Friday, October 14, 2022

"out of box thinking" எனும் சொற்றொடர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆக்கப்பூர்வமாக , புதுமையான வழியில் , நூதனமான வழியில் மற்றும் ஒரு விதிகளுக்குட்படாமல் சுதந்திரமாக சிந்தித்து தீர்வு கானல் அதுதான் "out of box thinking" என்று புரிந்திருப்பீர்கள் மற்றும் அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் அதுவல்ல. தமிழில் "நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்" மற்றும் "குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுதல்" என்ற சொலவடைகள் உள்ளன. இவைகள்தான் "out of box thinking" இன் அடிப்படை . ஆமாம், நிழலிலேயே இருந்ததால் அதன் அருமை தெரியாது. வெளியே வெயிலுக்கு வந்தால்தான் நிழல் எப்படிப்பட்டது என்று புரியும். இந்த உலகத்தைப்பற்றி அனுபவித்து , மகிழ்ந்து, ஆச்சரியப்பட்டு , புகழ்ந்து எத்தனையோ கவிஞர்கள் எழுதிய கவிதைகளை படித்திருப்பீர்கள். அவற்றில் பாரதியார் கவிதை முற்றிலும் மாறுபட்டு "out of box thinking" வழியில் இருக்கும் . ஆமாம், நான் இந்த பூமி இப்படிப்பட்டது , நான் இப்படியிருக்கின்றேன் என்று பூமிப்பந்ததுக்குள் இருந்துகொண்டே சிலாகித்து எழுதும் கவிஞர்களிடையே , பூமிக்கு வெளியே வந்து பூமியை ஒரு மேசைமீது இருக்கும் பொருளாக ஆக்கி அதை உருட்டி புரட்டி பார்த்து அதிசயப்பட்டு பாரதியார் எழுதிய கவிதைதான் "நிற்பதுவே நடப்பதுவே" . இளையராஜா அவர்கள் அதறகு அருமையாக இசை அமைத்து அப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார். (https://www.youtube.com/watch?v=84KN3uvBnFE) ஆகவே ஆக்கத்தின் விளைவானது நாம் எந்த சூழல், மற்றும் எந்த முன்நோக்கில் இருக்கின்றது என்பதைப்பொறுத்துதான் அமையும். சொல்ல வந்த விசயத்திற்கு , தேவைக்கு அதிகமாகவே பில்டப் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கின்றேன். இந்து மதத்திற்குள்ளே இருந்த வரையில் ஒரு வெறியனாக இல்லாவிட்டாலும், அதீத பற்று கொண்டிருந்த நான், வெளிவட்டத்திரு வந்த அப்புறம்தான் அதுப்பறிய உண்மைகள் புலப்பட்டன. ஹாலிவுட் திரைப்படங்களில், கிரேக்க, எகிப்து , சீன, ரோமானிய , ஏன் ஜப்பானிய புராணங்கள் கூட ஆர்வமாக எடுக்கப்படும் சூழலில் , இந்திய புராணக்கதைகள் என், அந்த அளவிற்க்கு ஆர்வம் காட்டப்படவில்லை? ராமாயண கதைகள் இந்தியாவைத்தாண்டி கிழக்காசிய நாடுகளிலும் தனித்தனி கதைகளாக பிரபலப்பட்டிருந்தாலும், உலக திரைப்படத்தினை ஈர்க்கவே இல்லை . என்? "out of box thinking" வந்தப்புறம் தெரிகின்றது, இவர்கள் இதைச்செய்யணும் இவர்கள் இதைச்செய்யக்கூடாது என்று இலக்கணம் வகுத்து நம்மை ஆதிக்கம் செய்ததுபோல பிரபஞ்சத்தின் முதல் ஆகாய விமானம் இந்து புராணத்தில் உள்ளது, முதல் பிளாஸ்டிக் சர்ஜரி யானது விநாயகர் தலை மாற்றம் ஆகும் இது குறித்து இந்து புராணத்தில் உள்ளது. கம்பியூட்டருக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் . உலகின் முதல் கற்பாலம் காட்டியது அனுமன் சேனைகள். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு நேரே வருகையில் நாசா சொர்க்கை கோள்கள் செயலற்று நின்றுவிடும். உலகத்தின் புவியீர்ப்பு விசையின் மைய்யமானது சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜ பாதத்தின் கீழே உள்ளது . என்று பலவாறாக புருடா விடுவது இந்து மதத்தைப்பற்றி வெளிநாடுகளில் நகைப்பினைத்தான் உண்டாக்கியிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், வர்ணாசிரம கருத்தியல்கள் இப்பொழுது உலக பல்கலைக்கழகங்களில் விவாதப்பொருளாக ஆகியிருக்கின்றது. மற்ற மதங்களில் அதிசயங்கள் நிகழ்த்தப்படுவது குறித்து நிறைய கதைகள் இருந்தாலும், இந்துமதம் மற்றும் சமஸ்கிருதம் இவைகள் நவீன காலத்துக்கு அறிவியலுக்கே சவால் விடுவது ஒரு வெறுப்பினைத்தான் விதைத்திருக்கின்றது. நான்தான் முன்னோடிஎன்று சொல்லும் தோரணையே நான்தான் மேம்பட்டவன் என்று சொல்லுதலாகும் கிரேக்க புராணங்களில் வரும் கதைகளை உள்ளடக்கினால் மகாபாரதக்கதைகளில் 45% தான் வரும், மகாபாரதம் போல ஆயிரக்கணக்கான புராணங்கள் இந்தியாவில் உள்ளன, ஆனால் கிரேக்க புராணங்கள்தான் உலகில் அதிகம் விரும்பப்படும் புராணமாகும். ஆதிக்கம் மற்றும் மேட்டிமையை விட்டொழித்தால்தான் இந்துமதம் அதன் பெருமையை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும்.


No comments: