Thursday, April 02, 2015

10 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து பொருளீட்டும் பொருட்டு ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த நேரம் கோபே நகரில் பணியாற்றிக்கொன்டிருந்தேன். மனது கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் அருகில் உள்ள ரோக்கோ மலை உச்சிக்கு (Rokko mountain) நடந்து போவேன். இயற்கைகளை கடந்து போய் இறங்குகையில் மனது மிக லேசாகி இருக்கும். ஒருமுறை ரோக்கோ மலையில் நீண்ட நேரம் தங்கிவிட்டேன், இரவு ஆகிவிட்டது, இறங்குகையில் வழியில் உள்ள Nunobiki Falls ல் அமெரிக்கர் ஒருவர் கிட்டார் இசைத்துக்கொன்டே "Red River Valley " பாட்டு பாடினார். மிக அழகாக நேந்தியாக இருந்தது. அந்தபாட்டு என் மனதை விட்டு அகலவே இல்லை. (கீழே கொடுத்துள்ள இனைப்பை பார்க்கவும்).

மனதில் பதிந்துவிட்ட இசையை நினைவுகூர்தல் என்பது காலப்பயணம் தனே? ஆமாம் இந்தபாட்டை நினைக்கும்போதெல்லாம் அந்த காலங்களுக்குள் சென்றுவிடுவேன்.

சமீபத்தில் Wild ஆங்கிலப்படம் பார்த்தேன். கதாநாயகி, அம்மாவை இழந்து, விவாகரத்து ஆகி, கெட்ட பழக்கங்களுக்கு அடிமைஆகி அதிலிருந்து மீன்டெழும் முயற்ச்சியில் மலைப்பாதையில் 1750 கிலோமீட்டர் நடைப்பயணத்தை மேற்கொள்வார். வழியில் ஏற்ப்படும் அனுபவங்களும் பழையனவற்றை நினைவு கூறலுமே இந்த படமாகும்.

ஒருஇடத்தில், ஒரு பாட்டியையும் அவர் சிறு வயது பேரனையும் பார்க்கையில் அச்சிறுவன் "Red River Valley" பாட்டை பாடிக்காட்டுவான். அதைப் பார்க்கும் வேளையில் என் உடம்பு புல்லரித்துவிட்டது.

https://www.youtube.com/watch?v=gooN9iu4EbM