Thursday, August 25, 2016

உலகின் முதல் பகுத்தறிவாளன் தோன்றிய ஏதன்ஸ் நகரின் தற்பொழுதைய நிலமை



உலகின் முதல் பளிங்குக் கற்களால் நவீன கட்டுமான உத்தியுடன் 2500 வருடங்களுக்கு முன்னர் ஏதன்ஸ் நகரில் கட்டப்பட்ட பார்த்தனான் கட்டிடத்தை பார்க்க ஆவலாக சென்றிருந்தேன். பார்த்தவுடன் திகைப்பும் சோகமும்தான் கொன்டேன்.

நாமெல்லாம் 1000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலை சிலாகித்துப்பேசுகின்றோம். ஆனால் 2500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட பார்த்தனான் கட்டிடத்தை சிறப்பாகக் கட்டி திறமையை பூரிப்புடன் உலகுக்கு வெளிப்படுத்திய கிரேக்கர்கள் அதை பறிகொடுத்து விட்டு கலைத்திறமைக்கு மைல் கல்லாயிருந்த கட்டிடங்கள், சிற்ப்பங்களை அனைத்தும் தொலைத்து சோகத்துடன் இருப்பதுதான் கொடுமை. தொலைந்தவைகளை தேடிஎடுத்து எழுப்பிக் கொன்டேதான் இருக்கின்றனர்.

பாருங்கள் தற்பொழுதுள்ள கட்டிடத்தில் எத்துனை ஒட்டுக்கள்.

எதீனா எனும் பெண் கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோவில் கட்டிடம் 2ம் நூற்றாண்டிலேயே கிருத்துவ மதவெறியர்களாக் தீக்கிரையாக்கப்பட்டது. பின்னர் கத்தோலிக்க சர்ச் ஆக்கப்பட்டது. அந்தக்காலத்திலேயே க்ரேக்க நாட்டில் பல கலை அம்சங்கள் அழிக்கப்பட்டன. சிலைகள் எல்லாம் உடைத்து எறியப்பட்டன.

பிறகு 12ம் நூற்றாண்டில் இது லத்தீன் சர்ச் ஆக்கப்பட்டது.

பின்னர் 14ம் நூற்றாண்டில் துருக்கி ஓட்டோமன் கிரேக்கத்தை கைப்பற்றி பிரமாண்டமான இந்த கிரேக்கர்களின் கோவிலை, இதை மசூதியாக்கினான்.

16ம் நூற்றான்டில் துருக்கியின் மொரோசினி இக்கட்டிடத்தை வெடிகுண்டு வைத்து தரக்த்தான், கடவுள் சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டன.

ஏதன்ஸ் மக்கள் இதையெல்லாம் வேதனையுடன் பார்த்துக் கண்ணீர் வடிப்பதைத்தவிற ஏதும் செய்ய இயலவில்லை. அன்றிலிருந்த்து அதன் கலைப்பொருக்கள் எல்லாம் திருடு போகத்தொடங்கின.

இங்கிலாந்தின் எழாம் எல்ஜின் இதில் இருந்த பளிக்குச்சிலைகளைஎல்லாம் பெயர்த்து எடுத்து இங்கிலாந்துக்கு கொன்டு சென்றுவிட்டான்.

தற்ப்பொழுது அவைகள் எல்லாம் லண்டனின் பிரிடிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளன. பெரும்பான்மையான சிலைகள் மற்றும் கலைப்பொருட்க்கள் எல்லாம் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகத்தில் உள்ளன.

#ஏதென்ஸ் நகரில்உள்ளனைத்து பழமைகட்டிடங்களிலும் சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு தலைகள் இல்லாமல் உடல்கள் மட்டுமே இருக்கின்றன.

சுயத்தை மற்றும் தங்களது அடையாளத்தை தொலைத்த கிரேக்கர்கள் அதை மீட்டெடுக்க அனைத்து நாடுகளையும் திருப்பிக்கொடுக்கும்பட் கெஞ்சி கேட்டுக்கொன்டிருக்கின்றார்கள்.

இந்த கட்டிடம் கிரேக்கர்களின் வாழ்வினை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கின்றது. ஏதன்ஸ் தெருக்களில் நடந்து செல்லுகையில், சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்ட்டாடில் மற்றும் பலர் நடந்த வீதி அதில் நானும் நடக்கின்றேன் என்று பெருமையாக இருந்தது. உலகிற்கே நாகரீகத்தை, வாழும் கலையை, பகுத்தறிவை போதித்த கிரேக்கம், இப்பொழுது பன்நாட்டு அரசியல் மற்றும் வியாபாரிகளின் சதியால், சுரண்டப்பட்டு பார்த்தனான் கட்டிடத்தை போன்றே சக்கையாக இருக்கின்றது. விவசாயம், மற்றும் மீன்ப்பிடித்தலில் தன்நிறைவு கொன்டிருந்த கிரேக்கம், உலகமயமாக்குதலின் தந்திரமான சதியில் சிக்கி சின்னாப்பின்னமாகிக் கிடக்கின்றது.

இருந்தாலும் தங்களின் சுயத்தை மீட்க்க முடிந்த அளவு போராடிக்கொன்டுதான் இருக்கின்றனர். உலகின் முதல் பகுத்தறிவாளன் சாக்ரடீஸை, இளைஞர்களின் மனங்களை கெடுக்கின்றார் என்று பொய்க்குற்றம் சுமத்தி மரண தன்டனை கொந்து விஷமருந்தி சாகவைத்தனர். அதை இப்பொழுத்து நினைத்துப்பார்த்து வருந்தி சாக்ரடீஸை தலையில் தூக்கி வைத்து கொன்டாடுகின்றனர்.

இதிலும் ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது. திவாலான கிரேக்க தேசத்தின் மக்கள் வாழ்க்கைத்தரம், பொருளாதாரத்தில் ஒளிரும் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தினை விட 20 மடங்கு மேலாகத்தான் இருக்கின்றது.

Tuesday, August 23, 2016

1981 ல் பதின்ம வயதினரை எல்லாம் கடும் காய்ச்சலில் தள்ளிய மேஸ்ட்ரோ இளையராஜ மற்றும் நடிகை ராதா

1981 ல் தமிழ்நாட்டில் உள்ள பதின்ம வயதினரை எல்லாம் கடும் காய்ச்சலில் தள்ளிய மேஸ்ட்ரோ இளையராஜ மற்றும் நடிகை ராதா இருவரும் குற்றம் நிருபிக்கப்பட்டு மக்களின் அன்புச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.


Monday, August 22, 2016

செவாலியே விருதுக்கு தகுதியான நபர்தான் ‪#‎கமல்‬ ஹாசன்

செவாலியே விருதுக்கு தகுதியான ஒரே நபர் ‪#‎கமல்‬ ஹாசன் தான். சரியான தெரிவு. பத்மஸ்ரீ சிவாஜிகனேசன் அவர்களுக்கு அடுத்து நடிப்பை உயிராக நினைத்து மதித்து தொழில் செய்யும் ஒருசிலரில் இவரே முதலிடம். இவரது நடிப்புப் பசிக்கு தீனிபோட்ட்ட ஒரேபடம் என்னைப்பொறுத்த வரை "‪#‎சலங்கை‬ ஒலி" தான். நாட்டிய கலையின் மீதுள்ள மோகத்தில் என்னற்ற கனவுகளை இளமையில் கண்களிலும் இதயத்திலும் சுமந்து எதிர்பார்த்து இருக்கையில் காலம் வ்ழக்கம்போல வாழ்க்கையை தன்போக்கில் இழுத்துச்செல்ல, சாதிக்க முடியாமல் போய்,, அனைத்து வகையிலும் ஏமாற்றத்தை சந்தித்து, கதியற்றுப் போய் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தனது கலைத்திறமையை தன்னோடு சாகவிடாமல் கடைசியில் ஒரு சிஷ்யைக்கு கற்ப்பித்து விட்டு இவ்வுலகை நீங்கும் பத்திரத்தில் பிச்சு உதறி இருப்பார்.
காதல் மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் அது, இசை மற்றும் பாடல்கள் சொல்லவே வேன்டாம், மேஸ்ட்ரோ இளையராஜா தான்.
அதுபோல ஒரு படம் #கமல் க்கு வராதா என்று ஏங்கித்தவிக்கின்றேன்.
வியாபாரப் புயலில் அடித்துச்செல்லப்பட்ட கலைப்படகு வேறுவழியில்லாமல் வணிகத்துடுப்போடுகின்றது. கலைத்துடுப்போடும் நாள் எந்நாளோ.
அதுமட்டுமல்லாமல், நகைச்சுவையிலும் நாகேஷுக்கு வாரிசு என்று இவரைச்சொல்லலாம். ராணித்தேனீ என்ற பழைய படத்தில் தனி நகைச்சுவை ட்ராக்கில் வந்து கலக்கி இருப்பார். அது போன்ற தனி நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து நம்மை எல்லாம் இன்புறச்செய்ய வேன்டும் என்று வேன்டிக்கேட்டுக்கொள்கின்றேன்.

Friday, August 12, 2016

பாரீஸ் நகரில் ஒருநாள் நள்ளிரவில். (Midnight in Paris)

பசியோடு இருக்கும்பொழுது சாப்பிட்டால்தானே உணவின் சுவை அதிகமாகும்!. திரைப்படமும் அப்படித்தான். ஏதோ சிந்தனையில் பார்த்தால் எதுவும் விளங்காது. மனதை சமநிலைப்படுத்தி பொறுமையாக பார்த்தால் மிகவும் ரசனையாகத்தான் இருக்கும். அப்படி அனுபவித்து பார்க்க வேன்டிய படம்தான் MidNight in Paris.
பாரீஸ் நகர வீதிகளில் நள்ளிரவில் கதாநாயகன் சுற்றி அலையும் பொழுது ஒவ்வொரு நாளும் காலத்தின் பின்நோக்கி பயனித்து  வரலாற்று சிறப்பு மிக்க மனிதர்களை சந்தித்து அளாவளாவி மகிழும் அனுபவம் பெறுவார்.
அதுபோல ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று என்னை ஏங்க வைத்த படம் அது.
5 நாள் இன்பச்சுற்றுலா சென்றிருந்த போது நேற்று கிடைத்தது .
இரவு முழுதும் சுற்றி அலைந்தேன் பாரீஸ் நகரவீதிகளில். கதாநாயகன் ஓவன் சென்ற இடங்கள் நானும் சென்றேன். இரவு சரியாக 12 க்கு ஒரு சர்ச் வாசலில் காத்திருந்து வரும் காரில் ஏறி அந்த உலகத்துக்குள் போவார். நானும் 12 மணிக்கு அங்கு சென்றேன். கார்தான் வரவே இல்லை ஆனால் அந்த ராத்திரி உலாவில் நல்ல நன்பர்கள் நிறையபேர் கிடைத்தனர். நல்லதொரு அனுபவமாக இருந்தது.