Monday, September 19, 2016

ஒரு கயவனால் ஜப்பானில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் (பாகம் 12)


முதலாம் பாகம் இதிலிருந்து ஆரம்பியுங்கள் [என்னைப்ப‌ற்றி (பாகம் 1)


முந்தைய பகுதி இதைப்படித்துவிட்டு இங்கு வரவும்.  [ ஜப்பான் நாட்டில் வேலை பார்த்த அனுபவம் (பாகம் 11) ]

ஒரு கயவனால் ஜப்பானில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் (பாகம் 12)


நான் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு முன்பே அவன் மற்றும் ராஜூ ஆகிய இருவரும் இங்கு வேலை பார்த்து வந்தனர். அவன் என்னுடன் அண்ணா அண்ணா என்று விளித்து மிகவும் நட்புடன்தான் பழகினான்.

ஒருமுறை நானும் ராஜு வும் அலுவலகம் முடித்து வரும் பொழுது ராஜுவின் மனைவிக்கு அந்நிறுவனத்தில் வேலை வாங்குவது குறித்து பேச்சு வந்தது. நான் சொன்னேன், பிராமணப் பெண்கள் போல துனிச்சலாக யாரும் செயல்பட முடியாது. அவர்கள்தான் கண்கொத்திப் பாம்புபோல காத்திருந்து கிடைக்கும் சந்தர்ப்பத்தை கச்சிதமாக கைக்கொள்ளுவார்கள். அதுபோல உயர்நிலைப்பதவிகளுக்கு பிராமணர்களுடன் யாரும் போட்டியிட முடியாது. அதனை முறியடிக்கும் அனைத்து தந்திரகளும் அவர்கள் அறிவர். என்ற கருத்தில் உரையாடிக்கொன்டிருந்தோம். அதை அனைத்தையும் ராஜு அவனிடம் சொல்லி விட்டார். அதுகுறித்து ராஜு அவனிடம் என்ன சொன்னாரோ இல்லை அவன்தான் தப்பாக புரிந்துகொண்டானோ என்ன இழவோ, அதிலிருந்து என்னை விட்டு விலகத்தொடங்கினான்.

என்னடா நாடு விட்டு நாடுவந்து வேலை பார்க்கின்றோம் இப்படி விலகிப்போய் இருப்பது நல்ல இல்லையே என்று கவலையாகத்தான் இருந்தது ஆனாலும் போகப்போக அதை அலட்சியப்படுத்திவிட்டேன். ஆனால் விலகிப்போனவன் மற்றவர்களிடம் என்னைப்பற்றி அவதூறுகள் பரப்பி, குறுக்கு வழியில் என்னை வேலைவிட்டு நீக்க திட்டமிட்டான். அதையும் செய்தான்.

அவன் ஜப்பானிய மொழி நன்றாக பேசுவான். அதனால் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளிடம் நல்ல தொடர்பில் இருந்தான்.. முதல் கட்டமாக என்னைப்பற்றி தவறான அபிப்பிராயங்களை மற்றவர்களிடம் விதைத்தான். நான் மேலாளராக இருந்ததால் மற்றவர்கள் வேலை பற்றிய எனது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை வாரம் ஒருமுறை மேலான் இயக்குநருக்கு நான் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை எப்படியோ பெற்று மற்றவர்களிடம் காட்டி அவர்களிடம் என்மீது வெறுப்பை உண்டாக்கி என்னை தனிமைப்படுத்தினான். அலுவலகத்தில் ஒருவரும் பேசாதிருந்தால் எப்படி இருக்கும், இருப்பது ஒரு 10 பேர்தான், அதிலும் தமிழ் 4 பேர்தான். எனக்கோ மனைவி பிள்ளைகளை ஊரில் விட்டுவிட்டு தனியே இருக்கும் சூழ்நிலை. வெப்-காமெரா மூலம்தான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தோம். இதில் இவன் கைங்கரியத்தினால் தனிமைப்படுத்தப்பட்டேன். பொருளீட்டும் பொருட்டு வந்த காரனத்தினால் வேலையை விட்டுவிட்டு திரும்ப ஊருக்கு வர மனமில்லை.

நிறுவனமும் சரிவர இயங்குவதுபோல தெரியவில்லை. தேவைகள் குறைந்தாலே நமது முக்கியத்துவமும் குறைந்துவிடுமல்லவா. அதையும் சமாளித்து மற்றும் அவன் எப்படி தொந்தரவு கொடுத்தாலும் அதையும் சமாளித்து இருந்துகொண்டிருந்தேன். என்னடா இப்படி சமாளிக்கின்றானே என்று வேறுவிதமான திட்டங்களை நினைக்கத்துவங்கினான். எங்கள் நிறுவனத்தில் ஒரு சட்டம் உள்ளது, அது என்னவென்றால், உடன் வேலைபார்ப்பவரை மனம் நோகத் திட்டினாலோ அல்லது கைகலப்பில் ஈடுபட்டாலோ வேலையிலிருந்து நீக்கப்படுவர்.

அவன் ராஜுவை பொய் சாட்சிக்கு ஏற்பாடு செய்தான், பிறகு மதிய உணவு சாப்பிடும்போது வம்பிழுத்து கைகலக்கச்செய்து இவைகள் மூலம் என்னை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பத்திட்டமிட்டான். அவன் திட்டமிட்டது போலவே கைகலப்பும் நடந்தது, விசாரனை வந்தது, அவன்தான் முதலில் கைகலப்பில் ஈடுபட்டான் என்று சொன்னேன், நான் அவனது மனைவியைப்பற்றி தவறாகச் சொன்னேன் என்று சொன்னான், ரஜுவும் ஆமாம் என்று சொல்லி அந்த்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்தான். விசாரணை ஓடிக்கொண்டுதான் இருந்தது, இதன் இடையில் நான் ஜப்பானிலேயே வேறு வேலை தேட ஆரம்பித்தேன். ஜப்பானில் வேறு நிறுவணத்துக்கு நினைத்த மாத்திரத்தில் தாவ முடியாது, அதற்கு விசாவும் புதிதாக பெறவேண்டும்.எப்படியோ டோக்கியோ வில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது, ஆனால் விசா மற்ற நீண்ட நாட்கள் ஆகும் போல இருந்தது. விசா மாற்றத்துக்கும் விண்ணப்பித்து இருந்தேன். இவைகள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் செய்துகொண்டிருந்தேன். Engineer விசா இருந்தால் நினைத்த நிறுவனத்தில் சேரலாம். ஆனா எனது விசா "Designated Service" வகையைச் சேர்ந்தது.

இந்த நிறுவனத்தில் இப்பவோ அல்லது அப்பவோ என்று நிலைமை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது.

ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவன் போல இந்த நிறுவனத்தில் இருந்தேன். நிறுவனமும் சரிவர இயங்கவில்லை. நானாக ராஜினாமா செய்யவேண்டும் என்று நினைத்து அதை அனைத்து வகையிலும் வெளிப்படுத்தினர். எனக்கோ இன்னொரு நிறுவனத்தில் வேலை கிடைத்தும் விசா இல்லாத காரணத்தால் உடனே போய் சேர முடியவில்லை. புதிய விசாவும் எப்ப வரும்ன்னு தெரியலை.

மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெப்-கேம் வழியாக பேசும்பொழுதெல்லாம், மிகக்கவலையாக இருக்கும். இந்த நிறுவனத்தில் எனது நிலைமை மிக மோசமாகப்போய்விட்டது. நான் புதிய நிறுவனத்தாரிடம் சொன்னேன், அவர்களும் சரி வந்துவிடுங்கள், ஓரிரு வாரங்களில் விசா வரவில்லையென்றால் இந்தியா சென்று விசா கிடைத்ததும் திரும்ப வரலாம் என்றனர். நானும் மூடை முடிச்சுகளை கட்டிக்கொன்டு டோக்கியோ கிளம்பி விட்டேன். மறுநாள் நிறுவனத்தைவிட்டு ஒரு வாரத்தில் விலகுகின்றேன் இந்தியாவுக்குப்போகின்றேன் என்று சொல்லி ராஜினாமா செய்வதாக சொன்னேன். என்னைத்தவிற அனைவரும் சந்தோசப்பட்டனர்.

அந்த ஒருவாரத்திலும், அவன் என்னைப்பற்றி மேலிடத்தில் சொல்லி நான் பர்த்து வந்த மென்பொருள் புரஜக்க்ட்டின் அனைத்து மடுல் களையும் ஆவணபடுத்தித் தரும்படி நிர்ப்பந்தப் படுத்தப்பட்டேன். அதையும் செய்து முடித்தேன்.
அந்த நிறுவனத்தில், எப்பொழுதும் ஒருமாதச்சம்பளத்தை பிடித்துத்தான் வைத்திருப்பர். வேலை விட்டு போகும்பொழுது எதாவது பிரச்சினை என்றால் அதை ஈடு செய்வதர்காக அப்படி செய்வர். அதனால் அவர்கள் மனம் கோணாமல் நடக்கனும் என்று கவனமாக இருந்தேன். அதை அந்தக் கயவன் சாதகமாக எடுத்துக்கொண்டு மிகவும் தொல்லை கொடுத்தான்.

ஒருவாரம் முடிந்தது, மாலையில் டோக்கியோ கிளம்பத்திட்டமிட்டு இருந்தேன், அதற்கு முன்னர் விசா அலுவலகத்துக்குச்சென்று நிலவரம் என்ன என்று கேட்டேன், அவர்களும் சோதித்துப்பார்த்துவிட்டு விசாவுக்கான ஒப்புதல் கிடைத்துவிட்டது, நாளை அனுப்புவோம் உங்களுக்கு வந்து சேர 3 நாட்க்கள் ஆகும். இல்லையென்றால் நாளை காலையில், அடையாள அட்டை கான்பித்து கையோடு வாங்கிக்கொள்ளலாம் என்றனர். எனக்கு அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது. கடந்த 6 மாத காலங்களாக மனதுக்குள் இருந்து என்னைக் கரைத்த உளைச்சல் எல்லாம் ஒருநொடியில் மறைந்தே போய்விட்டன. உடனே சென்னைக்கு என் மனைவிக்கு போன் செய்து மகிழ்ச்சியான செய்தியை சொன்னேன். 6 மாத காலங்களாக கவலையுடன் சுற்றித்திரிந்த கோபே நகரில் அந்த இரவு முழுதும் ஜாபானிய நன்பர்களுடன் மகிழ்சியாக சுற்றித் திரிந்தேன். மறுநாள் காலையில்விசாவை வாங்கிக்கொன்டு டோக்கியோ சென்றேன். புதிய நிறுவனத்தின் கிளையன்ட் Canon நிறுவனமாகும், டோக்கியோவுக்கு அருகில் Musashi-Kosugi என்ற இடத்தில் பிரமாண்டமான கட்டிடத்தில் வேலை. எனக்கு பிடித்தமாதிரியான வேலை மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

பிடித்து வைக்கப்பட்டு இருந்த 1 மாதச்சம்பளத்தையும் கொடுப்பதற்கு தடைகளும் செய்தான். நான் உண்டாக்கிய ஆவணங்கள் சரியாக இல்லை அதால் மீண்டும் செய்து கொடுத்தால் சம்பளம் கொடுக்கப்படும் என்று அந்நிறுவணத்தில் மொழி பெயர்ப்பாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். எனக்கென்றால் கோபம் ஜிவ்வென்று தலைக்கு ஏறியது. திடீரென யோசனை வந்தது, ஒருநிறுவனத்தைவிட்டு விலகிய பிறகு எக்காரணததிக்கொன்டும் மீண்டும் வேலை செய்யச் சொல்ல மாட்டார்களே, ஒருவேளை நிறுவன உரிமையாளருக்குத் தெரியாமல் மொழிபெயர்ப்பளரை கையில் போட்டுக்கொண்டு அந்தக்கயவன் விளையாடுகின்றானோ?.

நான், அப்படியெல்லாம் வேலை பார்க்கமுடியாது, சம்பளம் கொடுக்காவிட்டல் போங்கள் எனக்கு எப்படி வாங்குவது என்று தெரியும் என்று பதில் அனுப்பிவிட்டேன். பிடித்து வைத்திருந்த சம்பளத்தை ஒரு மாத முடிவில் எனக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

கோபே நகரில் அந்தக்கயவன் எனக்கு இழைத்த மன உளைச்சல்கள் எல்லாம் என் மனதில் பெரும் பெரும் பாறாங்கற்களாக கனத்துக்கொன்டிருந்தன. டோக்கியோ வந்த பிறகு அவைகள் எல்லாம் அப்படியே இலவம்பஞ்சு போல லேசாகி காற்றோடு காறாகப் போயின.

 டோக்கியோ நகரில் 3 வருடங்கள் பணியாற்றினேன்.  Canon நிறுவனத்தில்தான் எப்படி தரமான மென்பொருள் படைப்பது என்பதை கற்றுக்கொன்டேன்.Ichigao என்ற இடத்தில் தங்கி இருந்தேன் அங்கிருந்து இரண்டு மெட்ரோ ரயில்களில் பயணித்து வேலைசெய்யும் இடத்துக்குப்போக 1 மணி நேரம் ஆகும்

 Ichigao வில் ஒரு மேன்சனில் தங்கி இருந்தேன், 50 ந்றைகள் கொண்ட அந்த மேன்சனில் பெரும்பாலும் ஜப்பானிய இளைஞர்களும் இளைஞிகளுமே இருந்தனர், நான் மட்டுமே தமிழ், சென்னை மேன்சன் போலத்தான் ஜப்பன் மேன்சனும், ஒருவருக்கொருவர், உதவிக்கொண்டு, இருப்பதைப்ப்கிர்ந்துகொண்டு, ஆடிப்பாடி களித்திருந்தோம், மனைவி குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலைகள் எல்லாம் அந்நன்பர்களால்தான் மறக்கடிக்கப்பட்டன. எனது மனைவியும் இங்கு வந்திருந்து 3 மாத காலங்கள் தங்கியிருந்தார். நானும் ஊருக்கு சென்று வந்திருந்தேன்.

இன்று அமெரிகாவில் குடும்பத்துடன் 9 வருடத்துக்கும் மேலக ஒரு நிறுவணத்தில் வெற்றிகரமாக பணியாறிக்கொன்டிருபதற்கு காரணம் கோபே மற்றும் டோக்கியோவில் பெற்ற அனுபவங்கள் என்றால் மிகையாகாது.

மேன்சன் வாழ்க்கை என்பது எனது வாழ்வின் முக்கியமான பகுதியாகும். உலகத்தினை ஓரளவுக்கு புரிந்திருக்கின்றேன் என்று நம்புவதற்கு மேன்சன் வாழ்க்கைதான் காரனம். எத்துனை விதமான நன்பர்கள் எத்துனை விதமான அனுபவங்கள்.

ஜப்பான்  தவிற சென்னை, அமெரிக்கா நாடுகளில் மேன்சன் வாழ்க்கையில் இருந்திருக்கின்றேன் அனைத்து இடங்களிலும் நன்பர்கள் ஒரேமாதிரிதான். உணவு, இன்பம், துன்பம் அனைத்தையும் பகிர்வது உலகம் உழுதும் ஒரே மாதிரிதான். வார இறுதி நாட்க்களில், தத்தம் குடும்பம் மற்றும் நன்பர்கள் பற்றிய நினைவுகளை வாஞ்சையுடன் பகிர்வது இனிமையானதொரு அனுபவம்.

காதல் படத்தில் வரும் "புறாக்கூண்டு போல இங்க 30 ரூமு" பாடல்க் காட்சியினை கானும்பொழுது இன்னுமும் கண்கள் கலங்குவது தவிற்கமுடியலை.




அடுத்து நான் அமெரிக்காவுக்கு வந்த கதை.

Tuesday, September 06, 2016

அறிவியலா.? ஆன்மீகமா - #சன்டிவி பட்டிமன்றம்

#சன்டிவி யில் "மகிழ்ச்சியான வாழ்கைக்குப் பெரிதும் உதவுவது.. அறிவியலா.? ஆன்மீகமா..??" பட்டிமனறம் பார்த்தேன், #பாரதிபாஸ்கர் அவர்கள் அறிவியலுக்கும் #ராசா அவர்கள் ஆன்மீகத்த்க்கும் ஆதரவாக பேசினர். நடுவர் #சாலமன்பாப்பைய்யா அவர்கள் ஆன்மீகமே என்று தீர்ர்ப்பளித்தார்.

ஆன்மீகமும் அறிவியலும் மனிதனின் இரண்டு கண்கள் என்றாலும். பேசிய ஒருவரிடமும் ஒரு #பகுத்தறிவு பார்வை இல்லாமல் போனது ஏமாற்றமே.
ஆன்மீகம், மனிதனை மனதளவில் தாக்கி மதவாதிகள் மூலம் மக்களின் மனங்களைச் சுரண்டி இன்னமும் மன அடிமை யாக்கி வைத்திருக்கின்றது என்றால்.

அறிவியலானது உலகமயமாக்கள் மூலம் மனித உழைப்பினை சுரண்டி மக்களை உடல் அடிமை ஆக்கி வைத்திருக்கின்றது.

இதையெல்லாம் சற்று பொறுமையாக சிந்தித்துப்பார்த்தாலே உன்மை விளங்கும்.