Saturday, February 06, 2016

#விசாரணை. படு பாலாத்தனமான படம்.

#விசாரணை. படு பாலாத்தனமான படம். (#visaranai)

நடப்பதைத் தானே காட்டுகின்றோம் என்று சொல்லி நம் இதயங்களை நொறுக்குவதே வேலையா போச்சு. இதையெல்லாம் காட்டினால்தான் மக்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியும் என்ற வாதம் சரி என்றாலும், வக்கிரபுத்த்தியை காசாக்கும் வியாபாரத்தனம்தான் மேலோங்கி இருப்பதுபோல இருக்கு.


இதனால் அப்பாவிகள் விழிப்புணர்வு பெறுவார்கள் என்று நான் நம்பவில்லை. வக்கிரத்துக்கு தீணி என்றே சொல்லுவேன்.


படத்துக்கு விதி ன்னு பெயர் வைத்திருக்கலாம். வெற்றி மாறன் பாலா மாறன் ஆகிவிட்டார்.

 ஏழைகளும் அப்பாவிகளும் சினிமாவில்கூட சந்தோஷமான வாழ்கையை கொள்ளமுடியாது என்ற பாலாத்தனமான படம்.
 #விசாரணை.



1 comment:

காரிகன் said...

விசாரணை படம் குறித்து நிறைய விமர்சனங்கள் ஏதோ தமிழில் வந்த உலகப் படம் என்ற ரேஞ்சில் இருந்தன. எனக்கு படத்தின் கதை, அதை எடுத்த விதம் இரண்டையும் படித்தபோதே இது இன்னொரு பாலா வகைப் படம் என்று தெரிந்துவிட்டது. அடிப்பதையும் உதைப்பதையும், ரத்தம் ஒழுகுவதையும், மூச்சா போவதையும் படமாக எடுத்தால் உலகப் படம் என்ற தகுதி கிடைத்துவிடும் போலிருக்கிறது. என்ன ஒரு மேம்பட்ட சிந்தனை நமது விமர்சகர்களுக்கு. வெற்றி மாறன் மற்றொரு செயற்கையான இயக்குனர். இத்தனை பாராட்டுதல்களுக்கு அவர் தகுதி உள்ளவரல்ல என்பது என் எண்ணம்.

மிகச் சரியாக இந்த வெற்றுப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பாலு மகேந்திரா, பாலா போன்ற போலி இயக்குனர்களின் வழித்தோன்றல்கள் பின் எப்படி படம் எடுக்கும்?