Tuesday, August 08, 2017

சான் பிரான்ஸிஸ்கோ வில் தோன்றிய சிவலிங்கம் (கட்டுக்கதை)

என்னுடன் வேலைபார்க்கும் ஒரு அமெரிக்கர் சொன்னார் 20 வருடங்களுக்கு முன், சான்பிராண்ஸிஸ்கோ பூங்கவில் சிவன் சிலை கிடைத்ததுஅதை இந்தியர்கள் வழிபட்டனர், உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். எனக்கோ ஆச்சரியமாக இருந்தது.

சமீபத்தில்தான் ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இங்கே சான்பிரான்ஸிஸ்கோ வந்திருந்து ஒரு கருத்தரங்கத்தில் பைந்தமிழர்கள் எப்படி கடலோடி உலகத்தை இனைத்து வைத்திருந்தனர் என்று விளக்கினார் ஆகா தமிழண்டா என்ற பரவசத்தில் மெய்மறப்பில் இருந்துகொண்டிருந்தேன்.

இவர் வேறு சிவன் சிலை பற்றி சொல்லிவிட்டார் அதுவும் சான்பிராண்ஸிஸ்கோ நகரானது கடலோரம் மற்றும் ஜப்பானிலிருந்து நேராக கடலில் கிளம்பினால் சான்பிரான்ஸிஸ்கோ வில்தான் நிற்கும். ஆகா நம்மவர்கள் முன் காலத்திலேயே இங்கு வந்து கொடி நட்டுப்போயிருக்கின்றார்கள் போல என்று
எனக்கு பரபரப்பாகி அதுகுறித்து கூகிளில் தேடினேன். முடிவு ச்சீ என்றாகிவிட்டது.

1993ம் ஆண்டு அமெரிக்கவில் சான் பிரான்ஸிசஸ்கோ நகரத்தில் உள்ள கோல்டன் கேட் பூங்கவில் ஓரிடத்தில், தெருக்களில் வாகனங்கள் நுளையாமல் தடுக்கும் கல்லை தேவையற்ற கருத்தில் கொண்டுவந்து போட்டனர். அந்த கல்லும் பார்ப்பதற்கு சிவலிங்கம் போலவே இருந்தது.

அதை தற்செயலாக கண்ட பாபா காளிதாஸ் (இவர் இந்துமதத்தில் விருப்பம் கொண்ட அமெரிக்கர் பெயர் michael-bowen), இதை சிவலிங்கம் என்று அறிவித்தார். அத்ற்கு வார்னிஷ் பூசி பட்டை அடித்து மெருகுபடுத்தி, தானே தோன்றிய சிவலிங்கம் என்று அறிவிப்பு விட்டார்.

விடுவார்களா அங்கே இருக்கும் மூடநம்பிக்கை கொண்ட இந்தியர்கள் உடனே மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து, பூ மாலை போட்டு , பாலாபிஷேகம் செய்து, மனியடித்து பூசை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இது தானாகவே இங்கே தோன்றியது நம்பினர். பக்திப்பரவசத்தில் மெய்மறந்து யார் சொல்லுவதையும் காது கொடுத்துகேட்க மறுத்தனர்.

நாளுக்குநாள் கூட்டம் அதிகமாகிகொண்டே போனது. சிறு கடைகளும் பிச்சைக்காரகளும் கூட ஆரம்பித்தனர். கோவில் கட்டவும் தீர்மானிக்கப்பட்டது..

பூங்காச் சரகர்களும், நகர காவலர்களும் இது வெறும் போக்குவரத்துத் தடைக் கல்தான் இதை விடுவிடுங்கள் என்று சொல்லிப்பார்த்தனர்.  யாரும் கேட்ப்பதாய் இல்லை. பிறகு அதை அப்புறப்படுத்த தீர்மானித்தனர். பாபா காளிதாஸ் மற்றும் இந்து அமைப்பினரும் அப்புறப்படுத்த மறுத்தனர். விசயம் நீதி மன்றத்துக்கும் போனது.

நீதிமன்றமும் சரி, அவர்களது நம்பிக்கை அப்படியென்றால் விட்டு விடுங்கள் அவர்களே வைத்துக்கொள்ளட்டும், ஆனால் வீடுக்கு எடுத்துக்கொண்டு போய்விடனும், தேவையில்லாமல் பூங்காவை அசிங்கப்படுத்தக்கூடாதுன்னு தீர்ப்பு சொன்னது.

காளிதாஸ் பாபாவும் அதைத் தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று வைத்துக்கொண்டார். அவர் 2009 ம் ஆண்டு இறந்து விட்டார். லிங்கம் என்றழைக்கப்படுகின்ற அந்தக்கலானது அந்த இன்னுமும் அவர் வீட்டிலேதான் இருக்கின்ற மாதிரி தெரிகின்றது.

இந்நேரம் இதுமட்டும் தமிழ்நாடாய் இருந்திருந்தால், பெரிய கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு மோடி வந்திருப்பார்.

இந்த வீடியோவைப்பாருங்கள்