Wednesday, August 06, 2008

விஜய் கம்ப்யூட்டர்ஸ் உசிலம்பட்டி (பாகம் 4)

(இதைப்படித்து விட்டு இங்கே வரவும் (என‌து முத‌ல் க‌ண‌ணிப்ப‌ணி)

கணணிப்பயிலகம் ஆரம்பிக்க நினைத்து உடனே செயற்படுத்தினேன். மதுரை யில் உள்ள SSI நிறுவனத்திடம் நாற்ப்பத்தைந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி, ஒரு சிவா பெர்சனல் கணனி 64கே நினைவகம், இரண்டு 360கே பிளாப்பிடிரைவ், வெள்ளை த்திரை, செர்வோ யூபிஎஸ், 80 காலம் எப்சன் டாட்மாட்ரிக்ஸ் பிரின்டர், 4 டெஸ்க் மற்றும் பென்ச் அனைத்தும் வாங்கி உசிலம்பட்டியில் உள்ள சங்கராமூர்தியா பிள்ளை தெரு வில் கனரா வங்கிக்கு அருகில் 800 ரூபாய் மாதவாடகை பிடித்து விஜய் கம்ப்யூட்டர்ஸ் ஆரம்பித்துவிட்டேன். வகுப்புகள் பேசிக், போர்ட்ரான், கோபால், மற்றும் டிபேஸ்3. மூன்றுமாத பயிற்சி 700 ரூபாய்க்கட்டனம் என்று ஆரம்பித்தாகிவிட்டது. ஆரம்பித்த புதிதில் 5 பேர் வந்து படித்தனர், அவர்களும் புரிந்த்துகொள்ள மிகக்கடினமாக இருக்குன்னு சொல்லி பாதியில நின்றுவிட்டர்கள் பிறகு உசிலம்பட்டியில் இருக்கும் பள்ளிகளுகெல்லாம் சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து மாணவர்களிடம் சொல்லசொன்னேன், அவர்களும் ஆதரவளித்தார்கள் விஜய் கம்ப்யூட்டரில் மாணவர்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக உசிலம்பட்டியில் உள்ள S.D.A பள்ளியிலிருந்து நிறைய மாணவர்கள் வந்து படித்தனர். எப்படியோ வரவுக்கும், பராமரிப்புக்கும் சரியாகத்தான் போய்க்கொன்டிருந்தது.

அப்பொழுதுதான் எனது சித்தப்பா சங்கர‌பான்டி (விக்கிரமங்கலம் ஊரில் மெடிக்கல்ஸ் வைத்திருக்கின்றார்) அவர்கள் தனது மெடிகல் கடையின் கணக்குப்பதிவினை கணணியில் போட்டுத்தரும்படி கேட்டார். அவருக்காக COBOL நிரலில் ஒரு கணக்கு மென்பொருள்தயார்செய்து அவரது கணக்குபதிவுகளைபோட்டு பேரேடுகள், லாபநட்ட கணக்கு மற்றும் ஐந்தொகை தயார்செய்து கொடுத்தேன். அதுக்கு 300 ரூபாய் கொடுத்தார். பிறகு அதையே FOXPRO வில் தாரித்து உசிலம்பட்டியில் இருக்கும் V.K.S.பிஸ்கட் நிறுவணத்துக்கு 7000 ரூபாய்க்கு விற்றேன். SOFT ENTRY என்ற பெயர் கொன்ட அந்த மென்பொருள் உன்மையில் TALLY package ஐ விட எளிமையான முறையில் பயன்படுத்தும் வகையில் இருந்தது. தினக்குறிப்புகளை மட்டும் பதிந்தால் போதும் அதுவே அனைத்து இடங்களிலும் பதிவுசெய்து பேரேடு, லாபநட்ட கணக்கு மற்றும் ஐந்தொகை கணக்கு அனைத்தும் உடனே தயாராகிவிடும். இதனை கேள்விப்பட்டு உடனே உசிலம்பட்டியில் இருக்கும் பெரீஸ் பிஸ்கெட் நிறுவனம், S.M.S.R உர நிறுவனம், கண்மார்க் ஊறுகாய் நிறுவனம் அனைவரும் இம்மென்பொருளை வாங்கி உபயோகித்தனர்.

பெரீஸ் பிஸ்க்கெட் நிறுவன உரிமையாளர் திரு.பெரீஸ் மகேந்திர வேல் அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்து நிறையா வாயிப்புகள் கொடுத்தார். அனைத்தையும் வெற்றிகரமாக முடித்தேன். அவரது வியாபார தொடர்புகள்மூலம் நிறைய வாய்ப்புகள் வந்தன.

கணக்குப்பதிவுமட்டுமல்லாமல் சரக்கிருப்பு பராமரிப்பு, விற்பனை போன்ற மென்பொருள்களும் தயாரித்து விற்ற ஆரம்பித்தேன், நன்றாக விற்பனையானது. மெதுவாக மதுரை, தேனி, பெரியகுளம், தின்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ஊர்களிலும் விற்பனை செய்தேன்.

இடையே உசிலம்பட்டியில் உள்ள S.D.A பள்ளியில் பகுதி நேர கணணி ஆசிரியர் வேலைக்கு வரும்படி கேட்டனர் மாணவர்களிடையே விஜய் கம்புயூட்டஸ் க்கு நல்ல‌ பெயர் வரும் என்று என்னி சரி என்று சேர்ந்துவிட்டேன். மாணவர்களுக்கு செய்முறை வகுப்பில் செயல் கொடுக்க சரியான மென்பொருள் இல்லாத காரனத்தினால் நானே எளிமையான வினா எழுப்பி பதில்வாங்கி சரியா தவறா என்று சொல்லும் மென்பொருள் தயாரித்தேன் அதை மாணவர்களுக்கு செயல்முறை வகுப்பில் கொடுத்தேன், பள்ளியின் முதல்வர் ஜான்சன் அவர்கள் அதைபார்த்து இதைப்போலவே இன்னும் நிறைய செய்யசொன்னார் இதேவகையில் எழு வித்தியாசமான மென்பொருட்க்கள் செய்து அதை 500 ரூபாய்க்கு அதே பள்ளியில் விற்றேன். பிறகு அதையும் பள்ளிகளில் 4500 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தேன், நல்ல அமோகமான வரவேற்பு இருந்தது. டாஸ் ஆபரேடிங் முறையில் இயங்கும் அந்த மென்பொருட்களானது டர்போ பேசிக் மற்றும் டர்போ பாஸ்கல் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். வின்டோஸ் புழங்கப்படாத அந்த காலத்தில் எனது மாணவர்களுக்கான் மென்பொருட்கள் மதுரை மாவட்டத்தின் பள்ளிகளுக்கிடையே மிகவும் பிரசித்தம். ஏதாவது பள்ளியில் புதிதாக கணணி வாங்குகிறார்கள் என்றால் நான் அங்கே சென்றுவிடுவேன், விற்பனை நிச்சயம்.
இதைத்தொடர்ந்த்து பள்ளிகளுக்கு சம்பளப்பட்டியல் தாயாரிக்கும் மென்பொருள் செய்து தரும்படி உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல் நிலை பள்ளி யிலிருந்து கேட்டர்கள் செய்து கொடுத்தேன் அதைத்தொடர்ந்து உசிலை T.E.L.C. மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் கணணிவாங்கி எனது மென்பொருட்களை உபயோகித்தனர்.

1993ம் வருடம் உசிலம்பட்டியில் பெரும்பாலான நிறுவனங்கள், பள்ளிகளில் எனது மென்பொருட்ட்களை உபயோகித்து கணணிகளை முழுவீச்சில் உபயோகித்துக்கொன்டிருந்தனர். அந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலேயே வைத்து வியாபரத்தலங்களில் கணனி முழுஅளவில் உபயோகப்படுத்தப்பட்ட இடம் உசிலம்பட்டி கிராமமாகும் அது எனக்கு பெருமையாக இருந்தது.

ஒருநாள் மதுரையில் உள்ள ஒரு பள்ளியின் தாளாளரிடம் எனது மென்பொருட்களை பற்றிய செய்முறை விளக்கத்துக்காக அனுமதி வாங்கியிருந்தேன். நீன்டநாட்களாக கேட்டிருந்த எனக்கு மனமிறங்கி ஒருநாள் ஒதுக்கினார். அதற்கு முந்தியநாள் செய்முறை விளக்கத்துக்கான டிஸ்க்குகளை தயார் செய்துகொன்டிருந்தேன். செய்துமுடித்ததும் இயக்கிப்பார்த்தேன் எதுவுமே இயங்கவில்லை. குழப்பமாகி வேரு ஒரு பிளாப்பியில் தாரித்துப்பார்த்தும் இயங்கவில்லை கணனியில் பழுதா இல்லை மென்பொருள் நிரலில் தவறா இல்லை பிளாப்பி யில் பழுதா என்று குழம்பிவிட்டேன். சரி மாலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் எனக்கு அப்பொழுது தெரியாது எனது கணணி ப்பாதையின் திசை அன்றைய மாலைப்பொழுதில் புரட்டிப்போடப்பட போகிறது என்று. ஆமாம் எனது வாழ்கைத்தொழிலின் போக்கு அன்றிரவு புரட்டிப்போடப்பட்டது.

தொடர்ச்சி இங்கே (வைரஸுடனான முதல் அனுபவம்)

2 comments:

amaravel said...

very proud of you matchan.amaravel dindigul

amaravel said...

very proud of you matchan.amaravel dindigul