Sunday, June 25, 2023


 திரைப்படங்கள் என்பன ஒரு கருத்தியலை போதிக்கும் ஊடகம்தான் , வரலாற்றை திரித்து கூறும் மற்றும்  தவறாக வழிநடத்தும் உள்நோக்கத்தோடோ  இருந்தால் கண்டிப்பாக அது எதிர்க்கப்பட வேண்டியதுதான்.

இவைநீங்களாக படைப்பாளிகளின் படைப்பாற்றல்கள் ஒன்றுகூடி சங்கமித்து அருவியாக கொட்டும்பொழுது அதை கிடைக்கும் அனுபவம் மனிதனுக்கு வேறு எதிலும் கிடைக்காது.


தேவர் மகன் படத்தில் அப்படி திரித்துக்கூறப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய காட்சிகள் இல்லை. சாதிப்பெருமை பேசும் திரைப்படம் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. ஆமாம், குறிப்பிட்ட சாதி பற்றிய படம்தான் அது. சமூகத்தில் ஒரு குழுக்களைப்பற்றி எடுக்கப்பட்ட எத்தனை திரைப்படங்களை கண்டு கழித்து ரசித்திருந்திருக்கின்றோம்?

"the last samurai " திரைப்படத்தில் ஜப்பான் நாட்டில் இருந்த சாமுராய் கள் வீர தீரங்கள் குறித்து சிலிரித்துப்போய் பார்த்திருந்தோம்?

"inglorias basterds" திரைப்படத்தில் யூத குழு வீரர்களின் திறமைகளை பார்த்து பாராட்டியிருக்கின்றோம்.

இப்படி பல படங்கள் உள்ளன.

இன்றும் அமெரிக்க அருங்கட்சியகங்களில் குழுக்களாக வாழ்ந்த மக்களின் வாழ்க்க்கைமுறை , உள்  சண்டைகள் மற்றும் உள்நாட்டு சண்டைகள் குறித்து அறிந்து வியக்கின்றோம்?,

அதை சுவைபட ஒரு இட்டுக்கட்டி கதைமூலம் சொல்லுவது என்பது சாதாரணமானது அல்ல. அதை திறம்பட மற்றும் செவ்வனே செய்து மக்களின் மனதில் சேர்ப்பதில் மாபெரும் வெற்றியாளனாகத்தான் கமல் ஹாசன் அவர்கள் இருக்கின்றார்.

இன்னொருபடமான விருமாண்டி .

சண்டியர் என்ற பெயரை கிருஷ்ணசாமி விரும்பாததால் பெயர் மாற்றப்பட்ட படம். தென் மாவட்டங்களில் ஒரு  மக்கள் பாத்திரம் கொண்டுள்ள பெயர். மற்ற மாவட்டங்களில், மைனர், தல , என்று பல பெயர்களில் உள்ளது.

இந்த சண்டியர் கதாபாத்திரமானது மற்ற மாவட்டங்களில் எப்படியோ தென் மாவட்ட கிராமங்களில் ரெம்ப வேறு மாதிரியானது.


எதிலும் அடங்காமல் சண்டித்தனம் பண்ணுவதை  யாருமே கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதுதான் சிறப்பு.


எங்க ஊர் உசிலம்பட்டி ஆனதுதான்,  சுற்றியுள்ள 48 கிராமங்களுக்கும் டவுன். அங்கிருந்து வரக்கடைசியில் பொழுது களித்து கழிக்க உசிலம்பட்டி  வரும் கிராம சண்டியர்கள் தங்களது அடிப்பொடிகள்  நண்பர்களுடன் வருவார். தங்கள் ஊரு நினைப்பிலேயே சண்டித்தனம் செய்து, ஓட்டல்கள், திரையரங்கில், கடைகளில் , மது கக்கடைகளில் ஓரண்டியிழுத்து அடிவாங்குவார்கள், இறுதியில் , நான் யார் தெரியுமா என்று சொல்லி தாட்டியம் காண்பிக்கையில், ஓ , பள்ளப்பட்டி சண்டியனா , சரிப்பா விடுப்பா , சரி போங்கப்பா எல்லோரும் என்று சொல்லி களைந்து போவர். இது ஒரு சாம்பிள்தான்.இதோபோக, நகரம், கிராமம், குக்கிராமம் போற இடங்களுக்கு தகுந்தவாறு சண்டியத்தனம் இருக்கும்.


விருமாண்டி, கிழக்கு சீமையிலே பாண்டியன், எங்க சின்னராசா படத்தில், பாக்யராஜுக்கு மாமா பையன், போன்ற மற்றும் பலதரப்பட்டிய சண்டியர்கள் மதுரை & தேனி மாவட்டங்களில்  உள்ளனர், 


இதில் என்ன திரைப்பட பெயர் பிரச்சினை என்கிறீர்களா?


இந்த சண்டியர்கள் எல்லாம் குறிப்பிட்ட அந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் இருக்கமுடியும். மாரிசெல்வராஜ் , கிருஷ்ணசாமி (இவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும்தான்) எல்லோருக்கும் இந்தப்பெயர் ஆனது அந்த சாதியின் வீரத்தை தூக்கி மற்றவர்களின் துன்ப குமுறல்களை இயலாமையாக காட்டுகின்றதே என்ற கோபம்தான்.


ஆனாலும், கமல் ஹாசன் அவர்களின் இத்திரைப்படங்கள் எல்லாம் பல்சுவைகொண்ட தரமான ஆவணங்கள்தான். மாறாக எந்தவிதமான கெட்ட விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதுதான் எனது எண்ணம்.


மாரி செல்வராஜ் அவர்களே அதற்கு சரியான உதாரணம். கமல் ஹாசன் அவர்களின் படைப்பு எவ்வளவு யதார்த்தமாக இருந்திருந்தால், மாரிசெல்வராஜ் அவர்கள் அதை உள்வாங்கி தன்னை மேம்படுத்தி, பெரிய தேவர் இருக்கும் இடத்தில் எனது தந்தையை கொண்டுவரவேண்டுமென்று வடிவேலுவை அங்கு நிறு த்தியிருப்பார்.

கமல்ஹாசன் அவர்களுக்கு சபாஷ். அவருக்குத்தான் உண்மையில் வெற்றி.