Monday, September 19, 2016

ஒரு கயவனால் ஜப்பானில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் (பாகம் 12)


முதலாம் பாகம் இதிலிருந்து ஆரம்பியுங்கள் [என்னைப்ப‌ற்றி (பாகம் 1)


முந்தைய பகுதி இதைப்படித்துவிட்டு இங்கு வரவும்.  [ ஜப்பான் நாட்டில் வேலை பார்த்த அனுபவம் (பாகம் 11) ]

ஒரு கயவனால் ஜப்பானில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் (பாகம் 12)


நான் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு முன்பே அவன் மற்றும் ராஜூ ஆகிய இருவரும் இங்கு வேலை பார்த்து வந்தனர். அவன் என்னுடன் அண்ணா அண்ணா என்று விளித்து மிகவும் நட்புடன்தான் பழகினான்.

ஒருமுறை நானும் ராஜு வும் அலுவலகம் முடித்து வரும் பொழுது ராஜுவின் மனைவிக்கு அந்நிறுவனத்தில் வேலை வாங்குவது குறித்து பேச்சு வந்தது. நான் சொன்னேன், பிராமணப் பெண்கள் போல துனிச்சலாக யாரும் செயல்பட முடியாது. அவர்கள்தான் கண்கொத்திப் பாம்புபோல காத்திருந்து கிடைக்கும் சந்தர்ப்பத்தை கச்சிதமாக கைக்கொள்ளுவார்கள். அதுபோல உயர்நிலைப்பதவிகளுக்கு பிராமணர்களுடன் யாரும் போட்டியிட முடியாது. அதனை முறியடிக்கும் அனைத்து தந்திரகளும் அவர்கள் அறிவர். என்ற கருத்தில் உரையாடிக்கொன்டிருந்தோம். அதை அனைத்தையும் ராஜு அவனிடம் சொல்லி விட்டார். அதுகுறித்து ராஜு அவனிடம் என்ன சொன்னாரோ இல்லை அவன்தான் தப்பாக புரிந்துகொண்டானோ என்ன இழவோ, அதிலிருந்து என்னை விட்டு விலகத்தொடங்கினான்.

என்னடா நாடு விட்டு நாடுவந்து வேலை பார்க்கின்றோம் இப்படி விலகிப்போய் இருப்பது நல்ல இல்லையே என்று கவலையாகத்தான் இருந்தது ஆனாலும் போகப்போக அதை அலட்சியப்படுத்திவிட்டேன். ஆனால் விலகிப்போனவன் மற்றவர்களிடம் என்னைப்பற்றி அவதூறுகள் பரப்பி, குறுக்கு வழியில் என்னை வேலைவிட்டு நீக்க திட்டமிட்டான். அதையும் செய்தான்.

அவன் ஜப்பானிய மொழி நன்றாக பேசுவான். அதனால் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளிடம் நல்ல தொடர்பில் இருந்தான்.. முதல் கட்டமாக என்னைப்பற்றி தவறான அபிப்பிராயங்களை மற்றவர்களிடம் விதைத்தான். நான் மேலாளராக இருந்ததால் மற்றவர்கள் வேலை பற்றிய எனது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை வாரம் ஒருமுறை மேலான் இயக்குநருக்கு நான் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை எப்படியோ பெற்று மற்றவர்களிடம் காட்டி அவர்களிடம் என்மீது வெறுப்பை உண்டாக்கி என்னை தனிமைப்படுத்தினான். அலுவலகத்தில் ஒருவரும் பேசாதிருந்தால் எப்படி இருக்கும், இருப்பது ஒரு 10 பேர்தான், அதிலும் தமிழ் 4 பேர்தான். எனக்கோ மனைவி பிள்ளைகளை ஊரில் விட்டுவிட்டு தனியே இருக்கும் சூழ்நிலை. வெப்-காமெரா மூலம்தான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தோம். இதில் இவன் கைங்கரியத்தினால் தனிமைப்படுத்தப்பட்டேன். பொருளீட்டும் பொருட்டு வந்த காரனத்தினால் வேலையை விட்டுவிட்டு திரும்ப ஊருக்கு வர மனமில்லை.

நிறுவனமும் சரிவர இயங்குவதுபோல தெரியவில்லை. தேவைகள் குறைந்தாலே நமது முக்கியத்துவமும் குறைந்துவிடுமல்லவா. அதையும் சமாளித்து மற்றும் அவன் எப்படி தொந்தரவு கொடுத்தாலும் அதையும் சமாளித்து இருந்துகொண்டிருந்தேன். என்னடா இப்படி சமாளிக்கின்றானே என்று வேறுவிதமான திட்டங்களை நினைக்கத்துவங்கினான். எங்கள் நிறுவனத்தில் ஒரு சட்டம் உள்ளது, அது என்னவென்றால், உடன் வேலைபார்ப்பவரை மனம் நோகத் திட்டினாலோ அல்லது கைகலப்பில் ஈடுபட்டாலோ வேலையிலிருந்து நீக்கப்படுவர்.

அவன் ராஜுவை பொய் சாட்சிக்கு ஏற்பாடு செய்தான், பிறகு மதிய உணவு சாப்பிடும்போது வம்பிழுத்து கைகலக்கச்செய்து இவைகள் மூலம் என்னை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பத்திட்டமிட்டான். அவன் திட்டமிட்டது போலவே கைகலப்பும் நடந்தது, விசாரனை வந்தது, அவன்தான் முதலில் கைகலப்பில் ஈடுபட்டான் என்று சொன்னேன், நான் அவனது மனைவியைப்பற்றி தவறாகச் சொன்னேன் என்று சொன்னான், ரஜுவும் ஆமாம் என்று சொல்லி அந்த்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்தான். விசாரணை ஓடிக்கொண்டுதான் இருந்தது, இதன் இடையில் நான் ஜப்பானிலேயே வேறு வேலை தேட ஆரம்பித்தேன். ஜப்பானில் வேறு நிறுவணத்துக்கு நினைத்த மாத்திரத்தில் தாவ முடியாது, அதற்கு விசாவும் புதிதாக பெறவேண்டும்.எப்படியோ டோக்கியோ வில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது, ஆனால் விசா மற்ற நீண்ட நாட்கள் ஆகும் போல இருந்தது. விசா மாற்றத்துக்கும் விண்ணப்பித்து இருந்தேன். இவைகள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் செய்துகொண்டிருந்தேன். Engineer விசா இருந்தால் நினைத்த நிறுவனத்தில் சேரலாம். ஆனா எனது விசா "Designated Service" வகையைச் சேர்ந்தது.

இந்த நிறுவனத்தில் இப்பவோ அல்லது அப்பவோ என்று நிலைமை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது.

ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவன் போல இந்த நிறுவனத்தில் இருந்தேன். நிறுவனமும் சரிவர இயங்கவில்லை. நானாக ராஜினாமா செய்யவேண்டும் என்று நினைத்து அதை அனைத்து வகையிலும் வெளிப்படுத்தினர். எனக்கோ இன்னொரு நிறுவனத்தில் வேலை கிடைத்தும் விசா இல்லாத காரணத்தால் உடனே போய் சேர முடியவில்லை. புதிய விசாவும் எப்ப வரும்ன்னு தெரியலை.

மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெப்-கேம் வழியாக பேசும்பொழுதெல்லாம், மிகக்கவலையாக இருக்கும். இந்த நிறுவனத்தில் எனது நிலைமை மிக மோசமாகப்போய்விட்டது. நான் புதிய நிறுவனத்தாரிடம் சொன்னேன், அவர்களும் சரி வந்துவிடுங்கள், ஓரிரு வாரங்களில் விசா வரவில்லையென்றால் இந்தியா சென்று விசா கிடைத்ததும் திரும்ப வரலாம் என்றனர். நானும் மூடை முடிச்சுகளை கட்டிக்கொன்டு டோக்கியோ கிளம்பி விட்டேன். மறுநாள் நிறுவனத்தைவிட்டு ஒரு வாரத்தில் விலகுகின்றேன் இந்தியாவுக்குப்போகின்றேன் என்று சொல்லி ராஜினாமா செய்வதாக சொன்னேன். என்னைத்தவிற அனைவரும் சந்தோசப்பட்டனர்.

அந்த ஒருவாரத்திலும், அவன் என்னைப்பற்றி மேலிடத்தில் சொல்லி நான் பர்த்து வந்த மென்பொருள் புரஜக்க்ட்டின் அனைத்து மடுல் களையும் ஆவணபடுத்தித் தரும்படி நிர்ப்பந்தப் படுத்தப்பட்டேன். அதையும் செய்து முடித்தேன்.
அந்த நிறுவனத்தில், எப்பொழுதும் ஒருமாதச்சம்பளத்தை பிடித்துத்தான் வைத்திருப்பர். வேலை விட்டு போகும்பொழுது எதாவது பிரச்சினை என்றால் அதை ஈடு செய்வதர்காக அப்படி செய்வர். அதனால் அவர்கள் மனம் கோணாமல் நடக்கனும் என்று கவனமாக இருந்தேன். அதை அந்தக் கயவன் சாதகமாக எடுத்துக்கொண்டு மிகவும் தொல்லை கொடுத்தான்.

ஒருவாரம் முடிந்தது, மாலையில் டோக்கியோ கிளம்பத்திட்டமிட்டு இருந்தேன், அதற்கு முன்னர் விசா அலுவலகத்துக்குச்சென்று நிலவரம் என்ன என்று கேட்டேன், அவர்களும் சோதித்துப்பார்த்துவிட்டு விசாவுக்கான ஒப்புதல் கிடைத்துவிட்டது, நாளை அனுப்புவோம் உங்களுக்கு வந்து சேர 3 நாட்க்கள் ஆகும். இல்லையென்றால் நாளை காலையில், அடையாள அட்டை கான்பித்து கையோடு வாங்கிக்கொள்ளலாம் என்றனர். எனக்கு அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது. கடந்த 6 மாத காலங்களாக மனதுக்குள் இருந்து என்னைக் கரைத்த உளைச்சல் எல்லாம் ஒருநொடியில் மறைந்தே போய்விட்டன. உடனே சென்னைக்கு என் மனைவிக்கு போன் செய்து மகிழ்ச்சியான செய்தியை சொன்னேன். 6 மாத காலங்களாக கவலையுடன் சுற்றித்திரிந்த கோபே நகரில் அந்த இரவு முழுதும் ஜாபானிய நன்பர்களுடன் மகிழ்சியாக சுற்றித் திரிந்தேன். மறுநாள் காலையில்விசாவை வாங்கிக்கொன்டு டோக்கியோ சென்றேன். புதிய நிறுவனத்தின் கிளையன்ட் Canon நிறுவனமாகும், டோக்கியோவுக்கு அருகில் Musashi-Kosugi என்ற இடத்தில் பிரமாண்டமான கட்டிடத்தில் வேலை. எனக்கு பிடித்தமாதிரியான வேலை மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

பிடித்து வைக்கப்பட்டு இருந்த 1 மாதச்சம்பளத்தையும் கொடுப்பதற்கு தடைகளும் செய்தான். நான் உண்டாக்கிய ஆவணங்கள் சரியாக இல்லை அதால் மீண்டும் செய்து கொடுத்தால் சம்பளம் கொடுக்கப்படும் என்று அந்நிறுவணத்தில் மொழி பெயர்ப்பாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். எனக்கென்றால் கோபம் ஜிவ்வென்று தலைக்கு ஏறியது. திடீரென யோசனை வந்தது, ஒருநிறுவனத்தைவிட்டு விலகிய பிறகு எக்காரணததிக்கொன்டும் மீண்டும் வேலை செய்யச் சொல்ல மாட்டார்களே, ஒருவேளை நிறுவன உரிமையாளருக்குத் தெரியாமல் மொழிபெயர்ப்பளரை கையில் போட்டுக்கொண்டு அந்தக்கயவன் விளையாடுகின்றானோ?.

நான், அப்படியெல்லாம் வேலை பார்க்கமுடியாது, சம்பளம் கொடுக்காவிட்டல் போங்கள் எனக்கு எப்படி வாங்குவது என்று தெரியும் என்று பதில் அனுப்பிவிட்டேன். பிடித்து வைத்திருந்த சம்பளத்தை ஒரு மாத முடிவில் எனக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

கோபே நகரில் அந்தக்கயவன் எனக்கு இழைத்த மன உளைச்சல்கள் எல்லாம் என் மனதில் பெரும் பெரும் பாறாங்கற்களாக கனத்துக்கொன்டிருந்தன. டோக்கியோ வந்த பிறகு அவைகள் எல்லாம் அப்படியே இலவம்பஞ்சு போல லேசாகி காற்றோடு காறாகப் போயின.

 டோக்கியோ நகரில் 3 வருடங்கள் பணியாற்றினேன்.  Canon நிறுவனத்தில்தான் எப்படி தரமான மென்பொருள் படைப்பது என்பதை கற்றுக்கொன்டேன்.Ichigao என்ற இடத்தில் தங்கி இருந்தேன் அங்கிருந்து இரண்டு மெட்ரோ ரயில்களில் பயணித்து வேலைசெய்யும் இடத்துக்குப்போக 1 மணி நேரம் ஆகும்

 Ichigao வில் ஒரு மேன்சனில் தங்கி இருந்தேன், 50 ந்றைகள் கொண்ட அந்த மேன்சனில் பெரும்பாலும் ஜப்பானிய இளைஞர்களும் இளைஞிகளுமே இருந்தனர், நான் மட்டுமே தமிழ், சென்னை மேன்சன் போலத்தான் ஜப்பன் மேன்சனும், ஒருவருக்கொருவர், உதவிக்கொண்டு, இருப்பதைப்ப்கிர்ந்துகொண்டு, ஆடிப்பாடி களித்திருந்தோம், மனைவி குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலைகள் எல்லாம் அந்நன்பர்களால்தான் மறக்கடிக்கப்பட்டன. எனது மனைவியும் இங்கு வந்திருந்து 3 மாத காலங்கள் தங்கியிருந்தார். நானும் ஊருக்கு சென்று வந்திருந்தேன்.

இன்று அமெரிகாவில் குடும்பத்துடன் 9 வருடத்துக்கும் மேலக ஒரு நிறுவணத்தில் வெற்றிகரமாக பணியாறிக்கொன்டிருபதற்கு காரணம் கோபே மற்றும் டோக்கியோவில் பெற்ற அனுபவங்கள் என்றால் மிகையாகாது.

மேன்சன் வாழ்க்கை என்பது எனது வாழ்வின் முக்கியமான பகுதியாகும். உலகத்தினை ஓரளவுக்கு புரிந்திருக்கின்றேன் என்று நம்புவதற்கு மேன்சன் வாழ்க்கைதான் காரனம். எத்துனை விதமான நன்பர்கள் எத்துனை விதமான அனுபவங்கள்.

ஜப்பான்  தவிற சென்னை, அமெரிக்கா நாடுகளில் மேன்சன் வாழ்க்கையில் இருந்திருக்கின்றேன் அனைத்து இடங்களிலும் நன்பர்கள் ஒரேமாதிரிதான். உணவு, இன்பம், துன்பம் அனைத்தையும் பகிர்வது உலகம் உழுதும் ஒரே மாதிரிதான். வார இறுதி நாட்க்களில், தத்தம் குடும்பம் மற்றும் நன்பர்கள் பற்றிய நினைவுகளை வாஞ்சையுடன் பகிர்வது இனிமையானதொரு அனுபவம்.

காதல் படத்தில் வரும் "புறாக்கூண்டு போல இங்க 30 ரூமு" பாடல்க் காட்சியினை கானும்பொழுது இன்னுமும் கண்கள் கலங்குவது தவிற்கமுடியலை.




அடுத்து நான் அமெரிக்காவுக்கு வந்த கதை.

Tuesday, September 06, 2016

அறிவியலா.? ஆன்மீகமா - #சன்டிவி பட்டிமன்றம்

#சன்டிவி யில் "மகிழ்ச்சியான வாழ்கைக்குப் பெரிதும் உதவுவது.. அறிவியலா.? ஆன்மீகமா..??" பட்டிமனறம் பார்த்தேன், #பாரதிபாஸ்கர் அவர்கள் அறிவியலுக்கும் #ராசா அவர்கள் ஆன்மீகத்த்க்கும் ஆதரவாக பேசினர். நடுவர் #சாலமன்பாப்பைய்யா அவர்கள் ஆன்மீகமே என்று தீர்ர்ப்பளித்தார்.

ஆன்மீகமும் அறிவியலும் மனிதனின் இரண்டு கண்கள் என்றாலும். பேசிய ஒருவரிடமும் ஒரு #பகுத்தறிவு பார்வை இல்லாமல் போனது ஏமாற்றமே.
ஆன்மீகம், மனிதனை மனதளவில் தாக்கி மதவாதிகள் மூலம் மக்களின் மனங்களைச் சுரண்டி இன்னமும் மன அடிமை யாக்கி வைத்திருக்கின்றது என்றால்.

அறிவியலானது உலகமயமாக்கள் மூலம் மனித உழைப்பினை சுரண்டி மக்களை உடல் அடிமை ஆக்கி வைத்திருக்கின்றது.

இதையெல்லாம் சற்று பொறுமையாக சிந்தித்துப்பார்த்தாலே உன்மை விளங்கும்.

Thursday, August 25, 2016

உலகின் முதல் பகுத்தறிவாளன் தோன்றிய ஏதன்ஸ் நகரின் தற்பொழுதைய நிலமை



உலகின் முதல் பளிங்குக் கற்களால் நவீன கட்டுமான உத்தியுடன் 2500 வருடங்களுக்கு முன்னர் ஏதன்ஸ் நகரில் கட்டப்பட்ட பார்த்தனான் கட்டிடத்தை பார்க்க ஆவலாக சென்றிருந்தேன். பார்த்தவுடன் திகைப்பும் சோகமும்தான் கொன்டேன்.

நாமெல்லாம் 1000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலை சிலாகித்துப்பேசுகின்றோம். ஆனால் 2500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட பார்த்தனான் கட்டிடத்தை சிறப்பாகக் கட்டி திறமையை பூரிப்புடன் உலகுக்கு வெளிப்படுத்திய கிரேக்கர்கள் அதை பறிகொடுத்து விட்டு கலைத்திறமைக்கு மைல் கல்லாயிருந்த கட்டிடங்கள், சிற்ப்பங்களை அனைத்தும் தொலைத்து சோகத்துடன் இருப்பதுதான் கொடுமை. தொலைந்தவைகளை தேடிஎடுத்து எழுப்பிக் கொன்டேதான் இருக்கின்றனர்.

பாருங்கள் தற்பொழுதுள்ள கட்டிடத்தில் எத்துனை ஒட்டுக்கள்.

எதீனா எனும் பெண் கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோவில் கட்டிடம் 2ம் நூற்றாண்டிலேயே கிருத்துவ மதவெறியர்களாக் தீக்கிரையாக்கப்பட்டது. பின்னர் கத்தோலிக்க சர்ச் ஆக்கப்பட்டது. அந்தக்காலத்திலேயே க்ரேக்க நாட்டில் பல கலை அம்சங்கள் அழிக்கப்பட்டன. சிலைகள் எல்லாம் உடைத்து எறியப்பட்டன.

பிறகு 12ம் நூற்றாண்டில் இது லத்தீன் சர்ச் ஆக்கப்பட்டது.

பின்னர் 14ம் நூற்றாண்டில் துருக்கி ஓட்டோமன் கிரேக்கத்தை கைப்பற்றி பிரமாண்டமான இந்த கிரேக்கர்களின் கோவிலை, இதை மசூதியாக்கினான்.

16ம் நூற்றான்டில் துருக்கியின் மொரோசினி இக்கட்டிடத்தை வெடிகுண்டு வைத்து தரக்த்தான், கடவுள் சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டன.

ஏதன்ஸ் மக்கள் இதையெல்லாம் வேதனையுடன் பார்த்துக் கண்ணீர் வடிப்பதைத்தவிற ஏதும் செய்ய இயலவில்லை. அன்றிலிருந்த்து அதன் கலைப்பொருக்கள் எல்லாம் திருடு போகத்தொடங்கின.

இங்கிலாந்தின் எழாம் எல்ஜின் இதில் இருந்த பளிக்குச்சிலைகளைஎல்லாம் பெயர்த்து எடுத்து இங்கிலாந்துக்கு கொன்டு சென்றுவிட்டான்.

தற்ப்பொழுது அவைகள் எல்லாம் லண்டனின் பிரிடிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளன. பெரும்பான்மையான சிலைகள் மற்றும் கலைப்பொருட்க்கள் எல்லாம் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகத்தில் உள்ளன.

#ஏதென்ஸ் நகரில்உள்ளனைத்து பழமைகட்டிடங்களிலும் சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு தலைகள் இல்லாமல் உடல்கள் மட்டுமே இருக்கின்றன.

சுயத்தை மற்றும் தங்களது அடையாளத்தை தொலைத்த கிரேக்கர்கள் அதை மீட்டெடுக்க அனைத்து நாடுகளையும் திருப்பிக்கொடுக்கும்பட் கெஞ்சி கேட்டுக்கொன்டிருக்கின்றார்கள்.

இந்த கட்டிடம் கிரேக்கர்களின் வாழ்வினை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கின்றது. ஏதன்ஸ் தெருக்களில் நடந்து செல்லுகையில், சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்ட்டாடில் மற்றும் பலர் நடந்த வீதி அதில் நானும் நடக்கின்றேன் என்று பெருமையாக இருந்தது. உலகிற்கே நாகரீகத்தை, வாழும் கலையை, பகுத்தறிவை போதித்த கிரேக்கம், இப்பொழுது பன்நாட்டு அரசியல் மற்றும் வியாபாரிகளின் சதியால், சுரண்டப்பட்டு பார்த்தனான் கட்டிடத்தை போன்றே சக்கையாக இருக்கின்றது. விவசாயம், மற்றும் மீன்ப்பிடித்தலில் தன்நிறைவு கொன்டிருந்த கிரேக்கம், உலகமயமாக்குதலின் தந்திரமான சதியில் சிக்கி சின்னாப்பின்னமாகிக் கிடக்கின்றது.

இருந்தாலும் தங்களின் சுயத்தை மீட்க்க முடிந்த அளவு போராடிக்கொன்டுதான் இருக்கின்றனர். உலகின் முதல் பகுத்தறிவாளன் சாக்ரடீஸை, இளைஞர்களின் மனங்களை கெடுக்கின்றார் என்று பொய்க்குற்றம் சுமத்தி மரண தன்டனை கொந்து விஷமருந்தி சாகவைத்தனர். அதை இப்பொழுத்து நினைத்துப்பார்த்து வருந்தி சாக்ரடீஸை தலையில் தூக்கி வைத்து கொன்டாடுகின்றனர்.

இதிலும் ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது. திவாலான கிரேக்க தேசத்தின் மக்கள் வாழ்க்கைத்தரம், பொருளாதாரத்தில் ஒளிரும் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தினை விட 20 மடங்கு மேலாகத்தான் இருக்கின்றது.

Tuesday, August 23, 2016

1981 ல் பதின்ம வயதினரை எல்லாம் கடும் காய்ச்சலில் தள்ளிய மேஸ்ட்ரோ இளையராஜ மற்றும் நடிகை ராதா

1981 ல் தமிழ்நாட்டில் உள்ள பதின்ம வயதினரை எல்லாம் கடும் காய்ச்சலில் தள்ளிய மேஸ்ட்ரோ இளையராஜ மற்றும் நடிகை ராதா இருவரும் குற்றம் நிருபிக்கப்பட்டு மக்களின் அன்புச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.


Monday, August 22, 2016

செவாலியே விருதுக்கு தகுதியான நபர்தான் ‪#‎கமல்‬ ஹாசன்

செவாலியே விருதுக்கு தகுதியான ஒரே நபர் ‪#‎கமல்‬ ஹாசன் தான். சரியான தெரிவு. பத்மஸ்ரீ சிவாஜிகனேசன் அவர்களுக்கு அடுத்து நடிப்பை உயிராக நினைத்து மதித்து தொழில் செய்யும் ஒருசிலரில் இவரே முதலிடம். இவரது நடிப்புப் பசிக்கு தீனிபோட்ட்ட ஒரேபடம் என்னைப்பொறுத்த வரை "‪#‎சலங்கை‬ ஒலி" தான். நாட்டிய கலையின் மீதுள்ள மோகத்தில் என்னற்ற கனவுகளை இளமையில் கண்களிலும் இதயத்திலும் சுமந்து எதிர்பார்த்து இருக்கையில் காலம் வ்ழக்கம்போல வாழ்க்கையை தன்போக்கில் இழுத்துச்செல்ல, சாதிக்க முடியாமல் போய்,, அனைத்து வகையிலும் ஏமாற்றத்தை சந்தித்து, கதியற்றுப் போய் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தனது கலைத்திறமையை தன்னோடு சாகவிடாமல் கடைசியில் ஒரு சிஷ்யைக்கு கற்ப்பித்து விட்டு இவ்வுலகை நீங்கும் பத்திரத்தில் பிச்சு உதறி இருப்பார்.
காதல் மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் அது, இசை மற்றும் பாடல்கள் சொல்லவே வேன்டாம், மேஸ்ட்ரோ இளையராஜா தான்.
அதுபோல ஒரு படம் #கமல் க்கு வராதா என்று ஏங்கித்தவிக்கின்றேன்.
வியாபாரப் புயலில் அடித்துச்செல்லப்பட்ட கலைப்படகு வேறுவழியில்லாமல் வணிகத்துடுப்போடுகின்றது. கலைத்துடுப்போடும் நாள் எந்நாளோ.
அதுமட்டுமல்லாமல், நகைச்சுவையிலும் நாகேஷுக்கு வாரிசு என்று இவரைச்சொல்லலாம். ராணித்தேனீ என்ற பழைய படத்தில் தனி நகைச்சுவை ட்ராக்கில் வந்து கலக்கி இருப்பார். அது போன்ற தனி நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து நம்மை எல்லாம் இன்புறச்செய்ய வேன்டும் என்று வேன்டிக்கேட்டுக்கொள்கின்றேன்.

Friday, August 12, 2016

பாரீஸ் நகரில் ஒருநாள் நள்ளிரவில். (Midnight in Paris)

பசியோடு இருக்கும்பொழுது சாப்பிட்டால்தானே உணவின் சுவை அதிகமாகும்!. திரைப்படமும் அப்படித்தான். ஏதோ சிந்தனையில் பார்த்தால் எதுவும் விளங்காது. மனதை சமநிலைப்படுத்தி பொறுமையாக பார்த்தால் மிகவும் ரசனையாகத்தான் இருக்கும். அப்படி அனுபவித்து பார்க்க வேன்டிய படம்தான் MidNight in Paris.
பாரீஸ் நகர வீதிகளில் நள்ளிரவில் கதாநாயகன் சுற்றி அலையும் பொழுது ஒவ்வொரு நாளும் காலத்தின் பின்நோக்கி பயனித்து  வரலாற்று சிறப்பு மிக்க மனிதர்களை சந்தித்து அளாவளாவி மகிழும் அனுபவம் பெறுவார்.
அதுபோல ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று என்னை ஏங்க வைத்த படம் அது.
5 நாள் இன்பச்சுற்றுலா சென்றிருந்த போது நேற்று கிடைத்தது .
இரவு முழுதும் சுற்றி அலைந்தேன் பாரீஸ் நகரவீதிகளில். கதாநாயகன் ஓவன் சென்ற இடங்கள் நானும் சென்றேன். இரவு சரியாக 12 க்கு ஒரு சர்ச் வாசலில் காத்திருந்து வரும் காரில் ஏறி அந்த உலகத்துக்குள் போவார். நானும் 12 மணிக்கு அங்கு சென்றேன். கார்தான் வரவே இல்லை ஆனால் அந்த ராத்திரி உலாவில் நல்ல நன்பர்கள் நிறையபேர் கிடைத்தனர். நல்லதொரு அனுபவமாக இருந்தது.










Tuesday, July 26, 2016

#கபாலி சாதித்தது பெரும் வெற்றிதான், சந்தேகமே இல்லை.

#‎கபாலி‬ திரைப்படம் பலவிதமான தாக்கங்களை அனைத்து தரப்பிலும் உன்டாக்கிஇருக்கின்றது என்றால் அதில் மிகை இல்லை.
விளம்பர யுக்திகள், வியாபார தந்திரங்கள், பிரசித்திப்படுத்தும் உத்திகள், டிக்கெட் விலை, படத்தின் தரம், நல்லா இருக்கிறது இல்லை என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், பட வெளியீட்டுக்குப்பிறகு அதன் போக்கு அப்படியே மாறிவிட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், படத்தை விளம்பரப்படுத்தி அதீத புரொமொசன் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் எல்லாம் அப்படியே யூ டர்ன் அடித்து படத்தை கன்னா பின்னா என்று திட்டி கேவலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டனர். "அப்படித்தான்டா முன்னேறுவோம்" என்று சொல்லுவதைக் கூடதாங்க்கிக்கொள்ள முடியலையே இவர்களால்?
படத்தை கரித்து கொட்டிக்கொன்டு இருந்த கீழ்த்தாட்டு மக்கள் எல்லாம், எல்லாம் என்னடா அதிமேதாவிகள் , மேன்மையானவர்கள் என்று தங்களையே சொல்லிக்கொள்பவர்கள் எல்லோரும் படத்தை எதிர்க்கின்றனரே இதற்காகவே படத்தை பார்க்கனும்ன்னு படத்தை புரமோட் செய்யும் வேலையில் இறங்கி விட்டனர்.
எல்லாம் "அம்பேத்கர் கோட்" மற்றும் "கால் மேல் கால் போட்டு உக்கருவேன்டா" வசனம் தான் காரனம்.
அந்த விதத்தில் கபாலி சாதித்தது பெரும் வெற்றிதான், சந்தேகமே இல்லை.

Sunday, July 10, 2016

இந்த பிரபஞ்சம் எப்படிப்பட்டது அதன் தன்மை என்ன?


கருந்துளை என்பது மிக அதிகமான , கணக்கில் அடங்காத புவி ஈர்ப்பு விசை கொன்ட நட்சத்திரத்தினை குறிக்கும்.

அதிகமான நிறை கொண்ட நட்சத்திரம் வெடித்துச்சிதறும்பொழுது அதன் மையப்பகுதி அதிகமான நெருக்குதலுக்கு உள்ளாகி நிறை எண்ணிலடங்கத அளவு அதிகமாகும்பொழுது அது கருந்துளை ஆகின்றது.

கருந்துளையானது நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஈர்ப்புவிசையினை கொன்டிருக்கும். அதனுள் விழுந்த எந்த பொருளும் வெளியேற முடியாது.  ஒளிகூடஅதில் இருந்து வெளியேற முடியாது. அதனால்தான் அது கருப்பு நிறத்திலேயே இருக்கும். யாரும் பார்க்க முடியாது.

சரி, அதனுள் விழுந்த ஒரு பொருள் என்னவாகும்?

சக்கர நாற்காலி இயற்பியல் கதாநாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் (stephen hawking) என்ன சொல்லுகின்றார் என்றால், "கருந்துளையில் விழுந்த பொருள்  சிதைக்கப்பட்டு அதன் அணுக்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டுவிடும், அதன் வடிவம், மற்றும் அது கொண்டிருந்த அடையாளங்கள் எல்லாம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்"

ஆனால் பெரும்பாலான மற்ற இயற்பியல் வல்லுனர்கள் அத்ற்கு மாற்றான கருத்தினையே கொன்டுள்ளனர்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகதில் பணியாற்றும் இயற்பியல் பேராசிரியர் லியனார்டு சஸ்கின்ட் அவர்கள்நுகுறித்து பல விவாதங்களை ஸ்டீபன் ஹாக்கிங் உடன் மேற்கொன்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏழாம் பொருத்தம்தான். (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும்  நீல்ஸ் போருக்கும் இருந்தது போலத்தான்).
இருவருக்குமிடையேயான விவாதம் இன்றளவிலும் தொடர்கின்றது. இந்த சன்டை குறித்து சஸ்கின்ட் எழுதிய புத்தகம் "The Black Hole War" மிகவும் பிரசித்தி பெற்றது.

லியனார்டு சஸ்கின்ட் என்ன சொல்லுகின்றார் என்றால்,

 "கருந்துளையில் விழுந்த பொருளானது அதன் வடிவத்தை இழந்து அணுக்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டு பல இடங்களில் இருந்தாலும் அவைகளை ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்த்தால் முழு வடிவமும் புலப்படும். அது ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஹாலோகிராம் படம் போலத்தான் (holographic picture) இருக்கும். சொல்லப்போனால் இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒரு ஹாலோகிராம் சித்திரம் போன்றதுதான்."

அவரது இந்த கருத்துக்கு ஒரளவுக்கு ஆதரவு கிடைத்து இருக்கின்றது. ஆனாலும் முழுதாக் நிருபிக்கப்பட்வில்லை.

இது குறித்த விவாதத்தினை இந்த கானொளியில் கன்டேன்.

Raphael Bosso , Herman Verlinde , Gerard 't hooft and Leonard Susskind நால்வரும் தங்களது கருத்துக்களை சொல்லுகின்றார்கள்.

ஸ்டீபன் ஹாக்கிங் குறித்து அவர் ஒரு பிடிவாதக்காரர், மற்ரவர்கள் கருத்துக்களை காதில் கேளாதவர் என்றெல்லாம் குற்றம் சாட்டுகின்றார்கள்.

நான்கு குருடர்கள் யானையை தொட்டுப்பார்த்து எப்படி இருக்கும் என்று சொல்லுவதைபோலத்தான் இவர்கள் இந்த பிரபஞ்சத்தினைப்பற்றி சொல்லுகின்றார்கள்.

உண்மையை யார்தான் அறிவாரோ !!!!



Thursday, May 12, 2016

ரம்மி "touch and dic"


ஞாயிற்று கிழமை ஓய்வு நேரங்களில் மற்றும் கல்யாண வீடுகளில் மிக பிரசித்தமான விளையாட்டு #ரம்மி. இதற்காகவே திருமன நிகழ்சிகளை ஆவலுடன் எதிர் நோக்கி போவது உன்டு.
"நாக் அவுட்" என்ற முறையிலான ரம்மி விளையாட்டில் மிகுந்த பரபரபரப்பு, எதிர்பார்ப்பு மற்றும் எதிர்பாரத திருப்பங்கள் நிறைந்து இருக்கும்.
"touch and dic" , "one card position" மற்றும் "must dic" இந்த நிலைகள் விளையாடுபவர்களின் இருக்கை நுனிக்கே கொன்டு வந்துவிடும்.
நன்பர்கள் உறவினர்கள் கும்பலாக விடிய விடிய, இந்த விளையாடை அனுபவித்து விளையாடுவதோடல்லாமல், உரையால்கள் மற்றும் கின்டல் பேச்சுக்கள் , நொறுக்குத் தீனிகள் என்று களைகட்டும்.
மனைவி பிள்ளைகளை அசந்த நேரத்தில் ஏமாற்றிவிட்டு நன்பர்களுடன் ரம்மியில் ஐக்கியம் ஆவது மிக்க த்ரில் நிறைந்தது ஆகும்.
மக்களுக்கான சேவையில் நவீன உலகில், ஆன்லைன் ரம்மி இதோ.
உலகம் முழுவதும் உள்ள குழுக்களுடன் விளையாடி மகிழலாம்.

https://www.rummycircle.com/

Saturday, February 06, 2016

#விசாரணை. படு பாலாத்தனமான படம்.

#விசாரணை. படு பாலாத்தனமான படம். (#visaranai)

நடப்பதைத் தானே காட்டுகின்றோம் என்று சொல்லி நம் இதயங்களை நொறுக்குவதே வேலையா போச்சு. இதையெல்லாம் காட்டினால்தான் மக்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியும் என்ற வாதம் சரி என்றாலும், வக்கிரபுத்த்தியை காசாக்கும் வியாபாரத்தனம்தான் மேலோங்கி இருப்பதுபோல இருக்கு.


இதனால் அப்பாவிகள் விழிப்புணர்வு பெறுவார்கள் என்று நான் நம்பவில்லை. வக்கிரத்துக்கு தீணி என்றே சொல்லுவேன்.


படத்துக்கு விதி ன்னு பெயர் வைத்திருக்கலாம். வெற்றி மாறன் பாலா மாறன் ஆகிவிட்டார்.

 ஏழைகளும் அப்பாவிகளும் சினிமாவில்கூட சந்தோஷமான வாழ்கையை கொள்ளமுடியாது என்ற பாலாத்தனமான படம்.
 #விசாரணை.



Friday, January 15, 2016

உங்களில் சைக்கோத் தனம் ஒளிந்து இருக்கின்றதா?

தனது தந்தையின் இறந்த துக்கத்துக்கு வீட்டிற்கு வந்திருந்த ஒரு இளைஞன் பார்த்த மாத்திரத்திலேயே மருத்துவக்கல்லூரி மாணவியான அவளை மிகவும் கவர்ந்துவிட்டான். அவனை சந்திக்கவேன்டும், பார்த்துக்கொன்டே இருக்கவேன்டும், பழகவேன்டும் என்ற ஆசை பொங்கிவழிந்தது. அவன்யார், பெயர் என்ன என்று விசாரித்து அறியுமுன் அவன் கிளம்பிவிட்டான். அவனைப்பற்றிய விவரம் யாருக்கும் தெரியவில்லை. தினமும் அவன் நினைப்பிலேயே வழக்கமான வாழ்வினை மறந்தாள், தூக்கம், படிப்பு, கல்லூரி நண்பர்கள், மற்றும் சாப்பாடு அனைத்தும் மறந்தாள். அவள் உலகிலேயே மிக அதிகம் நேசித்த தனது அன்புத் தங்கையிடம் கூட பேச மறந்தாள். நாளுக்கு நாள் உடல்மெலிந்து மனநிலை பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுவதைக்கன்ட அவளது தங்கை மிகவும் கவலை கொன்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். மருத்துவரும் ஒன்றும் கன்டுபிடிக்க முடியாமல் கை விரித்துவிடார். ஒருநாள் அவள் தனது அன்புத்தங்கையை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டாள். அதுகுறித்து அவள் கவலையோ வருத்தமோ கொள்ளவில்லை. ஏன் கொன்றாள் என்று போலீசால் கன்டுபிடிக்கமுடியவில்லை.
ஏன்கொன்றாள்?
இது மனவியல் பாடத்தில் வரும் ஒரு புதிர் ஆகும். அவள் கொன்றதின் சரியான காரனத்தை கன்டுபிடித்துவிட்டால், உங்களுக்குள் சைக்கோ தனம் புதைந்து இருந்தாலும் இருக்கலாம் என்று சொல்லலாம்.
இதைவிட எளிமையான கேள்வி இருக்கின்றது.
பாலாவின் அடுத்த படத்தை வெளியான முதல் நாளே பார்ப்பீர்களா?

‬ 
நான் சத்தியமா ‪#‎தாரைதப்பட்டை‬ பார்க்கலைங்க.
#தாரைதப்பட்டை #தாரை தப்பட்டை