Wednesday, July 16, 2008

என‌து முத‌ல் க‌ண‌ணிப்ப‌ணி (பாகம் 3)

(இதைப்படித்து விட்டு இங்கே வரவும் ( நான் க‌ண‌ணியால் ஈர்க்க‌ப்ப‌ட்ட‌ க‌தை)

BDPS பயில‌க‌த்தில் க‌ண‌ணிப்ப‌யிற்சியை முடித்த‌வுட‌ன் என்ன‌ செய்வது என்று தெரிய‌வில்லை. சென்னை சென்று ச‌ப‌ரி க‌ம்ப்யூட்ட‌ர்ஸ் பயிற்சிய‌க‌த்தில் வேலைத்தேடி சென்றேன் அனுப‌வ‌மில்லைன்னு சொல்லிய‌னுப்பிவிட்டார்க‌ள். BDPS க‌ண‌ணி ப‌யிற்சியின்போது த‌மிழ்நாடு அரசாங்க‌த்தினால் ந‌ட‌த்த‌ப‌ட்ட‌ COBOL, BASIC ம‌ற்றும் FORTRON பாட‌ங்க‌ளுக்கான‌ சான்றித‌ழ் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்று இருந்தேன் அத‌னால் அப்பொழுது இந்திய‌ன் ர‌யில்வே துறையின் க‌ண‌ணி டேட்டா என்ட்ரி வேலைக்கான‌ எழுத்து தேர்வுக்கு ச‌ன்டிகார் வ‌ரும்படி அழைப்பு வ‌ந்திருந்த‌து. யாருடா சொந்த‌ ரூபாய் செல‌வு செய்து இவ்வ‌ள‌வு தூர‌ம் சென்று தேர்வு எழுதுவ‌துன்னு போகாம‌ல் விட்டு விட்டேன்.
சொந்த‌ உசில‌ம்ப‌ட்டியிலேயே க‌ண‌ணி வேலைவாய்ப்புக்கான‌ அதிர்ஷ்ட‌ம் என்னை தேடி வ‌ந்த‌து. ஆமாம் எங்க‌ள் ஊரில் உள்ள‌ ம‌ருந்துப்பொருட்க்க‌ளை மொத்த‌ விற்ப‌னை செய்யும் நிறுவ‌ன‌ம் த‌ன‌து பில் போடும் தேவைக‌ளுக்காக‌ க‌ண‌ணி வாங்கி வைத்திருந்தார்க‌ள். அத‌னை க‌வ‌னிக்கும் பொறுப்புக்கு த‌குந்த‌ ஆள் தேவைப்ப‌ட்டு அத‌ன் உரிமையாள‌ர் திரு வினாய‌க‌ மூர்த்தி அவ‌ர்க‌ள் என்னைத்தேடி வ‌ந்த்தார்க‌ள். உசில‌ம்ப‌ட்டி மீனாட்சி மெடிக‌ல் மார்ட் நிறுவ‌ன‌த்தில் மாத‌ம் 400 ரூபாய் ச‌ம்ப‌ள‌த்துக்கு உட‌னே சேர்ந்துவிட்டேன்.

அப்பொழுது ம‌துரை மாவ‌ட்ட‌த்திலேயே முத‌ன்முத‌லாக‌ க‌ண‌ணியை ஒரு சிறிய‌ வ‌ணிக‌த்த‌ல‌த்துக்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ முத‌ல் நிறுவ‌ன‌ம் உசில‌ம்ப‌ட்டி யில் உள்ள‌ மீனாட்சி மெடிக‌ல் மார்ட் ஆகும். ம‌துரை ந‌க‌ரில் கூட‌ யாரும் ப‌ய‌ன் ப‌டுத்திய‌து இல்லை அந்த‌ப்பெருமையை உசில‌ம்ப‌ட்டி கிராம‌ம் த‌ட்டிச்சென்ற‌து. அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ம‌துரை அதிர்ஷ்ட‌ம் ப‌த்திரிக்கை ம‌ற்றும் திருச்சியில் ஒரு ம‌ருந்துப்பொருள் நிறுவ‌ன‌ம் ம‌ட்டுமே க‌ண‌ணியை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொன்டு இருந்த‌‌து.

MegaByte நிறுவ‌ன‌த்தின் Fact-Finder model ஆன‌ அந்த‌க்க‌ண‌ணி பிராச‌ச‌ர் (8 பிட்) ம‌ற்றும் CombiDos என்ற‌ CP/M ஆப‌ரே‌டிங் வ‌கையைச்சேர்ந்த‌து.

அப்ப‌ழுது எல்லாம் MicroSoft நிறுவ‌ன‌ம் பிர‌ப‌ல‌மே இல்லை. பில்கேட்ஸ் அவ‌ர்க‌ள் ComiDos ஆப‌ரேட்டிங்க்கு MBasic என்ற‌ BASIC interpretor எழுதிக்கொடுத்து பிழைப்பை ஓட்டிக்கொன்டு இருந்தார்.

அந்த‌ க‌ண‌ணியில் வேலை நேர‌ம் போக‌ DBase-II ம‌ற்றும் MBasic ஆகிய‌வைக‌ளில் ப‌யிற்சி எடுத்து என‌து அறிவுப்ப‌சிக்கு தீணி போட்டுக்கொன்டிருந்தேன். ப‌சி அட‌ங்க‌வில்லை. இடையிலே மீனாக்ஷிமெடிக‌ல் மார்ட் வேலையை விட்டுவிட்டு சித‌ம்ப‌ர‌ம் சென்று என‌து பெரிய‌ப்பா வீட்டில் த‌ங்கி இருந்து அன்னாம‌லை ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தில் வேலை தேடினேன். அங்கு க‌ண‌ணி துறையின் பேராசிரிய‌ர் நாக‌ப்பா என்னை நேர்முக‌த்தேர்வுக்கு வ‌ர‌ச்சொல்லி தேர‌வில்லை என்று சொல்லிவிட்டார்.

மீன்டும் மீனாட்சி மெடிக‌ல் மார்ட் இல் வேலைக்கு சேர்ந்தேன். 1991 ம் வ‌ருட‌ வாக்கில்தான் நாமே சொந்த‌மாக‌ க‌ண‌ணி வாங்கி ப‌யிற்சிய‌க‌ம் ந‌ட‌த்தினால் என்ன‌ என்று யோச‌னை வ‌ந்த‌து.

இதன் தொடர்ச்சி இங்கே (விஜய் கம்ப்யூட்டர்ஸ் உசிலம்பட்டி)

No comments: