Tuesday, June 19, 2012

பத்திரிக்கை உலகுக்கு அறிமுகம் (பாகம் 7)


(இதைப்படித்து விட்டு இங்கு வரவும் ( எனது VAV மற்றும் VVN வைரஸ் நீக்கிகள் )<


1992 லிருந்து 1994 வரைக்கும் உசிலம்பட்டியில் ஓரளவுக்கு கம்ப்யூட்டர் பிரபலமாகி பள்ளிகள் மற்றும் வணிகத்தலங்களில் உபயோகிக்க ஆரம்பித்ததில் முழுப்பங்கும் என்னுடையதுதான். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிஸ்க்கெட் உற்பத்தி கம்பெனிகளுக்கு சென்று கணனி உபயோகத்தை சொல்லி சொல்லி வாங்க வைத்து விட்டேன். V.K.S பிஸ்க்கெட், பெரீஸ் பிஸ்க்கெட், கண் மார்க் ஊறுகாய், ஆர்.சந்திரபோஸ் உரக்கடை, S.D.A ஆங்கிலப்பள்ளி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, T.E.L.C பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முழு அளவில் கம்ப்யூட்டரை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டரை முழுஅளவில் உபயோகித்து உசிலம்பட்டி மட்டுமே, இது வெளியில் தெரியாத ஒரு சாதனை ஆகும்.

அந்த கால கட்டத்தில் தமிழ் கம்ப்யூட்டர் என்றொரு பத்திரிக்கை பிரபலமாக இருந்தது. அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என்னைப்பற்றியும் எனது கணணி பயிலகததையும் பற்றிய குறிப்பு எழுதி அனுப்பியிருந்தேன், அதைக்கன்டு ஆச்சரியப்பட்ட அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் திரு ஜெயகிருஷ்னன் அவர்கள் என்னை சென்னைக்கு வரும்பொழுது சந்திக்கச்சொன்னார். சந்தித்தேன். அதே பத்திரிக்கையில் தன்னார்வ எழுத்தாளராக இருந்த டாக்டர் சி.சந்திரபோஸ் அவர்கள் என்னைப்பற்றிய கட்டுரை எழுதினார், தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வந்த இந்த கட்டுரை என்னை தமிழ்நாடு அளவில் பிரபலமாக்கியது. என்னை உசிலம்ப்பட்டியிலிருந்து வெளிஉலகத்துக்கு கொன்டுவந்தது திரு ஜெயகிருஷ்னன் சார் மற்றும் டாக்டர் சி.சந்திரபோஸ் சார் இவர்களே. இவர்களால்தான் நான் ஜப்பான் மற்றும் அமெரிக்காவந்து பணியாற்றி எனது திறமைகளை காட்டலாயிற்று.

அதன் தொடர்ச்சியாக தமிழ் கம்ப்யூட்டர் பத்திரிக்கையில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். கம்ப்யூட்ட்ரைல் மிக உயர் நுட்ப்பங்களைப்பற்றி, வைரஸ்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகள் மிகவும் ப்ரபலமானது அதன் வாயிலாக நானும் பிரபலமானேன்.

தமிழ்நாடு முழுதுமிருந்து வாசகர்கள் மானவ மானவிகள் கடிதம் எழுதினார்கள். சந்தேகம், நிவர்த்தி என்று வாசகர்கள் வட்டம் பெருகலாயிற்று. மானவ மானவிகள், வாசகர்களின் பாசம் நிறைந்த கடிதங்களை இன்னும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.

[தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வந்த கட்டுரை]


தொடர்ச்சி இங்கே எனது தயாரிப்புகள் குறித்த விளக்க உரைகள்

3 comments:

டாக்டர் பெ.சந்திர போஸ் said...

அந்தக் காலத்து ஐந்தரை அங்குல பிளாப்பி டிஸ்க்கில், குண்டூசி வைத்து துளை ஒன்றை அமைத்து, பின் அது எந்த ட்ராக்கில் உள்ளதோ அதற்கான புரோகிராம் வரிகளை எழுதி, அதனையே லாக் ஆக அமைத்து ”விஜய் வைரஸ் நீக்கி” என்று ரூ.75 விலையிட்டு, பின் அதனையும் இலவசமாகக் கொடுத்த விஜயன் எனக்கு ஒரு அதிசய கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநராகத் தெரிந்தார். அதனால் தான் அவர் குறித்து கே7 கம்ப்யூட்டிங் நிறுவனர் கேட்ட போது, விஜயன் குறித்த தகவல்களைத் தந்து அவரை சென்னைக்குப் பின் நாளில் இழுத்து வந்தோம். அதன் பின்னர், ஜப்பான், அமெரிக்கா சென்றதெல்லாம் அவருடைய கடின உழைப்பு, அன்பான அணுகுமுறை ஆகியவையே காரணம். அவரின் முழு முயற்சிக்குத் துணையாக பின்னர் இருந்தது அவரின் துணைவியார் தான். காரைக்குடியில் அவரின் திருமணம் நடைபெற்றது.

இன்றும் பழசை மறக்காமல் அதில் நிறைவு காணும் விஜயன் நல்ல பாசமான தம்பி. அவர் குடும்பத்தினருடன் வாழ்க பல்லாண்டு.

அவர் காட்டியிருக்கும் கட்டுரை அமுதன் என்ற பெயரில் நான் எழுதியது தான். அப்போது தமிழ் கம்ப்யூட்டரில், சரஸ், டாக்டர் சந்திர போஸ், அமுதன் என ஏதோ ஏதோ பெயர்களில் சராசரியாக இதழ் ஒன்றில் 20 லிருந்து 30 பக்கங்கள் எழுதுவது வழக்கம்.

அன்புடன் பெ.சந்திர போஸ், சென்னை.

masterchiefmams said...

Sorry sir.. I don't have Tamil font on my phone. Welcome to blogspot! You have always been and will always continue to be a great inspiration to me. The greatest thing I have learnt from you is 'self teaching'.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நான் கொஞ்சம் கணினி அறிவு கிடைக்கப் பெற்றேன் என்றால் அது தமிழ் கம்ப்யூட்டர் மூலமாகத்தான்.2005 இல் இருந்து 2014 வரை த.க. வாங்கிக் கொண்டிருந்தேன்.
தங்கள் கணினி நுட்பம் அறிந்தவர் என்பதில் மகிழ்ச்சி தொடர்ந்து கணினி தொடர்பான கட்டுரைகளை எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். கற்றுக் கொள்ள விரும்பும் என்னைப்போன்ற பலருக்கும் பயனளிக்கும்