Tuesday, September 08, 2015

obsession என்ற ஆங்கில வார்த்தைக்கு இனையான தமிழ் வார்த்தை என்ன

obsession என்ற ஆங்கில வார்த்தைக்கு இனையான தமிழ் வார்த்தை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு "தொல்லை" என்று சொல்லுகிறது,
"Lord Of War" திரைப்படத்தில் கதாநாயகன், ரஷியாவின் மூலை முடுக்கெல்லாம் போய் ஆயுதங்களை குறைந்த விலையில் எடைக்கு எடை வாங்கி ஆப்ரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு விற்பனை செய்து அதுவும் சட்டத்தின் பிடியில் மாட்டாமல் செய்து, உண்மை அறிந்தபின் மனைவி நம்மிடம் இருக்கும் செல்வங்களுக்கு என்ன குறைச்சல் ஏன் இப்படி செய்கின்றீர்கள் கேட்க்கும்பொழுது, "இது பணம் சம்பந்தப்பட்டது அல்ல, நான் இதில் சிறந்தவன் எனும் போதை" என்று சொல்லுவார்.
நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்கள் கெளரவம் படத்தில் ஜெயிக்க முடியாது என்று நினைத்து மற்றவர்களால் கைவிடப்பட்ட வழக்குகளை ஜெயித்து அதில் சந்தோஷப்படும் பாத்திரத்தில் சிறப்பாக இதை கான்பித்து இருப்பார்.
சென்றவாரம் "The Big Year" திரைப்படம் மீன்டும் பார்த்தேன்(எற்கனவே பல முறை பார்த்திருக்கின்றேன்).
"Big Year" என்பது அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் உள்ள பறவைகளை கன்டு மகிழ்பவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி ஆகும். ஒரு வருடத்தில் யார் மிக அதிகமான எண்ணிக்கையில் பலதரப்பட்ட பறவைகளை பார்த்திருக்கின்றார்களோ அவர்தான் வெற்றிபெற்றவர்.
இந்தபோட்டியின் அதீத பேரார்வத்தினால் ஒரு ஒப்பந்தக்கார வியாபாரி எப்படி தனது அன்பான மனைவியை இழக்கின்றான்?, ஒரு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வடிவமைப்பளர் எப்படி பெற்றோர்களிடம் கெட்ட பெயர் வாங்கி பிறகு எப்படி சம்மதிக்க வைக்கின்றார்? மற்றும் ஒரு பணக்கார கம்பெனித் தலைவர் எப்படி அலுவல்கள் இடையே இந்தபோட்டியிலும் கலந்துகொன்டு தலையை பிய்த்துக்கொள்ளுகின்றார் என்பதுதான் கதை.
obsession என்பதின் உன்மையான பொருள் விளங்கவேன்டும் என்றால் "Big Year"நிரைப்படம் பாருங்கள். 2011ம் ஆண்டு வெளிவந்து பயங்கர தோல்வியைத்தழுவியது இந்தப்படம். ஆனால் சிலர் நெஞ்சங்களை வென்றது.

https://en.wikipedia.org/wiki/The_Big_Year

No comments: