Tuesday, July 26, 2016

#கபாலி சாதித்தது பெரும் வெற்றிதான், சந்தேகமே இல்லை.

#‎கபாலி‬ திரைப்படம் பலவிதமான தாக்கங்களை அனைத்து தரப்பிலும் உன்டாக்கிஇருக்கின்றது என்றால் அதில் மிகை இல்லை.
விளம்பர யுக்திகள், வியாபார தந்திரங்கள், பிரசித்திப்படுத்தும் உத்திகள், டிக்கெட் விலை, படத்தின் தரம், நல்லா இருக்கிறது இல்லை என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், பட வெளியீட்டுக்குப்பிறகு அதன் போக்கு அப்படியே மாறிவிட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், படத்தை விளம்பரப்படுத்தி அதீத புரொமொசன் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் எல்லாம் அப்படியே யூ டர்ன் அடித்து படத்தை கன்னா பின்னா என்று திட்டி கேவலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டனர். "அப்படித்தான்டா முன்னேறுவோம்" என்று சொல்லுவதைக் கூடதாங்க்கிக்கொள்ள முடியலையே இவர்களால்?
படத்தை கரித்து கொட்டிக்கொன்டு இருந்த கீழ்த்தாட்டு மக்கள் எல்லாம், எல்லாம் என்னடா அதிமேதாவிகள் , மேன்மையானவர்கள் என்று தங்களையே சொல்லிக்கொள்பவர்கள் எல்லோரும் படத்தை எதிர்க்கின்றனரே இதற்காகவே படத்தை பார்க்கனும்ன்னு படத்தை புரமோட் செய்யும் வேலையில் இறங்கி விட்டனர்.
எல்லாம் "அம்பேத்கர் கோட்" மற்றும் "கால் மேல் கால் போட்டு உக்கருவேன்டா" வசனம் தான் காரனம்.
அந்த விதத்தில் கபாலி சாதித்தது பெரும் வெற்றிதான், சந்தேகமே இல்லை.

Sunday, July 10, 2016

இந்த பிரபஞ்சம் எப்படிப்பட்டது அதன் தன்மை என்ன?


கருந்துளை என்பது மிக அதிகமான , கணக்கில் அடங்காத புவி ஈர்ப்பு விசை கொன்ட நட்சத்திரத்தினை குறிக்கும்.

அதிகமான நிறை கொண்ட நட்சத்திரம் வெடித்துச்சிதறும்பொழுது அதன் மையப்பகுதி அதிகமான நெருக்குதலுக்கு உள்ளாகி நிறை எண்ணிலடங்கத அளவு அதிகமாகும்பொழுது அது கருந்துளை ஆகின்றது.

கருந்துளையானது நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஈர்ப்புவிசையினை கொன்டிருக்கும். அதனுள் விழுந்த எந்த பொருளும் வெளியேற முடியாது.  ஒளிகூடஅதில் இருந்து வெளியேற முடியாது. அதனால்தான் அது கருப்பு நிறத்திலேயே இருக்கும். யாரும் பார்க்க முடியாது.

சரி, அதனுள் விழுந்த ஒரு பொருள் என்னவாகும்?

சக்கர நாற்காலி இயற்பியல் கதாநாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் (stephen hawking) என்ன சொல்லுகின்றார் என்றால், "கருந்துளையில் விழுந்த பொருள்  சிதைக்கப்பட்டு அதன் அணுக்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டுவிடும், அதன் வடிவம், மற்றும் அது கொண்டிருந்த அடையாளங்கள் எல்லாம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்"

ஆனால் பெரும்பாலான மற்ற இயற்பியல் வல்லுனர்கள் அத்ற்கு மாற்றான கருத்தினையே கொன்டுள்ளனர்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகதில் பணியாற்றும் இயற்பியல் பேராசிரியர் லியனார்டு சஸ்கின்ட் அவர்கள்நுகுறித்து பல விவாதங்களை ஸ்டீபன் ஹாக்கிங் உடன் மேற்கொன்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏழாம் பொருத்தம்தான். (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும்  நீல்ஸ் போருக்கும் இருந்தது போலத்தான்).
இருவருக்குமிடையேயான விவாதம் இன்றளவிலும் தொடர்கின்றது. இந்த சன்டை குறித்து சஸ்கின்ட் எழுதிய புத்தகம் "The Black Hole War" மிகவும் பிரசித்தி பெற்றது.

லியனார்டு சஸ்கின்ட் என்ன சொல்லுகின்றார் என்றால்,

 "கருந்துளையில் விழுந்த பொருளானது அதன் வடிவத்தை இழந்து அணுக்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டு பல இடங்களில் இருந்தாலும் அவைகளை ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்த்தால் முழு வடிவமும் புலப்படும். அது ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஹாலோகிராம் படம் போலத்தான் (holographic picture) இருக்கும். சொல்லப்போனால் இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒரு ஹாலோகிராம் சித்திரம் போன்றதுதான்."

அவரது இந்த கருத்துக்கு ஒரளவுக்கு ஆதரவு கிடைத்து இருக்கின்றது. ஆனாலும் முழுதாக் நிருபிக்கப்பட்வில்லை.

இது குறித்த விவாதத்தினை இந்த கானொளியில் கன்டேன்.

Raphael Bosso , Herman Verlinde , Gerard 't hooft and Leonard Susskind நால்வரும் தங்களது கருத்துக்களை சொல்லுகின்றார்கள்.

ஸ்டீபன் ஹாக்கிங் குறித்து அவர் ஒரு பிடிவாதக்காரர், மற்ரவர்கள் கருத்துக்களை காதில் கேளாதவர் என்றெல்லாம் குற்றம் சாட்டுகின்றார்கள்.

நான்கு குருடர்கள் யானையை தொட்டுப்பார்த்து எப்படி இருக்கும் என்று சொல்லுவதைபோலத்தான் இவர்கள் இந்த பிரபஞ்சத்தினைப்பற்றி சொல்லுகின்றார்கள்.

உண்மையை யார்தான் அறிவாரோ !!!!