Thursday, June 18, 2015

மனித மனது ஏன் இப்படி எதையாவது தேடி அலைந்து கொன்டே இருக்கின்றது?

தேடும் மனப்பாண்மையே மனிதனை குரங்குகூட்டத்தில் இருந்து பிரித்து இந்த முன்னேற்றத்துக்கு அழைத்து வந்திருக்கின்றது என்றால் மிகை இல்லை.

உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதையோ தேடி அலைந்து தன் இடத்தை பிடித்து ஆக்கிரமித்துக்கொன்டான்.

பூமியை முடித்துவிட்டு விண்ணுலகில் தேடலை ஆரம்பித்து போய்க்கொன்டு இருக்கின்றான்.

அதேபோல அனுவுக்குள் என்ன இருக்குன்னு உடைத்து உடைத்து பார்த்து எமாந்து கொன்டே இருக்கின்றான்.

மனிதனின் தேடும் ஆசைக்கு தீனிபோடும் வியாபாரத்தில் கூகிள் நிறுவனம் கோலோச்சி ஏகபோக ஆளுமை செய்வதில் வியப்பேதும் இல்லை.

எத்துனை விதமான தேடல்கள், கேள்விகள், ஆர்வங்கள், ஆராய்ச்சிகள். ஒருவரின் மனம் இப்படிப்பட்டதா என்று அவர் தேடும் தேடல்களின் மூலமே அறிந்து கொள்ளலாம்.

மனித மனம் தான் விசித்திரம் நிறைந்ததே, அது தேடும் தேடலும் விசித்திரமாகத்தானே இருக்கும்.

ஆமாம் அது காலத்தை கடந்து போய் தேடமுடியுமா என்று ஆர்வத்துடன் பார்க்கின்றது.

கடந்த காலத்துக்கு போக முடியுமா? எதிர்காலத்துக்கு உடனே போக முடியுமா? போய் திரும்ப புறப்பட்ட காலத்துக்கே வர முடியுமா?

காலப்பயனம் முடியுமா முடியாதா எனும் கேள்வியை விட ஏன் மனித மனது காலம் கடந்து போக ஆசைப்படுகின்றது எனும் கேள்வி என்னுள் பலமாக எழுகின்றது.

அதுகுறித்த கட்டுரைகள், கதைகள், மற்றும் திரைப்படங்கள் எந்த காலத்திலுமே மக்களால் அத்கம் விரும்பப்படுபவைகளாகவே இருக்கின்றன.

பள்ளிப்பருவத்தில் பார்த்த "Back To The Future" திரைப்படமானது 3 பாகங்களாக வந்து சக்கை போடு போட்டது.

இன்றைக்கும் காலப்பயணத்தைக் கருவாக கொன்ட திரைப்படங்கள் வருடத்துக்கு இரண்டு வந்துகொனேதான் இருக்கின்றன. மக்களும் சளைக்காமல் பார்த்துக்கொன்டேதான் இருக்கின்றனர். சாதாரனமாக இவ்வகை திரைப்படங்கள் சற்று குழப்பமாக புரிந்து கொள்ள சற்று கடினமாக இருக்கும்.

Terminator திரைப்படமானது எளிமையாக யாருமே புரிந்துகொள்ளும்படி இருந்தது.

தன்னை அழிக்கத்துடிக்கும் மனிதனை இல்லாமல் ஆக்குவத்ற்கு அவன் பிறப்பதற்கு முன்பே அவன் அம்மாவை கொலை செய்ய ஒரு எந்திர மனிதனை கடந்த காலத்துக்கு அனுப்புகிறது ஒரு கம்ப்யூட்டர்.
அந்த மனிதனோ தன்னை பெற்றவளை காப்பாற்ற இன்னொரு எந்திர மனிதனை அதே கடந்த காலத்துக்கு அனுப்புகின்றான்.

ஆர்னால்ட் ஸ்வார்செனகர் அருமையாக நடித்து மக்களின் உள்ளங்களை கொள்ளை கொன்டார்.

மீன்டும் வருகின்றார் தயாராக இருங்கள்.

ஜுலை 1 ம் தேதி உலகமெங்கும். Terminator Genisys.

காலப் பயனம் சாத்தியமா என்றால், சாத்தியமே என்று அறிவியல் சொல்லுவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது.

இதுகுறித்த சிறு ஆவனப் படம் உருவாக்கிகொன்டு இருக்கின்றேன். ஓரிரு நாட்க்களில் வெளியிடுகின்றேன்.

No comments: