Friday, September 05, 2008

எனது VAV மற்றும் VVN வைரஸ் நீக்கிகள் (பாகம் 6)

(இதைப்படித்து விட்டு இங்கு வரவும் ( வைரஸுடனான முதல் அனுபவம் )

அதன் பிறகு வைரஸ் வேட்டையாடத்துவங்கினேன், கிடைக்கும் வைரஸ்களை எல்லாம் ஆராய்ந்து அதை நீக்கும் நிரல்களை எனது வைரஸ் நீக்கியில் சேர்த்துக்கொன்டிருந்தேன். அந்த வைரஸ் நீக்கும் மென்பொருளுக்கு VAV (Vijay Anti Virus) என்று பெயரிட்டு இருந்தேன், எனது மாணவர்களும் பெயர் நன்றாக இருக்கின்றது என்று சொன்னார்கள். ஆரம்பகாலங்களில் அதை விற்பனை செய்யவில்லை, அதை எனது பள்ளி மாணவர்களுக்கான மென்பொருட்களுடன் இலவசமாக கொடுத்துக்கொன்டிருந்தேன். ஒருமுறை மிகவும் மோசமான விளைவுகளை கணணியில் ஏற்படுத்தும் வகையான வைரஸ் ஒன்று அதிவேகமாக தென்தமிழ் நாட்டில்பரவியது. அதன் பெயர் ஒன்‍ஆஃப் என்பதாகும் (one half virus) ஒண்ணரை வைரஸ் ஒரு கணணியில் இருக்கின்றதா என்று கன்டுபிடிப்பதே மிகவும் கடினமாகும். பைல், பூட்‍செக்டார்பகுதிகளை த்தாக்கும், உருவத்தை மாற்றிக்கொன்டேயிருக்கும், இயக்கத்தில் இருக்கும்பொழுது கன்டுபிடிக்க முடியாது, அதற்கு நிவாரணம் கன்டுபிடித்து அதை நீக்கும் நிரலை எனது வைரஸ்நீக்கியில் சேர்த்தபிறகுதான் VAV மிகவும் பிரபலமாகத்துவங்கியது. அந்தநேரத்தில் இந்தியாவில் ஒண்ணரை வைரஸுக்கு இருந்த ஒரே நிவாரணி VAV தான், குறுகிய காலத்துக்குள்ளே மள மள வென்று விற்றுத்தீர்ந்தது. கடைநிலை உபயோகிப்பாளர்களுக்கு விலை 750 ரூபாய் முகவர்களுக்கு 350 ரூபாய் என்று ஓடிக்கொன்டு இருந்தது.
அந்த நேரத்தில் பள்ளிமாணவர்களுக்கான புதிய மென்பொருள் தயாரிப்பதற்காக கிராபிக்ஸ் வேலை நிறைய செய்யவேன்டியிருந்தது. அப்பொழுது DOS உபயோகத்தில் தமிழ் தட்டச்சு செய்ய கனடா நாட்டிலிருந்து சீனிவாசன் என்பவர் தயாரித்திருந்த "திரு" என்ற மென்பொருளை உபயோகப்படுத்திக்கொன்டிருந்தோம். அதிலிருந்த தமிழ் எழுத்துக்களையெல்லாம் திரையிலி இருந்து எடுத்து கிராபிக்ஸ் படங்களாக மாற்றி, தமிழ் செய்திகளை திரையிலிடும்படியான நிரல் தயாரித்தேன்.

அதை அடிப்படையாகக்கொன்டு தமிழிலேயே ஒரு வைரஸ் நீக்கும் மென்பொருளை தயாரித்தேன். VVN (விஜய் வைரஸ் நீக்கி) என்ற பெயரில் வெளியிட்டேன். அது மிகவும் பிரபலமாகிவிட்டது. தமிழில் மென்பொருளே மிக மிக அரிதானதான அந்த காலகட்டத்தில் எனது தமிழிலேயான வைரஸ் நீக்கும் மென்பொருள் VVN மிகுந்த பிரபலமாகிவிட்டது. அதுதான் என்னை பின்நாளில் சென்னை கேசவன் கம்ப்யூட்டிங் நிறுவனர் கேசவன் என்றழைக்கப்படும் திரு கேசவர்த்தனன் அவர்களை சந்திக்கச்செய்தது. (K7computings, J.Kesavardhanan )

மதுரையில் "மைக்ரோபேஸ் கம்ப்யூட்டர்" மற்றும் "மெஷின் மேன் சிமுலேஷன்" (Microbase computers, and Machine man simulation, madurai) நிறுவணத்தை நடத்திக்கொன்டிருந்த திரு வெங்கடேஷ் என்பவர் கேசவன் கம்ப்யூட்டிங்(K7 computings) தயாரிப்பான VX2000 வைரஸ் நீக்கிக்கு ஏஜன்ட்டாக இருந்தார். அவர்தான் கேசவர்த்தனன் அவர்களிடம் என்னைப்பற்றி சோல்லியிருக்கின்றார். கேசவன் சந்திப்பு என் கணணிப்பாதையின் போக்கை மீன்டும் பெருத்த அளவில் மாற்றியது. அது குறித்து அடுத்து எழுதுகிறேன்.

கீழே VAV (Vijay Anti Virus) வைரஸ் நீக்கியின் பல்வேறு திரையின் படங்களை கொடுத்திருக்கின்றேன்.
படத்தினை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும்
VAV (Vijay Anit Virus)







அடுத்து வருவது VVN விஜய் வைரஸ் நீக்கி




தொடர்ச்சி இங்கே பத்திரிக்கை உலகுக்கு அறிமுகம்