Tuesday, December 08, 2015

ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட்

#ஆப்பிள்  (#Apple) நிறுவனமானது உயிர் விடும் தருவாயில் இருந்த காலம்  அது. 1997ம் ஆண்டு #மைக்ரோசாப்ட் (#Microsoft) நிறுவனத்தின் மீது போட்டியில்லத சர்வாதிகாரமான வியாபார அழுத்தங்கள் என்று பல்வேறு வழக்குகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் அந்த அவப்பெயரை நீக்க மிகவும் எளிமையான வலுவில்லாத போட்டியாளரை களத்தில் இறக்குவது என்று அதன் நிறுவனர் பில்கேட்ஸ் முடிவு செய்தார். அவர்தேர்ந்தெடுத்த அந்த நோஞ்சான் போட்டியாளர் ஆப்பிள் நிறுவனம். அதன்மீது 15 மில்லியன் டாலர்களை (சுமார் 100 கோடி ரூபாய்) 1997ம் ஆண்டு முதலீடு செய்தார். அதிலிருந்து ஆப்பிளுக்கு ஏறுமுகம்தான். படபடவென உயர்ந்து மைக்ரோசாப்டை முந்திச்சென்றுவிட்டது. பில்கேட்ஸ் ஒன்றும் செய்ய முடியவில்லை நம்பியார் மாதிரி கடுகடுஎன்று கையை பிசைந்து கொன்டு வாழுங்கள் நன்றாக வாழுங்கள் என்று சொல்லத்தான் முடிந்தது.

இன்றையமதிப்பில் ஆப்பிளின் சந்தை மதிப்பானது 43 லட்சம் கோடி ரூபாய், மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  சந்தை மதிப்பனது  29 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

2 நாட்க்களுக்கு முன்னார் சன் ஹொசே நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் எதிரெதிராக இரண்டு வைரிகளின் கடை விரிப்பில் மூலம் மக்களின் இதையங்களை கவரும் முயற்சியில் ஆப்பிளின் வெற்றி தெரிந்தது. (வீடியோ இனைப்பு கீழே)

வள்ளுவரின் திருக்குறள் நினைவுக்கு வந்தது.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து. 

Tuesday, November 24, 2015

லூசி

#Lucy
இன்றைய கூகிள் டூடுல், லூசியை கவுரவப்படுத்தி இருக்கின்றது.

#லூசி என்பவள் 32 லட்சம் வருடத்துக்கு முந்தைய மனுசி ஆவாள். உன்மையில் சொல்லப்போனால் குரங்குக்கும் இன்றைய மனிதனுக்கும் இடைப்பட்ட இனம் . என்றாலும் இவளே நமது மூத்த முன்னோர் ஆவாள்.

1974 ம் ஆண்டு எத்தியோப்பியாவில் இவளது உடல் படிமங்கள் கன்டுபிடிக்கப்பட்டன. இரண்டு கால்களால் எழுந்து நடந்த முதல் குரங்கு (அல்லது மனித) இனம் என்று கன்டறியப்படநு.

மனித இனத்தின் ஆரம்பம் மற்றும் பரினாம வளர்ச்சி ஆனது மிகவும் புதிர் ஆனது ஆகும். இது தற்செயலாக நடந்தது அல்ல என்று உறுதியாக சொல்லாம். ஏனென்றால் மனிதன் இன்னும் பரினாம வளர்ச்சி என்ற பாதையில் பயணித்து போய்க்கொன்டிருக்கின்றான். எதை நோக்கியோ நாம் பயணித்துக்கொன்டிருக்கின்றோம்.

இதை கன்டுபிடித்து என்ன ஆகப்போகின்றது? அழகாக வாழ்ந்து அனுபவிக்கத்தானே வாழ்க்கை கொடுக்கப்பட்டு இருக்கு என்று சமாதனப்படுத்திக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையின் நோக்கம் அனுபவிக்க மட்டும் அல்ல என்று உறுதியாக நம்புகின்றேன்.

சாவே அடையாத உயிரினமானது இனவிருத்தி செய்யாது, மனிதனின் ஆயுட்க்காலம் நூறு ஆண்டுகளுக்கு குறைவானதால் தனது குனங்களை மற்றும் பண்புகளை மரபணு(Gene) மூலம் தனது சந்ததிகளுக்கு கடத்துகின்றான். அதுவும் பல சந்ததிகளை மற்றும் உடல்களை கடந்து எங்கோஓஓஓஓ பயணித்துக்கொன்டேஏஏஏஏஏஏஏ இருக்கின்றது. இதன் துவக்கமும் முடிவும் என்னவாக இருக்கும் என்று மன்டையை பிய்த்துக்கொன்டே இருக்கின்றேன்.

32 லட்சம் வருடத்துக்கு முன்னர், காடுகளிலும் மலைகளிலும் அலைந்து கொன்டிருக்கும் லூசியை சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? என்ன என்ன கேள்விகளை எல்லாம் கேட்க்க மனது துடிக்கும்.

லூசி திரைப்படத்தில், கதையின் நாயகி ஒரு கடத்தல் கும்பலால் வயிற்றில் போதைப்பொருள் தினிக்கப்பட்டு அதில் ஒன்று உடைந்து அவள் ரத்தத்தில் கலந்துவிட, அவள்  மற்றவர்களின் மனங்களை படிப்பது, மிகக்கடினமான கணக்கீடுகளுக்கு விடை கானுவது போன்ற அமானுஷ்ய சக்தியினை பெறுகின்றாள். உடையாத மற்ற போதை குப்பிகளை கன்டுபிடித்து மருத்துவர் மூலம் தன் உடம்பில் அனைத்தையும் செலுத்தி, வாழ்க்கையின் நேரத்தின் பின்நோக்கி பயனித்து முடிவில்  இந்த பிரபஞ்சத்தோடு பிரபஞ்சமாக கலந்து விடுவாள்.

வாழ்க்கையின் நேரத்தின் பின்நோக்கிய பயணத்தில் டைனோசர் காலத்தை கடந்து லூசியை சந்திப்பாள். லூசியில் விரலை தொடும் காட்சியானது அற்புதமாக இருக்கும். பிறகு பூமி உண்டான காலத்தியும் கடந்து பயணிப்பாள். பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=jCwVtbYiOqc

Friday, October 09, 2015

கூத்தாடிகள் ரெண்டுபட்டா ஊருக்குக்கு கொண்டாட்டம்தான்.

ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்பாங்க.
இங்க கூத்தாடிகளே ரெண்டுபட்டு நிக்கிறோம்ன்னு கரகாட்டகாரன் படத்துல வசனம் இருக்கும்.
‪#‎நடிகர்‬ சங்க தலைவர் தேர்தலில் ‪#‎சரத்குமார்‬ மற்றும் ‪#‎விஷால்‬அணிகளூம் மாறி மாறி விடும் அறிக்கைகளும் யூட்யூப் பேட்டிகளும் சுவாரசியமாகத்தான் இருக்கின்றன.
கூத்தாடிகள் ரெண்டுபட்டா ஊருக்குக்கு கொண்டாட்டம்தான்.

ஊடகத்துறையின் அசுர வளர்ச்சியானது பழமொழியையே மாற்றிவிட்டது பாருங்கள்

Tuesday, September 29, 2015

குவாண்ட்டம் கம்ப்யூட்டர் என்றால் என்ன அது எப்படி வேலை செய்கின்றது


குவாண்ட்டம் கம்ப்யூட்டர் என்றால் என்ன அது எப்படி வேலை செய்கின்றது என்பதனைப் பற்றி எளிய நடையில் விளக்கி இருக்கின்றேன். பாருங்கள் மற்றும் கருத்துக்களைப் பதியுங்கள்.

Friday, September 11, 2015

#மகாகவி #பாரதியார்

இந்த மகா புருஷன் வாழ்ந்த காலத்தில் இவனை ஓட ஓட விரட்டி பட்டினி போட்டு, பரிகாசம் செததற்காக, இந்த சமுதாயம் என்றைக்காவது ஒருநாள் வருந்தித்தான் தீரவேன்டும். உலகம் முழுதும் திரன்டு நின்று இவன் பாடிய பாடல்களைப் பாடி அழுது நடைபெற வேன்டிய இந்த இறுதிச் சடங்கு இன்று வெறும் 14 பேர்களுக்கு மத்தியில் ஏதோ ஒரு அனாதைப் பிணத்துக்கு நடைபெறுவதைப் போல நடப்பதற்கு இந்த உலகம் என்றைக்காவது ஒருநாள் ரத்தக் கண்ணீர் வடித்துத்தான் தீரவேன்டும். ஏன் இவனுக்கு 14 பேர்தான் கிடைத்தார்கள். நம்து சமுதாயத்தில் மனிதர்கள் எங்கே தொலைந்து போனார்கள்? இத்ற்க்கெல்லம் என்ன காரனம்? இவனது அறிவா? அல்லது இவனிடத்தில் இருந்த நெருப்பா?

இது #பாரதி திரைப்படத்தில் அறிமுகக்காட்சியில் வரும் வசனம் ஆகும்.

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

என்று சொன்ன #மகாகவி #பாரதியார் இறந்து 94 வருடங்கள் உருன்டோடி விட்டன. 38 வயதில் கண்களில் கனவுகளுடன், எமாற்றத்துடன் இயற்க்கையோடு கலந்துவிட்ட நாள் இன்று.

இவரது பாட்டுக்களிள் அனைத்து அம்சங்களையும் (முக்கியமாக சமுதாயச் சிந்தனைகளை) சிலாகித்து பேசிக்கொன்டே இருக்கலாம். இவரது அனைத்து பாடல்களிலும் ஒரு தன்நம்பிக்கை தெறித்து விழுவதைப் பார்க்கலாம்.

"தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரையாகி மாயும சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?!"

என்ற நம்பிக்கையில் வாழந்த முன்டாசுக் கவிப்பூ இளமையிலேயே உதிர்ந்தன் காரனம் துரதிர்ஷ்டமா? இல்லை சுயநலம் மிக்க இந்தச் சமுதாயமா?

அவர் கோபமாக கடவுளைப் பார்த்து கேட்ட கேள்வியெல்லாம் உன்மையில் இந்த தமிழ் சமுதாயத்தை நோக்கித்தான்.

 இயற்பியலின் தாய்வீடான ஐரோப்பாவில் குனாண்ட்டம் இயற்பியலின் நிலை குறித்து சன்டை நடைபெற்ற அந்தக் காலத்திலேயே உலகின் ஒரு மூலையில் யாரும் அறியாமல் இதுதான் இப்படித்தான் என்று "நிற்ப்பதுவே நடப்பதுவே பறப்பதுவே" பாடலின் மூலம் குவாண்ட்டம் இயற்ப்பியலை உணர்த்திய இவர் எந்தத் தர்க்கத்தின் மூலம் இதை உணர்ந்தார் என்று ஆச்சரிப்படுகின்றேன். அவரைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இந்த உலகமே அதிர்ஷ்டம் இழந்து போனது.

சமுதாயம் துக்கி எறிந்துவிடும் என்று தெரிந்துதான்

"நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுன்டோ? சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்? " என்று கேட்டாரோ?

அவரது நினைவுநாளான இன்று எனது நெஞ்சார்ந்த அஞ்லிகளை சமர்ப்பிக்கின்றேன்.

Tuesday, September 08, 2015

obsession என்ற ஆங்கில வார்த்தைக்கு இனையான தமிழ் வார்த்தை என்ன

obsession என்ற ஆங்கில வார்த்தைக்கு இனையான தமிழ் வார்த்தை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு "தொல்லை" என்று சொல்லுகிறது,
"Lord Of War" திரைப்படத்தில் கதாநாயகன், ரஷியாவின் மூலை முடுக்கெல்லாம் போய் ஆயுதங்களை குறைந்த விலையில் எடைக்கு எடை வாங்கி ஆப்ரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு விற்பனை செய்து அதுவும் சட்டத்தின் பிடியில் மாட்டாமல் செய்து, உண்மை அறிந்தபின் மனைவி நம்மிடம் இருக்கும் செல்வங்களுக்கு என்ன குறைச்சல் ஏன் இப்படி செய்கின்றீர்கள் கேட்க்கும்பொழுது, "இது பணம் சம்பந்தப்பட்டது அல்ல, நான் இதில் சிறந்தவன் எனும் போதை" என்று சொல்லுவார்.
நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்கள் கெளரவம் படத்தில் ஜெயிக்க முடியாது என்று நினைத்து மற்றவர்களால் கைவிடப்பட்ட வழக்குகளை ஜெயித்து அதில் சந்தோஷப்படும் பாத்திரத்தில் சிறப்பாக இதை கான்பித்து இருப்பார்.
சென்றவாரம் "The Big Year" திரைப்படம் மீன்டும் பார்த்தேன்(எற்கனவே பல முறை பார்த்திருக்கின்றேன்).
"Big Year" என்பது அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் உள்ள பறவைகளை கன்டு மகிழ்பவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி ஆகும். ஒரு வருடத்தில் யார் மிக அதிகமான எண்ணிக்கையில் பலதரப்பட்ட பறவைகளை பார்த்திருக்கின்றார்களோ அவர்தான் வெற்றிபெற்றவர்.
இந்தபோட்டியின் அதீத பேரார்வத்தினால் ஒரு ஒப்பந்தக்கார வியாபாரி எப்படி தனது அன்பான மனைவியை இழக்கின்றான்?, ஒரு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வடிவமைப்பளர் எப்படி பெற்றோர்களிடம் கெட்ட பெயர் வாங்கி பிறகு எப்படி சம்மதிக்க வைக்கின்றார்? மற்றும் ஒரு பணக்கார கம்பெனித் தலைவர் எப்படி அலுவல்கள் இடையே இந்தபோட்டியிலும் கலந்துகொன்டு தலையை பிய்த்துக்கொள்ளுகின்றார் என்பதுதான் கதை.
obsession என்பதின் உன்மையான பொருள் விளங்கவேன்டும் என்றால் "Big Year"நிரைப்படம் பாருங்கள். 2011ம் ஆண்டு வெளிவந்து பயங்கர தோல்வியைத்தழுவியது இந்தப்படம். ஆனால் சிலர் நெஞ்சங்களை வென்றது.

https://en.wikipedia.org/wiki/The_Big_Year

Tuesday, July 07, 2015

இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்



எங்கள் ஊருக்கு அருகில் உள்ள போடி, பொட்டிபுரம் மலையில் அமைந்துள்ள இந்திய #நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தைப் பற்றிய எதிர்மறையான மற்றும் மக்களுக்கு பயம் ஊட்டக்கூடிய  செய்திகளை பரப்பியவன்னம் இருக்கின்றார்கள் தமிழக அரசியல்வியாதிகள்.

மலைவளம் அழிந்துவிடும், பயங்கரமான கதிர் இயக்கம் எற்ப்பட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள், நிலநடுக்கம் வரும் அப்படி இப்படி என்று.

அத்தனையும் பொய். மலை வளத்துக்கும் மக்கள் நலத்துக்கும் ஒரு பொட்டு பாதிப்புகூட வராது.

அணுவை உடைத்துப் பிளக்கையில் உதிரும் சிறிதும் பெரிதுமான துகள்களில் #நியூட்ரினோ வும் ஒன்று. இந்தத் துகளானது எந்த ஒரு பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியது. சூரியனில் ஏற்ப்பட்டுக்கொன்டே இருக்கும் ஹைட்ரஜன் அணு இனைவு மோதலால் வெப்பக்கதிர்கள் உண்டாகின்றது, அதுதான் சூரிய ஒளி, அது பூமிக்கும் மற்றும் திக்கெங்கும் பரவுகையில் அதனுடன் வெளிப்பட்ட நியூட்ரினோ துகளும் பரவுகின்றன. எதிர்ப்படும் எவற்றையும் ஊடுருவிச்சேலும் திறன் கொன்டவைகளாய் இருக்கின்றன.நீங்கள் இதைப்படிக்கும் நேரத்தில் கோடானு கோடிக்கணக்கான #நியூட்ரினோ துகள்கள் உங்களை துளைத்துச் சென்றவன்னம் இருக்கின்றன.
மன்னிக்கவும்  இப்படியெல்லாம் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

கணக்கீட்டு விடைகளும், தர்க்க ரீதியிலான முடிவுகளும் இப்படித்தான் அனுமானிக்கச்சொல்லுகின்றன. அணுக்களை மோதவிட்டு பிளந்து ஆராய்சி செய்யும் விஞ்ஞானிகளும் உறுதியாக உள்ளது என்றுதான் சொல்லுகின்றனர். ஜெனீவா வில் உள்ள Large Hadron Collider தான் உலகில் பெரிய அணுப்பிளப்பு கூடம் இருக்கின்றது,

அமெரிக்காவில் உள்ள Fermilab, Illinois ஆய்வுக்கூடம் ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்து ஒன்னும் கிடைக்காமல் , நிதி போதவில்லை என்று தன்னிடம் இருந்த Tevatron அணுப்பிளப்பு கூடத்தை 2011ம் ஆண்டு ஊத்தி மூடிவிட்டது.

இன்னும் பல பெரிய நாடுகள் அணுப்பிளப்பு மற்றும் நியூட்ரினோ துகள் பிடிப்புக்கூடங்களை வைத்துக்கொன்டு அராய்ந்துகொன்டே இருக்கின்றன.

சரி நியூட்ரினோ துகளை கன்டுபிடிபதில் என்ன பயன் ஏன் இத்துனை செலவு? ஏன் இத்துனை போட்டி?

யோசித்துப்பாருங்கள், அணுவில் உள்ள எலெக்ட்ரான் துகள் கன்டுபிடிக்கப்பட்டபின் எப்பேர்ப்பட்ட அறிவியல் புரட்சி ஏற்ப்பட்டது? மனிதனின் உயிர்வாழ்வின் முறையும் நோக்கமும் முற்றிலும் மாற்றப்படது எலெக்ட்ரான் கன்டுபிடிப்பால்தான். பொழுதுபோக்கு அம்சம் தவிர மருத்துவத்துறையில் இதன் முக்கியத்துவம் சொல்லி மாளாது. MRI ஸ்கேன் ஒன்றுபோதும் இதன் மகத்துவத்தை விளக்க.

அதுபோல நியூட்ரினோ துகளும் கன்டுபிடிக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்தும் வித்தையும் மனிதன் பெற்றால் அதன் பயன்பாடுகள் மிக்க்க்க்க்க்க்க மலைப்பாக இருக்கும்.

கண்ணி வைத்து கானாங்குருவியை பிடிப்பதுபோலத்தான், அதற்க்கு வாகான பாறைகளைக்கொன்ட போடி மலைப்பகுதி இந்தியாவிலேயே சிறந்தது என்று தேர்வாகி சுத்தமான நீர் நிரம்பிய பாத்திரங்களை மலைப்பறைகளுக்கு அடியில் குகையில் வைத்து கத்திருக்கின்றனர்.

சுற்றுக்கும் மக்கள் உடல் நலத்துக்கும் தீங்கு வர வாய்ப்பே இல்லாவிட்டாலும், இது உலகமயமாக்காலின் மற்றொரு முதலீடுதான். தமிழக மக்கள் முழுமூச்சாக உலக மயமாக்கலை ஏற்றுக்கொன்டு அதனுடன் ஒத்துப்போய் பழகி பயனித்தால் நல்லதுதான் சந்தோசம்தான்.
இல்லாவிட்டால், இது கண்டிப்பாக ஒரு வர்க்க வேறுபாட்டையும் முரன்பாட்டையுமே உன்டாக்கி மிகப்பெரிய பிரச்சினையை உண்டுபன்னும். வடநாடுகளில் சாதரனமான இந்தப் பிராசினைகள் தென் தமிழ்நாட்டில் நுழையும் வாசலாகக் கூட இது மாறலாம்.

இதன் பயிற்சி அனுமதிக்கு தேர்வாகியிருக்கும் மாணவர்கள் பெர்களைப்பார்த்தால் அப்படித்தான் ஆகும் போலத்தெரிகின்றது.

http://www.ino.tifr.res.in/ino//admission.php


 List of students selected for INO Graduate Training Program - 2015

Based on the combined performance in the written test as well as in the interviews, the following students were selected for the INO Graduate Training Programme 2015, starting in August 2015.

Sl.No Ref.Code Title Name
1 69897 Mr Prasant Kumar Rout
2 61062 Mr Dhruv Dinesh Mulmule
3 84354 Mr Jaydeep Datta
4 64782 Ms Samadrita Mukherjee
5 85653 Ms Kaustav Chakraborty
6 72884 Ms Aparajita Mazumdar
7 73790 Mr Soumyadip Halder
Offer letters along with other necessary information will be send to these students by e-mail by 19-06-2015, while originals of the same were sent by Speed Post to the postal addresses supplied by the students in their application forms.

The students were requested to send their acceptance along with refundable hostel deposit by July 10, 2015. If we do not receive their reply by the stipulated date, it will be presumed that they are not interested in the offer. The selected students are expected to join the programme on July 31, 2015





Wednesday, July 01, 2015

ஶ்ரீசக்கரம் பித்தலாட்டம் (Oregon Desert Sri Yantra fake)

சமீப காலமாக வாட்ஸப் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பரவிவருவதைப் பார்த்திருப்பீர்கள்.

"இந்துவாக பிறந்த ஒவ்வொரு வரும் படித்து ஷேர் செய்ய வேண்டிய செய்தி இது.
அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் பாலைவணப் பகுதியில் 13 மைல் நீளத்துக்கு. இந்துக்களின் புனித ஆயுதமான ஶ்ரீசக்கரம் வரையப்பட்டிருக்கு, இது மனிதர்களால் முடியாத காரியம்" இந்துக்களின் பெருமையை உலகம் உணரவேன்டிய தருனம் இது"

உண்மையில் இந்த வரைபடம் கானப்பட்டது உன்மைதான், இதை வரைந்தது Bill Witherspoon எனும் ஆராய்ச்சியாளர் மற்றும் அவரது குழுவினர்தான்.

 எதைச்சொன்னாலும் நம்பும் ஒரு கூட்டம்தான் இந்த உலகில் நிறைய இருக்கின்றதே. அதில் ஒரு கூட்டம்தான் இது.

Fairfield, Iowa 52556 எனும் முகவரியில் செயல் படும் "Sri Yantra Research Center" எனும் அமைப்புதான் இந்த ஶ்ரீசக்கரம் குறித்த ஆராய்ச்சியை முடுக்கிக் கொன்டிருக்கின்றது. அது விடும் கதையில் மயங்கித்தான் ,  Bill Witherspoon மற்றும் அவரது குழுவினர் கண்ட இடங்களில் இதை வரைந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த அமைப்பின் வலைத்தளத்திலேயே இதைச்சொல்லுகின்றனர்.

http://www.sriyantraresearch.com/Article/Effects/Sri_Yantra_Effects.html

இதன் முகப்புப் பக்கத்தில் பார்த்தால் சாயம் உஅடனே வெளுத்து விட்டது. அதில் ஒரே வாஸ்த்து, மற்றும் ஓம் குறித்த விளக்கங்களாகவே இருக்கு. யாரோ இருக்கார் பின்னாடி.

கடவுள் நம்பிக்கை இருக்க வேடியதுதான், அதுக்குன்னு இப்படியா?

நம்ம மக்களும் இதை சிலாகித்து பகிர்வது வேடிக்கையாகவே இருக்கு. இப்போதைக்கு 1000 பெரியார்கள் தேவை.

Wednesday, June 24, 2015

கற்றை இயக்கவியல் கவிதை


கற்றை இயக்கவியலை (Quantum mechanics) திருக்குறள் போல சுறுக்கென்று சொல்லும் வாக்கியத்தை தமிழில் யோசித்துக்கொன்டே இருந்தேன்.
இறுதியில் பெற்றேன், செந்தமிழ் அறிவியலார் முனைவர் சுப்பராமன் இடம் இருந்து.


"அலையோ? துகளோ?
அலையோ ஒளியது மின்றித் துகளோ
அலையெனக் கொள்ளின் அலையாம்- அலையிலை
என்னில் துகளாமே ஆற்றும் நிலையொன்றும்
தன்மையைக் கொண்டே தரம்."



Sunday, June 21, 2015

காலப் பயணம் சாத்தியமா? சிறப்புச் சார்பியல் பொதுச் சார்பியல் பற்றிய அலசல்

சமீபத்தில் வெளிவந்து கலக்கிய Interstellar திரைப்படத்தில் தந்தை தனது 40 வது வயதில் தன் 12 வயது மகளை பிரிந்து விண்வெளிப்பயணத்துக்கு செல்வார்.
விண்வெளியில் அவருக்கு 2 வருடங்கள் கடந்த நிலையில் பூமியில் சுமார் 80 வருடங்கள் கடந்திருக்கும்.
தந்தையும் மகளும் மீன்டும் சந்திக்கும் இறுதிக் காட்சியில், மகள் மிகவும் முதுமையடந்த நிலையில் சாகும் தறுவாயில் இருப்பார். ஆனால் தந்தையோ மிக இளமையாக இருப்பார்.
இது ஏதோ விட்டலாச்சாரியா கதைபோல இருந்தாலும் இது நடப்பதற்க்கு அறிவியல் பூர்வமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இது எப்படி சாத்தியம் என்று இந்த கானொளியில் விளக்கியுள்ளேன். நேரம் கிடைக்கையில் பார்த்து எளிதாக புரிகின்ற வகையில் இருக்கின்றதா என்று சொல்லுங்கள்.

Thursday, June 18, 2015

மனித மனது ஏன் இப்படி எதையாவது தேடி அலைந்து கொன்டே இருக்கின்றது?

தேடும் மனப்பாண்மையே மனிதனை குரங்குகூட்டத்தில் இருந்து பிரித்து இந்த முன்னேற்றத்துக்கு அழைத்து வந்திருக்கின்றது என்றால் மிகை இல்லை.

உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதையோ தேடி அலைந்து தன் இடத்தை பிடித்து ஆக்கிரமித்துக்கொன்டான்.

பூமியை முடித்துவிட்டு விண்ணுலகில் தேடலை ஆரம்பித்து போய்க்கொன்டு இருக்கின்றான்.

அதேபோல அனுவுக்குள் என்ன இருக்குன்னு உடைத்து உடைத்து பார்த்து எமாந்து கொன்டே இருக்கின்றான்.

மனிதனின் தேடும் ஆசைக்கு தீனிபோடும் வியாபாரத்தில் கூகிள் நிறுவனம் கோலோச்சி ஏகபோக ஆளுமை செய்வதில் வியப்பேதும் இல்லை.

எத்துனை விதமான தேடல்கள், கேள்விகள், ஆர்வங்கள், ஆராய்ச்சிகள். ஒருவரின் மனம் இப்படிப்பட்டதா என்று அவர் தேடும் தேடல்களின் மூலமே அறிந்து கொள்ளலாம்.

மனித மனம் தான் விசித்திரம் நிறைந்ததே, அது தேடும் தேடலும் விசித்திரமாகத்தானே இருக்கும்.

ஆமாம் அது காலத்தை கடந்து போய் தேடமுடியுமா என்று ஆர்வத்துடன் பார்க்கின்றது.

கடந்த காலத்துக்கு போக முடியுமா? எதிர்காலத்துக்கு உடனே போக முடியுமா? போய் திரும்ப புறப்பட்ட காலத்துக்கே வர முடியுமா?

காலப்பயனம் முடியுமா முடியாதா எனும் கேள்வியை விட ஏன் மனித மனது காலம் கடந்து போக ஆசைப்படுகின்றது எனும் கேள்வி என்னுள் பலமாக எழுகின்றது.

அதுகுறித்த கட்டுரைகள், கதைகள், மற்றும் திரைப்படங்கள் எந்த காலத்திலுமே மக்களால் அத்கம் விரும்பப்படுபவைகளாகவே இருக்கின்றன.

பள்ளிப்பருவத்தில் பார்த்த "Back To The Future" திரைப்படமானது 3 பாகங்களாக வந்து சக்கை போடு போட்டது.

இன்றைக்கும் காலப்பயணத்தைக் கருவாக கொன்ட திரைப்படங்கள் வருடத்துக்கு இரண்டு வந்துகொனேதான் இருக்கின்றன. மக்களும் சளைக்காமல் பார்த்துக்கொன்டேதான் இருக்கின்றனர். சாதாரனமாக இவ்வகை திரைப்படங்கள் சற்று குழப்பமாக புரிந்து கொள்ள சற்று கடினமாக இருக்கும்.

Terminator திரைப்படமானது எளிமையாக யாருமே புரிந்துகொள்ளும்படி இருந்தது.

தன்னை அழிக்கத்துடிக்கும் மனிதனை இல்லாமல் ஆக்குவத்ற்கு அவன் பிறப்பதற்கு முன்பே அவன் அம்மாவை கொலை செய்ய ஒரு எந்திர மனிதனை கடந்த காலத்துக்கு அனுப்புகிறது ஒரு கம்ப்யூட்டர்.
அந்த மனிதனோ தன்னை பெற்றவளை காப்பாற்ற இன்னொரு எந்திர மனிதனை அதே கடந்த காலத்துக்கு அனுப்புகின்றான்.

ஆர்னால்ட் ஸ்வார்செனகர் அருமையாக நடித்து மக்களின் உள்ளங்களை கொள்ளை கொன்டார்.

மீன்டும் வருகின்றார் தயாராக இருங்கள்.

ஜுலை 1 ம் தேதி உலகமெங்கும். Terminator Genisys.

காலப் பயனம் சாத்தியமா என்றால், சாத்தியமே என்று அறிவியல் சொல்லுவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது.

இதுகுறித்த சிறு ஆவனப் படம் உருவாக்கிகொன்டு இருக்கின்றேன். ஓரிரு நாட்க்களில் வெளியிடுகின்றேன்.

Saturday, June 06, 2015

Enemy at the Gates.

உலகப்போரை பின்புலமாகக் கொன்ட திரைப்படங்கள் ஒவ்வொரு வருடங்களும் வந்துகொன்டுதான் இருக்கின்றன தயாரிப்புச்செலவு அதிகம் பிடிக்கும் இந்த மாதியான திரைப்படங்கள் எடுப்பதற்கு ஹாலிவுட் காரர்களுக்கு தயக்கமே இருப்பதில்லை, அவைகள் அரங்குகளில் சக்கைப்போடு போட்டுக்கொன்டுதான் இருக்கின்றன. இரண்டாம் உலகப்போரை பின் புலமாகக்கொன்டு நூற்றுக்கணக்கானத் திரைப்படங்கள் வந்துவிட்டன.
ஏன்?. மக்கள் போரை விரும்புகிறார்களா இல்லை நடந்துமுடிந்த போரைப்பறி அதிகம் தெரிந்துகொள்ள விரும்ப்புகின்றார்களா?
இது ஒரு உளவியல் உண்டு, போர் என்பதே அதிகார வெறிகொன்ட ஆதிக்கவாதிகளுக்கும் அடங்கிப் போக மறுக்கும் சுதந்திர விரும்பிகளுக்குமான ஆட்டமாகும் ஆமாம் போர்-ஆட்டம் ஆகும்.
வெற்றிபெற்றவன் தனது வலிமையை அனைவரும் அறிந்து கொள்ள ஆவனம் செய்கின்றான், அவனைச் சார்ந்தவர்கள் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று இறுமாந்து களிக்க கான விரும்புகின்றார்கள்.
தோற்றவனோ தவறே செய்யாத நாம் ஏபடியெல்லாம் அழிக்கப்பட்டோம் அதை மறக்கக்கூடாது அதைமீறி உற்சாகமாக வளரனும் என்று நினைவூட்ட அல்லது காயத்தைமறக்கக்கூடாது உக்கிரத்தை குறைக்காமல் இருந்து பழிவாங்கனும் என்று நாட்டாமை பொன்னம்பலம் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வது போல அதை ஆவனம் செய்கிறான். யூதர்களை இன அழிப்பு செய்த Holocaust பற்றி எத்தனை திரைப்படங்கள் வந்துவிட்டன.
நடுநிலை வாதிகளோ யார் பக்கம் நியாம் இருக்கு மற்றும் அதில் ஈடுபட்டவர்களின் மன நிலையை ஆரய்ந்து களிக்க விரும்புகின்றனர்.
திரைப்பட வியாபாரிகள் இதைப்பயன்ப்டுத்திக்கொள்கின்றனர். வெறும் போராட்டங்களைப்பற்றியே காட்டினால் தேறாது என்று அதனுடன் சினிமா மசாலாவையும் கலந்து கொடுத்தவன்னம் இருக்கின்றனர்.
பிரம்மான்டம்,, ஆரவாரம், பரபரப்பு மற்றும் சிலிர்ப்புகளை காதல், பாசம், தந்திரம் போன்றவறோடு கலந்து அற்புதமான திரைப்படம் தர போர்ப்பின்புலங்கள் தேவைப்பட்டுக்கொன்டே இருக்கின்றது.
Battle of Stalingrad 1942 ஆனது இரண்டாம் உலகப்போரில் மிக முக்கியமான் மற்றும் மிகப்பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படைகள் முதலில் அடி வாங்கிய இடம் ரஷ்யாவின் ஸ்டாலின்-கிராடு ஆகும். ஸ்டாலின்கிராடு ஜெர்மனியர்களிடம் வீழ்ந்தால் ஒட்டுமொத்த ரஷ்யாவுமே காலி என்ற இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யர்கள் உயிரைக்கொடுத்து போராடினார்கள் முடிவில் வெற்றியும் பெற்றார்கள். இந்தப்பின்புலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Enemy at the Gates.
இந்தத்திரைப்படம் 2001 ம் ஆண்டு 420 கோடி ரூபாய் செலவில் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த Jean-Jacques Annaud என்பவரால் தயாரித்து இயக்கப்பட்டது ஆகும்..
உயிரைக்கொடுத்து போராடுபவர்களுக்கு ஒரு தன்நம்பிக்கை இருந்தால்தான் இலைக்கை நோக்கி முன்னெடுப்பர், அவர்களது நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையிலான ஒரு வீரனின் பராக்கிரமச்செயல்கள் அவர்களை முன்னெடுக்கத் தூன்டும். அப்படிப்பட்ட ஒரு ரஷ்ய வீரனான வஸ்ஸிலி ஜய்ட்சேவ்(Vasily Zaytsev) பற்றியதுதான் இத்திரைப்படம் ஆகும்.
களாமாடாமல், தொலைவில் மறைத்திருந்து துப்பாக்கியால் எதிரிகளை தாக்கி களத்தில் முன்னேறும் வீரகளுக்கு பாதுகாப்பும் வழி ஏற்ப்படுத்திக் கொடுப்பதும் தான் sniper என்றழைக்கப்படும் வீரர்களின் வேலையாகும். அப்படிப்பட்ட ஒரு ரஷ்ய வீரனுக்கும் ஜெர்மன் ரானுவ-அதிகாரிக்குமான போட்டியே இப்படத்தின் கரு ஆகும்.
முக்கோனக் காதல், போர்முனைத் தாக்குதல்கள், இவைகளைஎல்லாம் விட இரண்டு sniper களுக்கு இடையேயான போட்டித்தாகுதல்கள், தந்திரமாக திட்டமிட்டு நகர்த்தல், போன்றவைகளோடு காரசாரமாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. பார்த்திருக்காவிட்டால் கண்டிப்பாகப் பாருங்கள்.
ஆரம்பத்தில் ரஷ்ய வீரர்கள் வோல்கா நதியைக் கடக்கும்பொழுது ஜெர்மன் படைகள் தாக்கும் காட்சி உள்ளத்தை உறையவைக்கும் வகையில் இருக்கும்.

http://www.imdb.com/title/tt0215750/

Friday, May 22, 2015

10ம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள்



10ம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள்.

முக்கியமான விமர்சனமானது, "சமச்சீர் கல்வியினால் பாடங்களும்ம் வினாக்களும் இலகுவாக்கப்பட்டன அத்னால்தால் இத்துனை பேர் அதிக மதிப்பென் எடுத்து முன்னனியில் இருக்கின்றனர்" என்பதாகும்.

 
படித்து முடித்தவுடனே வேலை என்ற ஒரே நன்மை கொன்டதான் கல்வித் தகுதி ஆகும். வேலைக்கு சேர்ந்தபிறகு எல்லா இழவும் ஒன்றுதான். மிக-உயர்ந்த என்று சொல்லிக்கொள்கின்ற கல்லூரியில் படித்தவர்கள் அந்த கல்லூரியில் பெற்றதாகச் சொல்லிக்கொள்கின்ற அதிகப்படியான அறிவினால் ஒன்றையும் கழட்டமுடியாது.

அவர் எப்படி வேலையை கற்றுக்கொள்கின்றார், எந்த அளவுக்கு மனமுவந்து ஈடுபடுகின்றார், எந்த அளவுக்கு மேலதிகாரியின் பொறுப்பினை தான் ஏற்றுக் குறைக்கின்றார், பொன்றவற்றைபொறுத்தே அவரது வளர்ச்சி இருக்கின்றது.

உயர்ந்த கலூரியில் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்கின்றவர்களை விட மற்றவர்கள்தான் இந்த விஷயத்தில்,கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர் என்பது உலகறிந்த விஷயம்.

அறிவாளிகள் மற்றும் உயர்ந்த மதிப்பெண் பெற்ற்வர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை கொன்டிருந்த இன்போசிஸ் கதை தெரிந்ததுதானே!.
அதன் தலைமை அதிகாரியே பட்டவர்த்தனமாக "ஒழுங்காக வேலை பார்க்காவிட்டாஅல் தூக்கிவிடுவோம்
" ர்ன்று அறிக்கை விட்டிருந்தார். இப்பொழுது யாராவது சேரமாட்டார்களா என்று தேடிக்கொன்டிருக்கின்றார்கள்.

சமச்சீர் கல்வி என்பது ஒன்னுக்குமே லாயக்கில்லாதவன் என்று உளத்தாக்குதல் செய்யப்பட்டு முடங்க்கிடப்பவனை தட்டி எழுப்பி சீராக்கும் அருமருந்து ஆகும்.

பிறப்பிலே அதிகப்படியான அறிவு கொன்டுள்ளதாகச் சொல்லிக்கொள்கின்றவர்களுக்கு இதனால் என்ன பிரச்சினை வரும் என்று தெரியவில்ல.
மேலும் இதனால் நாட்டின் மொத்த உற்ப்பத்தி கூடும்தான் ஒழிய பழுது ஏதும் இல்லை.

Tuesday, May 05, 2015

உலகம் புரிந்தவன் முகம் காட்டும் சோகம் முகநூல் சன்டைககளாயிருக்க,


ஏழை மற்றும் குழந்தை முகம்காட்டும் சோகம், பசி மட்டுமே.


விதி என்னும் நதி ஒருபக்கமாகவே ஓடுகின்றது.

Thursday, April 02, 2015

10 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து பொருளீட்டும் பொருட்டு ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த நேரம் கோபே நகரில் பணியாற்றிக்கொன்டிருந்தேன். மனது கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் அருகில் உள்ள ரோக்கோ மலை உச்சிக்கு (Rokko mountain) நடந்து போவேன். இயற்கைகளை கடந்து போய் இறங்குகையில் மனது மிக லேசாகி இருக்கும். ஒருமுறை ரோக்கோ மலையில் நீண்ட நேரம் தங்கிவிட்டேன், இரவு ஆகிவிட்டது, இறங்குகையில் வழியில் உள்ள Nunobiki Falls ல் அமெரிக்கர் ஒருவர் கிட்டார் இசைத்துக்கொன்டே "Red River Valley " பாட்டு பாடினார். மிக அழகாக நேந்தியாக இருந்தது. அந்தபாட்டு என் மனதை விட்டு அகலவே இல்லை. (கீழே கொடுத்துள்ள இனைப்பை பார்க்கவும்).

மனதில் பதிந்துவிட்ட இசையை நினைவுகூர்தல் என்பது காலப்பயணம் தனே? ஆமாம் இந்தபாட்டை நினைக்கும்போதெல்லாம் அந்த காலங்களுக்குள் சென்றுவிடுவேன்.

சமீபத்தில் Wild ஆங்கிலப்படம் பார்த்தேன். கதாநாயகி, அம்மாவை இழந்து, விவாகரத்து ஆகி, கெட்ட பழக்கங்களுக்கு அடிமைஆகி அதிலிருந்து மீன்டெழும் முயற்ச்சியில் மலைப்பாதையில் 1750 கிலோமீட்டர் நடைப்பயணத்தை மேற்கொள்வார். வழியில் ஏற்ப்படும் அனுபவங்களும் பழையனவற்றை நினைவு கூறலுமே இந்த படமாகும்.

ஒருஇடத்தில், ஒரு பாட்டியையும் அவர் சிறு வயது பேரனையும் பார்க்கையில் அச்சிறுவன் "Red River Valley" பாட்டை பாடிக்காட்டுவான். அதைப் பார்க்கும் வேளையில் என் உடம்பு புல்லரித்துவிட்டது.

https://www.youtube.com/watch?v=gooN9iu4EbM