Friday, October 14, 2022

"out of box thinking" எனும் சொற்றொடர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆக்கப்பூர்வமாக , புதுமையான வழியில் , நூதனமான வழியில் மற்றும் ஒரு விதிகளுக்குட்படாமல் சுதந்திரமாக சிந்தித்து தீர்வு கானல் அதுதான் "out of box thinking" என்று புரிந்திருப்பீர்கள் மற்றும் அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் அதுவல்ல. தமிழில் "நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்" மற்றும் "குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுதல்" என்ற சொலவடைகள் உள்ளன. இவைகள்தான் "out of box thinking" இன் அடிப்படை . ஆமாம், நிழலிலேயே இருந்ததால் அதன் அருமை தெரியாது. வெளியே வெயிலுக்கு வந்தால்தான் நிழல் எப்படிப்பட்டது என்று புரியும். இந்த உலகத்தைப்பற்றி அனுபவித்து , மகிழ்ந்து, ஆச்சரியப்பட்டு , புகழ்ந்து எத்தனையோ கவிஞர்கள் எழுதிய கவிதைகளை படித்திருப்பீர்கள். அவற்றில் பாரதியார் கவிதை முற்றிலும் மாறுபட்டு "out of box thinking" வழியில் இருக்கும் . ஆமாம், நான் இந்த பூமி இப்படிப்பட்டது , நான் இப்படியிருக்கின்றேன் என்று பூமிப்பந்ததுக்குள் இருந்துகொண்டே சிலாகித்து எழுதும் கவிஞர்களிடையே , பூமிக்கு வெளியே வந்து பூமியை ஒரு மேசைமீது இருக்கும் பொருளாக ஆக்கி அதை உருட்டி புரட்டி பார்த்து அதிசயப்பட்டு பாரதியார் எழுதிய கவிதைதான் "நிற்பதுவே நடப்பதுவே" . இளையராஜா அவர்கள் அதறகு அருமையாக இசை அமைத்து அப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார். (https://www.youtube.com/watch?v=84KN3uvBnFE) ஆகவே ஆக்கத்தின் விளைவானது நாம் எந்த சூழல், மற்றும் எந்த முன்நோக்கில் இருக்கின்றது என்பதைப்பொறுத்துதான் அமையும். சொல்ல வந்த விசயத்திற்கு , தேவைக்கு அதிகமாகவே பில்டப் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கின்றேன். இந்து மதத்திற்குள்ளே இருந்த வரையில் ஒரு வெறியனாக இல்லாவிட்டாலும், அதீத பற்று கொண்டிருந்த நான், வெளிவட்டத்திரு வந்த அப்புறம்தான் அதுப்பறிய உண்மைகள் புலப்பட்டன. ஹாலிவுட் திரைப்படங்களில், கிரேக்க, எகிப்து , சீன, ரோமானிய , ஏன் ஜப்பானிய புராணங்கள் கூட ஆர்வமாக எடுக்கப்படும் சூழலில் , இந்திய புராணக்கதைகள் என், அந்த அளவிற்க்கு ஆர்வம் காட்டப்படவில்லை? ராமாயண கதைகள் இந்தியாவைத்தாண்டி கிழக்காசிய நாடுகளிலும் தனித்தனி கதைகளாக பிரபலப்பட்டிருந்தாலும், உலக திரைப்படத்தினை ஈர்க்கவே இல்லை . என்? "out of box thinking" வந்தப்புறம் தெரிகின்றது, இவர்கள் இதைச்செய்யணும் இவர்கள் இதைச்செய்யக்கூடாது என்று இலக்கணம் வகுத்து நம்மை ஆதிக்கம் செய்ததுபோல பிரபஞ்சத்தின் முதல் ஆகாய விமானம் இந்து புராணத்தில் உள்ளது, முதல் பிளாஸ்டிக் சர்ஜரி யானது விநாயகர் தலை மாற்றம் ஆகும் இது குறித்து இந்து புராணத்தில் உள்ளது. கம்பியூட்டருக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் . உலகின் முதல் கற்பாலம் காட்டியது அனுமன் சேனைகள். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு நேரே வருகையில் நாசா சொர்க்கை கோள்கள் செயலற்று நின்றுவிடும். உலகத்தின் புவியீர்ப்பு விசையின் மைய்யமானது சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜ பாதத்தின் கீழே உள்ளது . என்று பலவாறாக புருடா விடுவது இந்து மதத்தைப்பற்றி வெளிநாடுகளில் நகைப்பினைத்தான் உண்டாக்கியிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், வர்ணாசிரம கருத்தியல்கள் இப்பொழுது உலக பல்கலைக்கழகங்களில் விவாதப்பொருளாக ஆகியிருக்கின்றது. மற்ற மதங்களில் அதிசயங்கள் நிகழ்த்தப்படுவது குறித்து நிறைய கதைகள் இருந்தாலும், இந்துமதம் மற்றும் சமஸ்கிருதம் இவைகள் நவீன காலத்துக்கு அறிவியலுக்கே சவால் விடுவது ஒரு வெறுப்பினைத்தான் விதைத்திருக்கின்றது. நான்தான் முன்னோடிஎன்று சொல்லும் தோரணையே நான்தான் மேம்பட்டவன் என்று சொல்லுதலாகும் கிரேக்க புராணங்களில் வரும் கதைகளை உள்ளடக்கினால் மகாபாரதக்கதைகளில் 45% தான் வரும், மகாபாரதம் போல ஆயிரக்கணக்கான புராணங்கள் இந்தியாவில் உள்ளன, ஆனால் கிரேக்க புராணங்கள்தான் உலகில் அதிகம் விரும்பப்படும் புராணமாகும். ஆதிக்கம் மற்றும் மேட்டிமையை விட்டொழித்தால்தான் இந்துமதம் அதன் பெருமையை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும்.


Monday, October 10, 2022

 சுவைக்காக சமைத்து சாப்பிட ஆரம்பித்தான் மனிதன் அதன் காரணமாக , செரிமான சக்தி குறைந்துபோபோனது. சிட்டுக்குருவி  அலட்சியமாக சாப்பிடும் பச்சரிசியை மனிதன் சாப்பிட்டால் வயிறு இடம் மாறிவிடும்.


பூமியில் வெயில் அதிகமாக விழும் பூமத்திய ரேகை பகுதியில் வாழும் மக்களின் உடம்பில் சூரியஒளியின் வீரியம் அதிகமாக தாக்குவதால் அவர்கள் தோல் கடினமாகி Melaninஅதிகம் சேர்க்கப்பட்டு தோல் கருப்பாக ஆகிறது. அதுபோல மற்ற வெயில் குறைந்த  இடங்களில் வாழும் மக்களுக்கு வெயில் வேண்டி, தோல் மிருதுவாக்கப்பட்டு, மெலனின் இல்லாமல் வெளிர் நிறத்தில் தோல் ஆகின்றது.

அமேரிக்கா & ஐரோப்பா நாடுகளுக்கு இடம் பெயரும் இந்தியர்களுக்கு பெரும்பாலும் வைட்டமின்-D குறைபாடு வருவதற்க்கு இதுதான் காரணம். 

ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் வரும் மேற்கோள் "Life will find a way.” 

மனிதன் என்னதான் தனது பழக்க வழக்கங்கள்கை மாற்றிக்கொண்டாலும் மனிதவாழ்க்கையானது தனது பயணத்திற்கான பாதையை கண்டுபிடித்து செல்லும்.

பெண்ணானவள் ஆண்  சார்பு தேவையில்லை என்ற நிலை கொள்வதாலோ அல்லது ஆண் - பெண் பாலின சமதத்துவ சித்தாந்தத்தாலோ,  அல்லது என்ன பழக்க மாறுதல் காரணத்தினாலோ மனித பாலின இயக்கங்களில் ஒரு மாறுதல்  வர ஆரம்பித்து இருக்கின்றது.

பெண்தன்மையுடன் பிறக்கும் ஆண் மற்றும் ஆன் தன்மையுடன் பிறக்கும் பெண் , குழந்தையின்மை,  கருத்தரிப்பு   மருத்துவமனைகளின் வளர்ச்சி இவைகளெல்லாம் மிக சாதாரணமாக இருக்கின்றது.

வெளிப்படையாக தெரியும், தோல் குறைபாடு , பருக்கள், உடல் குறை  இவைகள் வந்தாலே மனது என்ன பாடுபடும். எத்தனை பேர் மனமுடைந்து தவறான முடிவுகளை எடுக்கின்றார்கள்.

அப்படியிருக்கையில் பாலின குறைபாடு என்பது எப்படிப்பட்ட மாணவலியை கொடுக்கும்? பெற்றோர்கள், உடன் பிறந்தோர், நண்பர் அனைவரும் எப்படி ஒரு அன்பான ஆதரவினை கொடுக்கவேண்டும் அவர்களுக்கு? ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வாழ்வதுதான் அவர்கள் விதியாக இருக்கின்றது.

ஆனால் இப்பொழுது ஒரு விழிப்புணர்வு வந்து இருக்கின்றது. இவர்களும் சமூகத்தில் சமமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்கள்.  உள்ளக்கிடக்கினை அப்படியே பகிர உதவும் ஊடகத்தின் அசுர வளர்ச்சிதான் இத்தற்கெல்லாம் முக்கிய காரணம்.

அந்தக்காலத்தில் ஒரு சிலர் சொல்லுவது மட்டுமே மக்களிடையே பரவும், மக்களின் கருத்துக்கள் அதுதான் என்று கற்ப்பிக்கப்படும். ஆனால் இந்தக்காலம் ஊடகத்தின் காலம். மக்களின் உணர்வுகள் எளிதாக உலகம் முழுதும் பரவும்.

"பிக் பாஸ்" போட்டியாளராக ஒரு Transgender நுழையில் அவரை பேசிய பேச்சு சூப்பர். அவருக்கு மேடையும் , களமும் கொடுத்த விஜய் டிவி சூப்பர்.

நான் ஏற்க்கனவே சொன்னது போல நீண்டகால மாற்றத்தில், ஆண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளும் படி இயற்கை மாறும்.ஏனென்றால் "Life Will find Way "


Saturday, October 08, 2022

சென்றவாரம் நீயா நானா நிகழ்ச்சியானது இன்றைய இளைய தலைமுறை மற்றும் முந்தைய 3 தலைமுறையையோ சேர்ந்த பெண் பாடல் ரசிகர்களின் எதிர் எதிர் உரையாடல் ஆகும்.

   பெண்களின் கலாரசனையானது மிக ஆழமானது அதைஎப்படி அனுபவிக்கின்றார்கள் என்றறிவதற்காக பெண்களைமட்டும் என்று கோபி சொன்னார். 

தமிழ்நாட்டுப்பெண்கள் வழக்கம் போல காதலன், கணவன் , வரப்போகும் காதலன், வரப்போகும் கணவன் பற்றிய பாடல்களைத்தான் சொல்லி சிலாகிக்கபோகின்றார்கள் என்று நினைத்தேன். 

பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது, ஆனால் ஆச்சரியப்படும்படியாக சிலர், வாழ்வியல், மனவியல் குறித்த பாடல்களைப்பற்றி ஆர்வமாக பேசினார்கள்.

 பெரும்பாலும் பாடல்வரிகளுக்காகவே பாடல்களை ரசிப்பதாக சொன்னார்கள். அது ஓரளவிற்கு உண்மையோதான் என்றாலும் , என்னைப்பொறுத்தவரையில் இசையும் , ராகமுமே ரசனையின் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. அதன் பிறகு அடிக்கடி காதில் விழும் பாடலானது நம்மையறியாமல் நம் மனதில் பதிந்தது , பின்னொரு நாளில் கேட்க்கும் பொழுது , நமது காதில் விழுந்த அந்த பழைய காலம் நினைவுக்கு வந்து மனது பரவசமாகின்றது. 

 சிறுவயதில் சிவாஜி ரசிகனாக இருந்து சிவாஜிபாடல்களை மட்டும் விரும்பிகேட்டிருந்தேன், ஆனால் விதியானது வலியது. உசிலம்பட்டியில் தினமும் காலையில் இருந்து இரவு வரை 8 திசையெங்கிலும் ஒலிக்குழாய் கட்டி எம்ஜியார் காதல் மற்றும் தத்துவ பாட்டுக்கள் போட்டு போட்டு நான் விரும்பாமலே எனது காதுக்குள் பலவந்தமாக திணித்தார்கள்.. கொடுமையே என்றுதான் கடத்தினேன். ஆனாலும் என்னையறியாமல் என் மனதிற்குள்ளும் நுழைந்திருக்கின்றது போல இருக்கின்றது.

 படிப்பு முடிந்து, வேலைக்குப்போய், திருமணமாகி பிள்ளைகள் பிறந்தபின் ஜப்பான் நாட்டிற்க்கு நகர்ந்த பிறகு யோக்கோகாமா நகரில் ஓரு பூங்காவில் "பொன்னெழில் பூத்தது புது வானில் " பாடல் ஒலித்ததை கேட்டு அப்படியே திடுக்கிட்டு அத்திசைநோக்கி ஓடினேன், பாட்டு போட்டு கேட்டுக்கொண்டிருந்தவர் ஒரு தமிழர் அவரிடம் உரையாடி 3 எம்ஜியார் பாடல்களை கேட்டு ரசித்துவிட்டு வந்தேன். 

அதன் பிறகு எம்ஜியார் பாடல்கள் அனைத்தையும் சேகரித்து கேட்க்க ஆரம்பித்தேன். வார இறுதிகளில் இன்றும் எம்ஜியார் காதல் & தத்துவ பாடல்களை கேட்டு இன்புறுகையில், காலப்பயணம் செய்து , கவலைகளே இல்லாத அந்தி சிறுவயது காலத்திற்குள்ளே சென்றுவிடுகின்றேன்.

 மலைப்பாதை நடைப்பயணகளில் "The gods must be crazy" திரைப்படத்தின் பின்புல இசையை ஒலிக்க விடுவது வழாக்கம். அதில்பழக்கப்பட்டு எனது துணைவியார் தன்னியறியாமல் அடிமைப்பட்டு அந்த இசை இல்லாமல் நடைப்பயணமே கிடையாது என்கின்றார் இப்பொழுது. 

 அதுபோலவே அர்த்தமே விளங்காத இந்திப்பாடல்களும் இசை மற்றும் ஆஷா, கிஷோர் , குமார் சானு, அல்கா, கவிதா கிருஷ்ண மூர்த்தி, அனுராதா , உதித் நாராயண் இவர்களின் மந்திரக்குரல்களுக்காக , எனது மனதை கொள்ளை கொண்டுவிட்டன. 

 ஆகவே ஒரு பாடலானது பிடித்து போவதற்கு பாடலின் வரிகள் (lyrics) ஆனது அனைத்திற்க்கும் கடைசி காரணியாகும் என்பது எனது எண்ணம். பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் குறித்து பேசச்சொன்னால் பேசிக்கொண்டே இருப்பேன் அந்த அளவிற்க்கு ஆழமாக திரைப்பாடல்களை அனுபவித்து ரசிக்கின்றேன்.

 அந்த விதத்தில் இளையராஜா அவர்களை பற்றி பேசச்சொன்னால் வாழ்நாள் முழுதும் பேசிக்கொண்டே இருக்கும் அளவிற்க்கு அவரது இசையை அவதானம் செய்திருக்கின்றேன். 

 இந்நிகழ்ச்சியில் 2 விஷயங்கள் கவனித்தேன். ஒன்று ஆணாதிக்க மனப்பான்மை குறித்தது மற்றொன்று ஆச்சரியமாக குவாண்ட்டம் இயற்பியல் குறித்து. இவைகளைப்பற்றி பின்னர் பதிவிடுகின்றேன்,