Tuesday, November 06, 2012

மறக்க முடியாத மதுரை.

மறக்க முடியாத மதுரை.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் மதுரை மாநகர் என்னூடைய வாழ்வோடு ஒன்றிப்போனது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகம், எங்கள் கல்லூரி வளாகம், நகர ஊர்திகள், தாவனி, மற்றும் மல்லிகை சகிதம் வந்து உள்ளத்தை கொள்ளைகொள்ளும் கல்லூரி குமாரிகள், டவுஹால் ரோடு, மீனாட்சியம்மன் கோவில், பொற்றாமரை குளம், தங்கம் தியேட்டர், மாப்பிள்ளைவிநாயகர் தியேட்டர், தீபா/ரூபா தியேட்டர், ரீகல் தியேட்டர், சக்தி சிவம், சினி/மினிப்பிரியா, எல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளாக, நெஞ்சில் நிறைந்து இருக்கின்றன.

அனைத்துக்கல்லூரி போட்டிகள் என்றால், எங்கள் நன்பர்கள் குழு அங்கே கட்டாயம் ஆஜர். ரக ரகமான விசில்கள், வித விதமான ராக்கெட்கள், வகை வகையான சப்தங்கள் என்று ரகளையாக இருக்கும். ஒருமுறை தியாகராஜர் கல்லூரியில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சியின்போது எங்கள் குழுவுக்கும், இன்னொரு குழுவுக்கும் தகராறு வந்துவிட்டது. உனவு விடுதியில் கைகலப்பாக மாறிவிட்டது, நடந்த அடிதடியில், உனவுவிடுதியில் வைத்திருந்த குளிர்பானங்கள், வடை, இட்லி, சாம்பார், சட்னி எல்லாம் தூக்கி வீசப்பட்டன. அந்நேரம் எனது காலடியில் ஒரு பெரிய உப்புமா கட்டி ஒன்று வந்து விழுந்தது அப்ப வேகமா ஓடிவந்த ஒரு கல்லூரி மாணவர் தனது இரு கைகளாளும், அந்த பெரிய உப்புமா கட்டியை எடுத்துக்கொன்டு ஓடியது இன்னும் எனது க்ண்ணுக்குக்குள்ளேயே இருக்கின்றது.

தினமும் ஒருமுறை டவுன் ஹால் ரோட்டில் நடந்து போய் கோவில் வாயில் அருகே இருக்கும் ஒரு கடையில் பஜ்ஜி டீ சப்பிடாம எங்களுக்கு பொழுது அடங்காது. அப்பொழுதெல்லாம் ஆரப்பளையம் பேருந்து நிலையம் கிடையாது, பெரியார் நிலையம்தான், அங்கே திருமங்கலம் பஸ்கள் நிற்க்கும் இடத்தில்தான் நாங்கள் பட்டறை போடுற வழக்கம். அங்குதான் நிறைய பிகர்கள் வருவார்கள். பிறகு கோரிப்பாளையம் சென்று 27 எண் பஸ்ஸில் ஏறி பல்கலை நகர் வரை செல்வதும் எங்கள் வாடிக்கை.

தீபவளி சமயத்தில் 10 நாட்க்களுக்கு மதுரையே ஜெக்கஜோதியா இருக்கும். பேன்ட் சட்டை எடுக்க, ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி, பிரஸ்டீஜ், மேபிளவர், ஸ்ரீகிருஷ்னா, கடைகளில் எல்லா புதுமாதிரியான டிசைன்களை ஒப்பிட்டு ஆராய்ந்து வாங்கி, பேன்ட்டை நைஸ் பிக்ஸ் டைலரிடமும், சட்டையை ஜிடெக்ஸ் டைலரிடமும் கொடுத்து, தைத்த பின் பொட்டுபார்த்து 2 முறை மாறுதலுக்கு உட்படுத்தி. Nice Fix tailor, பேன்ட்டின் பெல்ட் மாட்டும் லூப்பில் அவர்கள் பெயர் பொறித்த ஒரு டாலர் மாட்டிக்கொடுப்பார், அதை வெளியில் தெரியும்படி போட்டுக்கொன்டு திரிவது ஒரு பந்தா. 10 நாட்க்களும், டவுன்ஹால் ரோடே கதி என்று இருப்போம். தீபாவளிக்கு முதல் நாள் மாலையில், கடை வீதிகளை சுற்றியடித்துவிட்டு 9 மணிக்கு டவுன்ஹால் ரோடின் ஒரு வீதியில் இருக்கும் சக்கரவர்த்தி ஓட்டலுக்கு வருவோம், சமயத்தில் உட்க்கார மேஜை கிடைக்கும் இல்லையென்றால், மாடியில் திறந்தவெளியில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் மேகை அல்லது தரையில் இடம் கிடைக்கும் நன்பர்கள் அனைவரும் வட்டமாக உட்க்கர்ந்து விடிய விடிய பீர் குடித்து, முழுக்கோழி, போன்லெஸ் சிக்கன், தந்தூரி புரோட்டா சாப்பிட்டு விடிகாலையில் 6 மணிக்கு ஊர்வந்து சேருவோம். மதுரை சக்கரவர்த்தி ஓட்டலை மறக்கவே முடியாது, அந்த ஓட்டலில் மட்டுமே அப்பொழுதெல்லாம் முழுக்கோழி கிடைக்கும், அந்த ஓட்டலில் கிரிக்கெட் வீரர் சனத்-ஜெயசூரியா போல அச்சு அசலாக ஒருத்தர் பணியாளராக இருந்தார். இப்பொழுது அந்த ஓட்டல் இருக்கிறதன்னு தெரியலை.

மதுரைக்கு தூங்காத நகரம் என்று பெயர் உன்டு, இரவில் எப்பொழுதும், வீதியோர கடைகள் மற்றும் தள்ளுவன்டி கடைகளில், சுடச்சுட இட்டிலி, சாம்பார் சட்டினி கிடைக்கும். சூடான இட்டிலி அந்த தட்டில் உள்ள வாழை இலையில் பட்டதுமே இட்டிலி, சாம்பார், எல்லாம் சேர்ந்து ஒரு வாசனை வரும் பாருங்கள் அப்பா. அது மாதிரி அசைவ உணவகத்துக்கும் மதுரை ரெம்ப புகழ் வாய்ந்தது, சிம்மக்கல் கோனார் கடையில் கறித்தோசை என்று ஒன்று கொடுப்பார்கள் பாருங்கள், வாழ்கையில் அப்படிபட்ட சுவையான உணவினை இது வரை சாப்பிட்டது இல்லை, கொத்துக்கறியை (ஆட்டுக்கறி கைமா) அவர்களுக்கே உரித்தான பாணியில் மசாலாக்களை கலந்த்து தோசை மீது கட்டியாக பரப்பி, நல்லா ரோஸ்ட் செய்து, அது கூட கறிக்குழம்ப்பும் சட்னியும் தருவார்கள், ஆஹா ஆஹா இப்ப நினைத்தாலும் வாயில் நீர் ஊருகிறது. அது போல அம்சவல்லி பவன், அருளானந்தம் மெஸ், மாரியப்பா எல்லாம் எங்கள் நாக்கை அவர்களுக்கு அடிமைப்படுத்தியவர்கள்.

சித்திரைப்பொருட்க்கட்சி எங்களுக்கு மோட்சம் தரும் இடமாகும், சித்திரை மாதத்தில் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு தினமும் வருவது எங்கள் வாடிக்கை. ஜாரிகள் பின்னாலேயே நாய் மாதிரி நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு ஒவ்வொரு காட்சியகத்திலும் ஏறி இறங்கி யானைப்பசிக்கு இரண்டு சமோசா டீ மட்டும் சாப்பிட்டு விட்டு சுத்து சுத்துன்னு சுத்தி,. தெரிந்த ஜாரிகள் வந்த்துவிட்டாலோ ரெம்ப கொண்டாட்டம்தான், இரண்டுபக்கமும் ஒரே கலகலப்பன விரட்டல்கள் ஓடல்கள் நடக்கும். சமயத்தில் தெரிந்த ஜாரி தன் தாய் தந்தையுடன் வந்த்துவிடால் போச்சு, பயங்கர ஜாலியாக இருக்கும், அவர்கள் பெற்றோருக்கு தெரியாமலே பின்தொடர்தல், அந்த பெண்ணூம் என்னடா இப்படிப்பன்னுறானே அம்மா/அப்பா பாத்துருவாங்களோன்னு மருகுவதும், போடா போடான்னு சைகை செய்வதும், தனியாக பாப்கார்ன் வாங்க வரும்போது தைரியமாக பார்த்து சிரிப்பதும், அதை நினைத்து அன்று இரவு முழுதும் தூங்காமல் இருப்பதும். பசுமை நிறைந்த நினைவுகளே.

ஆனால் நன்பர்களே அப்பொழுதெல்லாம் எனக்கு நம் மதுரைப்பற்றி தெரியலை, எப்பேர்ப்பட்ட சொர்கத்தில் வாழ்ந்த அனுபவம் பெற்றிருக்கின்றோம் என்று. இப்பொழுது பணத்துக்காக, நாடு விட்டு நாடாக அலைந்த்து இரவு பகல் பாராமல் வேலை செய்து, இயந்திரத்தைவிட கேவலாமான ஜடப்பொருக்கு இனையாகி இப்படி அலுத்துக்கொள்ளக்கூட நேரமில்லாமல், இடத்தை பிடுங்க கத்திருக்கும் மற்றவரின் போட்டியை சமாளிக்க மேலும் மேலும் உழைத்து நொந்து நூலாகி, வாரக்கடைசியில் அப்பாடா என்று இருக்கும் நேரத்தில்தான் எப்பேர்ப்பட்ட சொர்க்கத்துக்கு இனையான வாழ்வை இழந்து வந்திருக்கின்றோம் என்று தெரிகிறது. மதுரையில் வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் ரோடு, கடை, மரம் செடி மனிதர்கள் என்று ஒன்றுவிடாமல் புகைப்படம் எடுக்கும்போது என்னடா இப்படி கிறுக்கு மாதிரி இதைப்போயி போட்டோ எடுக்கிறார்களே என்று இருக்கும். இப்பத்தான் அதன் அருமை தெரிகிறது, கடந்த்தமுறை மதுரைக்கு வந்த்தபொழுது காதலுடன், மதுரையையே எனது கேமராவில் லவட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.

சொல்லுங்க பாஸு
பங்கு
என்னடா உன்னோட தொயரமா போச்சு
சரியான நொஞ்ச பார்ட்டியா இருக்கான்
அப்புடி போடு அறுவாள
சரியான இம்ச கிராக்கியா இருக்கன், நொந்து போயிட்டேண்டா
பட்டரைய போட்டுருவோமா
அலப்பரைய குடுக்குற
என்ன பாஸு ஜாரி ஆஷாயிருச்சா
அப்புடியே சைன போட்டான்டா
சைன போடு
என்ண்ணே
வாங்கண்ணே
இங்காரு இப்புடியே பேசிட்டுருந்த கொன்டே போடுவேன்

கவியரசரின் வரிகள்தான் நினைவுக்கு வருது.

வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே வாழ்ந்து வந்தோமே

Time Travel பற்றிய எனது அலசல். எனது மகள் சோபிகா மற்றும் எனது மகன் ராகுல் இருவரும் உதவி ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி.


Tuesday, June 19, 2012

கம்ப்யூட்டர் குறித்த உயர் நுட்பப் பயிற்சி வகுப்பு (பாகம் 9)

(இதைப்படித்து விட்டு இங்கு வரவும் (எனது தயாரிப்புகள் குறித்த விளக்க உரைகள்)

நான் நடத்திவந்த கம்ப்யூட்டர் குறித்த உயர் நுட்பப் பயிற்சி வகுப்பு பற்றிய விளம்பரம் (தினமலர் பத்திரிக்கையில் ஜனவரி 1, 1996 ல் வந்தது.) (VIjayan Vijay Computers, Usilampatti, Vijay Anti Virus)

பெங்களூர், சென்னை, மதுரை, தஞ்சாவூர், நாகர் கோவில், திருநெல்வேலி ஊர்களில் இருந்து மாணவர்கள் வந்து உசிலம்பட்டி கிராமத்தில் தங்கிப் படித்தனர்.




எனது தயாரிப்புகள் குறித்த விளக்க உரைகள் (பாகம் 8)

எனது தயாரிப்புகள் குறித்த விளக்க உரைகள்.(VIjayan Vijay Computers, Usilampatti, Vijay Anti Virus)

(இதைப்படித்து விட்டு இங்கு வரவும் (பத்திரிக்கை உலகுக்கு அறிமுகம்)



பத்திரிக்கை உலகுக்கு அறிமுகம் (பாகம் 7)


(இதைப்படித்து விட்டு இங்கு வரவும் ( எனது VAV மற்றும் VVN வைரஸ் நீக்கிகள் )<


1992 லிருந்து 1994 வரைக்கும் உசிலம்பட்டியில் ஓரளவுக்கு கம்ப்யூட்டர் பிரபலமாகி பள்ளிகள் மற்றும் வணிகத்தலங்களில் உபயோகிக்க ஆரம்பித்ததில் முழுப்பங்கும் என்னுடையதுதான். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிஸ்க்கெட் உற்பத்தி கம்பெனிகளுக்கு சென்று கணனி உபயோகத்தை சொல்லி சொல்லி வாங்க வைத்து விட்டேன். V.K.S பிஸ்க்கெட், பெரீஸ் பிஸ்க்கெட், கண் மார்க் ஊறுகாய், ஆர்.சந்திரபோஸ் உரக்கடை, S.D.A ஆங்கிலப்பள்ளி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, T.E.L.C பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முழு அளவில் கம்ப்யூட்டரை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டரை முழுஅளவில் உபயோகித்து உசிலம்பட்டி மட்டுமே, இது வெளியில் தெரியாத ஒரு சாதனை ஆகும்.

அந்த கால கட்டத்தில் தமிழ் கம்ப்யூட்டர் என்றொரு பத்திரிக்கை பிரபலமாக இருந்தது. அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என்னைப்பற்றியும் எனது கணணி பயிலகததையும் பற்றிய குறிப்பு எழுதி அனுப்பியிருந்தேன், அதைக்கன்டு ஆச்சரியப்பட்ட அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் திரு ஜெயகிருஷ்னன் அவர்கள் என்னை சென்னைக்கு வரும்பொழுது சந்திக்கச்சொன்னார். சந்தித்தேன். அதே பத்திரிக்கையில் தன்னார்வ எழுத்தாளராக இருந்த டாக்டர் சி.சந்திரபோஸ் அவர்கள் என்னைப்பற்றிய கட்டுரை எழுதினார், தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வந்த இந்த கட்டுரை என்னை தமிழ்நாடு அளவில் பிரபலமாக்கியது. என்னை உசிலம்ப்பட்டியிலிருந்து வெளிஉலகத்துக்கு கொன்டுவந்தது திரு ஜெயகிருஷ்னன் சார் மற்றும் டாக்டர் சி.சந்திரபோஸ் சார் இவர்களே. இவர்களால்தான் நான் ஜப்பான் மற்றும் அமெரிக்காவந்து பணியாற்றி எனது திறமைகளை காட்டலாயிற்று.

அதன் தொடர்ச்சியாக தமிழ் கம்ப்யூட்டர் பத்திரிக்கையில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். கம்ப்யூட்ட்ரைல் மிக உயர் நுட்ப்பங்களைப்பற்றி, வைரஸ்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகள் மிகவும் ப்ரபலமானது அதன் வாயிலாக நானும் பிரபலமானேன்.

தமிழ்நாடு முழுதுமிருந்து வாசகர்கள் மானவ மானவிகள் கடிதம் எழுதினார்கள். சந்தேகம், நிவர்த்தி என்று வாசகர்கள் வட்டம் பெருகலாயிற்று. மானவ மானவிகள், வாசகர்களின் பாசம் நிறைந்த கடிதங்களை இன்னும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.

[தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வந்த கட்டுரை]


தொடர்ச்சி இங்கே எனது தயாரிப்புகள் குறித்த விளக்க உரைகள்