத்தாள‌ர் திரு சுஜாதா அவ‌ர்க‌ளின் எழுத்துக்க‌ள் நிர‌ம்ப‌ப்பிடிக்கும் அவ‌ர‌து நாவ‌ல்க‌ள் ம‌ற்றும் அறிவிய‌ல் க‌ட்டுரைக‌ளை விரும்பிப்ப‌டிப்பேன் அப்ப‌டித்தான் அவ‌ர‌து சிலுக்கான் சில்லுப்புர‌ட்சி புத்த‌க‌த்தை வாசிக்க‌ நேர்ந்த‌து. க‌ண‌ணிமேல் காத‌ல் பிற‌ந்த‌ முத‌ல் கார‌ண‌ம் இதுதான். அதே நேர‌த்தில் ம‌துரையில் உள்ள‌ BDPS என்ற‌ க‌ண‌ணி ப‌யிற்சிய‌க‌த்தின் விள‌ம்ப‌ர‌மும் நாழித‌ழ்க‌ளின் பார்த்தேன்.

ம‌துரையின் ச‌ந்தோஷ‌மான‌ த‌ருன‌ங்க‌ளை தொட‌ர‌ அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் என்று என்னி ம‌துரையில் ச‌க்தி சிவ‌ம் தியேட்ட‌ர் க்கு அருகில் உள்ள‌ BDPS ப‌யில‌க‌த்தை பார்த்து வ‌ர‌ச்சென்றேன். க‌ண‌னி அதிக‌ம் புழ‌ங்கியிராத‌‌ அந்த‌க்கால‌த்தில் PDPS பயில‌க‌த்தில் க‌ண‌ணிக‌ளை பார்த்த‌வுட‌ன் மெய்ம‌ற‌ந்தேன்.

க‌ண்ணாடி அறையில் வ‌ரிசையாக‌ 4 க‌ண‌னிக‌ளை வைத்திருந்த‌ன‌ர். ப‌ச்சைப்பாஸ்ப‌ர‌ஸ் திரைக‌ளில் க‌ன்ன‌டித்துக்கொன்டிருந்த‌ க‌ர்ஸ‌ர் அத‌ன் முன்னால் கீபோர்டுட‌ன் விளையாடிக்கொன்டும் இருந்த‌ மாண‌வ‌ மாண‌விய‌ர்க‌ள், குளிரூட்ட‌ப்ப‌ட்ட‌ அறையின் குளுமை, வாச‌னை, குளிர்சாத‌ன‌த்தின் உர்ர்ர்ரென்ற‌ உறும‌ல் ம‌ற்றும் நிச‌ப்த்தின் இடையான‌ கீபோர்டை த‌ட்டும் ச‌ப‌த்த‌ம் ம‌ட்டும். இவைக‌ளை க‌ன்ட‌வுட‌ன் என‌து ம‌ன‌ம் முடிவுசெய்துவிட்ட‌து இதை ப‌டித்தே தீர‌வேன்டுமென்று. மூன்றுமாத‌ ப‌யிற்சிக்க‌ட்ட‌ன‌ம் 700 ரூபாய், என்ற‌ முறையில் என‌து COBOL வ‌குப்பு ஆர‌ம்ப‌மாகிய‌து. மேட‌ம் காவ்யா அவ‌ர்க‌ள்தான் எங்க‌ள் ஆசிரியை.

தின‌மும் இரும‌ணி நேர‌ம் பாட‌ம் அப்புற‌ம் ஒரும‌ணி நேர‌ம் செய்முறைவ‌குப்பு. அந்த‌ ஒரும‌ணிநேர‌ செய்முறை வ‌குப்புக்காக‌ நாள்முழுதும் ஏங்கி காத்துக்கிட‌ப்பேன். COBOL நிர‌லாக்க‌த்தின் சூட்சும‌ங்க‌ள் என‌க்கு எளிதில் புரிந்த‌ன‌. அப்பொழுதே BDPS ப‌‌யில‌க‌த்தில் முத்திரை ப‌திக்க‌ துவ‌ங்கிவிட்டேன்.

பள்ளி ம‌ற்றும் க‌ல்லூரிக்கால‌ங்க‌ளில் க‌ணித‌ம் த‌விற‌ ம‌ற்ற‌ பாட‌ங்க‌ளெல்லாம் என்க்கு வேப்ப‌ங்காய்தான். க‌ணித‌த்திலும் தேற்ற‌ங்க‌ள் ம‌ற்றும் அல்ஜீப்ரா என‌க்கு மிக‌வும் பிடித்தமான‌து ஆகும். த‌ர்க்க‌ரீதியிலான‌ நோக்குட‌ன் விடை க‌ன்டுபிடிக்கும் வித்தைக‌ள் கொன்ட‌ மென்பொருள் நில‌ராக்க‌ம் என‌க்கு பிடித்துப்போன‌தில் விய‌ப்பேதும் இல்லை.

BDPS ‌ப‌யில‌க‌த்தில் வித்தியாச‌மான‌ ம‌ற்றும் பெரிய‌ அள‌விளான‌ க‌ண‌ணி நிர‌ல்க‌ளை செய்து குறிப்பிடும்ப‌டியான‌ பெய‌ர் பெற்றேன்.

அத‌ன்பிற‌கு அங்கேயே BASIC ம‌ற்றும் DBASE-II நிர‌லாக்க‌ங்க‌ளை க‌ற்றுத்தேர்ந்தேன்.

அப்பொழுதெல்லாம் க‌ண‌ணி ப‌ற்றிய‌ புத்த‌க‌ம் வாங்க‌ காசு இருக்காது, ஆக‌வே ம‌துரையில் உள்ள‌ ச‌ர்வோத‌ய‌ இல‌க்கிய‌ ப‌ன்னை, ம‌ல்லிகை ம‌ற்றும் ஹிக்கின் பாதாம்ஸ் புத்த‌க‌க்க‌டைக்கு சென்று புத்த‌க‌ம் பார்க்கும் சாக்கில் ப‌டித்து, முக்கிய‌மான‌வைக‌ளை ப‌ஸ் டிக்கெட்டில் பிட் எழுதி கொன்டு வ‌ருவேன்.

துரை க்தி சிவம் தியேட்டருக்கருகில் உள்ள‌ BDPS ‌ணி யிலத்தில் நான் டித்தபோடு அங்கு ணியாற்றியர்கள்.

மேலாளர் ம‌ணி
உதவி மேலாளர் ர‌‌வி

ஆசிரியர்கள்
1). மேட‌ம் காவ்யா (ம‌துரை காம‌ராச‌ர் ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்தின் நூல‌க‌த்தில் ப‌ணிச்ய்து வ‌ன்தார்)
2). பிரேம் ச‌ந்த் (மேட‌ம் காவ்யாவுட‌ன் காத‌ல் திரும‌ன‌ம் செய்து, ம‌துரையில் க‌ண‌ணி விற்ப‌னைய‌க‌ம் ந‌ட‌த்தி வ‌ந்தார்)
3). ர‌ங்க‌ராஜ‌ன் ( பிற‌கு ம‌துரையில் க‌ண‌னி ப‌யில‌க‌ம் ந‌ட‌த்திவ‌ந்தார்)
4). பிர‌தீப், நாக‌ம‌லைப்புதுக்கோட்டை (PDPS இல் ப‌டித்து அங்கேயே ப‌ணியாற்றினார். மிக‌ திறைமைசாலியான‌ இவ‌ர் பிற‌கு நாக‌ம‌லை புதுக்கோட்டையிலேயே க‌ண‌ணிப்ப‌யில‌க‌ம் ந‌ட‌த்தி வ‌ந்தார் , நான் ஜ‌ப்பானுக்கு கிள‌ம்பிய‌ நேர‌த்தில் சென்னைக்கு ந‌க‌ர்ந்து வ‌ந்தார் அத‌ன்பிற‌கு தொட‌ர்பு இல்லை, (தொட‌ர்பபு கொள்ள‌ ஆவ‌ல்)


என்னுடன் PDPS யிலத்தில் டித்தர்கள்

1)டி.டி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் திரும‌லைச்சாமி, ஒட்ட‌ன்ச‌த்திர‌ம்
2). ச‌ர்புதீன் (சிங்க‌ப்பூர் க்கு சென்றுவிட்டார் அவ‌ர‌து மாமா யானைக்க‌ல்லில் ப‌ழ‌ ஏஜ‌ன்ட்)
3). சோமு என்ற‌ழைக்க‌ப்ப‌டும் சோம‌சுந்த‌ர‌ம்
4). வில்லிய‌ம்ஸ், தின்டுக்க‌ல் (இவ‌ருட‌ன் நிறைய‌ தின்டுக்க‌ல் மாண‌வ‌ர்க‌ள் ப‌டித்த‌ன‌ர், தின‌மும் ர‌யில் மூல‌ம் ம‌துரைக்கு குழாமாக‌

வ‌ந்துபோவ‌ர், இவ‌ர்தான் அந்த‌ குழுவுக்கு த‌லைவ‌ர், பிறகு தின்டுக்க‌ல் PDPS ப‌ப‌யில‌க‌த்தின் மேலாள‌ராக‌ இருந்தார்)
5). மோக‌ன் (ம‌துரை ர‌யில்வே கால‌னியிலிருந்து வ‌ந்தார் பிற‌கு ம‌துரை ர‌யில் நிலைய‌ க‌ண‌ணி அலுவ‌ல‌க‌த்திலேயே ப‌ணி செய்தார்).
(பிரேம், வாசு ம‌ற்றும் ல‌ட்சும‌ன‌ன் இவ‌ர்க‌ளும் ர‌யில்வே கால‌ணியை சேர்ந்த‌வ‌ர்க‌ள்)
இன்னும் நிறைய‌பேர் ப‌டித்த‌ன‌ர் பெய‌ர் ஞாப‌க‌ம் இல்லை

தொடர்ச்சி இங்கே ( என‌து முத‌ல் க‌ண‌ணிப்ப‌ணி )

Tuesday, July 15, 2008

என்னைப்ப‌ற்றி (பாகம் 1)

நான் ம‌துரை மாவ‌ட்ட‌ம் உசில‌ம்ப‌ட்டி கிராம‌த்தில் பிறந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன். 1993 க‌ளில் உசில‌ம்ப‌ட்டியில் க‌ண‌ணிப்ப‌யில‌க‌ம் ந‌ட‌த்திவ‌ந்திருந்தேன். அந்நாட்க‌ளில் நான் த‌யாரித்து ச‌ந்தைப்ப‌டுத்திக்கொன்டிருந்த‌ மென்பொருட்க‌ள் தென் த‌மிழ்நாட்டிட்ல் பிர‌ப‌ல‌மாக‌ இருந்தது. வ‌ணிக‌ க‌ன‌க்கு ப‌திவிய‌ல், ச‌ர‌க்கிருப்பு மேலான்மை, குழ‌ந்தைக‌ள் ப‌யிலும் மென்பொருட்க‌ள் போன்ற‌வைக‌ள் ப‌ர‌வ‌லாக‌ இருந்த‌து. நான் தயா‌ரித்து அளித்த‌ வைர‌ஸ் நீக்கும் மென்பொருள் மிகவும் பிர‌ப‌ல‌மாக‌ இருந்த‌து. அந்நாட்க்க‌ளில் "த‌மிழ் க‌ம்ப்யூட்ட‌ர்" இத‌ழில் நிறைய‌ க‌ண‌னி குறித்த‌ க‌ட்டுரைக‌ள் எழுதியிருக்கின்றேன். கால‌ ஒட்ட‌த்தில், சென்னைக்கு ந‌க‌ர்ந்து பிறகு ஜ‌ப்பான் நாட்டுக்கு சென்று த‌ற்பொழுது அமெரிக்கா நாட்டில் ப‌ணியாற்றி வ‌ருகின்றேன்.

நல்லதொரு படிப்பு என்பது படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைக்க மட்டுமே பயன் படுகின்றது. வேலைக்குள் சேர்ந்தபிறகு எல்லா இழவுமே ஒன்றுதான்.

முதல் 6 மாத காலத்துக்கு நீங்கள் கண்கானிக்கப்படுவீர்கள், அதற்க்குள் எத்துனை ஆர்வமாக இருக்கின்றீர்கள் மற்றும் வேலையை கற்றுக்கொள்கின்றீர்கள் என்பதைப்பொறுத்துதான் உங்கள் பணி வாழ்க்கையின் தலைவிதி நிர்னயிக்கப்படுகின்றது. அதன்பிறகு எந்த அளவுக்கு உங்கள் தலைமை அதிகாரியின் பொறுப்புகளை மற்றும் வேலை-அழுத்தத்தை குறைக்கின்றீர்கள் , எந்தாளவுக்கு உங்கள் வேலையினை நேசிக்கின்றீர்கள், என்பதை பொறுத்தே பணி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கின்றன,

உசிலம்பட்டி கிராமத்தின்,சராசரி படிப்புக்கும் கீழான, B.Com தேறாத மற்றும் தொரச்சியாக 3 வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசத்தெரியாத என்னை வெற்றிகரமாக உலக நாடுகளில் பணியாற்றி, IIT தங்கப்பதக்கம் வாங்கிய மாணவர்கள்கூட எனக்குக்கீழே வேலை பார்க்கும் அளவுக்கு முன்னேற்றியது ஆர்வமும், திறமை மட்டுமல்ல, நேரமும் தான்.

இவையெல்லாம் விட நல்லோர்கள் மனதார செய்த உதவியும்தான்.

என‌து க‌ணிப்பீட்டு வாழ்கையின் வ‌ள‌ர்ச்சிப்ப‌தைக்கு வ‌ழிகாட்டி உத‌வி செய்த‌தில் உசிலம்பட்டி மீனாஷி மெடிக்கல் மார்ட் உரிமையாளர் என் முதலாளி, திரு விநாயக மூர்த்தி

உசிலம்பட்டி பெரீஸ் பிஸ்க்கெட் நிறுவன உரிமையாளர்கள் திரு மகேந்திரவேல், மற்றும் அவரது சகோதரர். திரு பால சுப்ரமணியன்.

சென்னை பேராசிரிய‌ர் திரு டாக்ட‌ர் பெ.ச‌ந்திர‌போஸ் அவ‌ர்க‌ள்,

உசிலம்பட்டி V.K.S.பிஸ்கெட் உரிமையார் திரு V.K.S.சுப்பிரமணியன்.

உசிலம்பட்டி S.M.S.R.உரக்கடை உரிமையாளர் திரு S.M.S.R.சந்திரபோஸ்.

உசிலம்பட்டி கண்மார்க் ஊறுகாய் நிறுவனர் திரு செல்வராஜ்.

த‌மிழ் க‌ம்ப்யூட்ட‌ர்" த‌மிழ் க‌ண‌ணி இத‌ழ் ஆசிரிய‌ர் திரு ஜெய‌கிருஷ்ன‌ன் அவர்கள்

மற்றும் சென்னை கேசவன் கம்ப்யூட்டிங் நிறுவனர் திரு J.கேசவர்த்தனன் அவ‌ர்க‌ளும் பெரும்ப‌ங்கு வகித்தவர்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தொடர்ச்சி இங்கே ( நான் க‌ண‌ணியால் ஈர்க்க‌ப்ப‌ட்ட‌ க‌தை.)