Friday, January 15, 2016

உங்களில் சைக்கோத் தனம் ஒளிந்து இருக்கின்றதா?

தனது தந்தையின் இறந்த துக்கத்துக்கு வீட்டிற்கு வந்திருந்த ஒரு இளைஞன் பார்த்த மாத்திரத்திலேயே மருத்துவக்கல்லூரி மாணவியான அவளை மிகவும் கவர்ந்துவிட்டான். அவனை சந்திக்கவேன்டும், பார்த்துக்கொன்டே இருக்கவேன்டும், பழகவேன்டும் என்ற ஆசை பொங்கிவழிந்தது. அவன்யார், பெயர் என்ன என்று விசாரித்து அறியுமுன் அவன் கிளம்பிவிட்டான். அவனைப்பற்றிய விவரம் யாருக்கும் தெரியவில்லை. தினமும் அவன் நினைப்பிலேயே வழக்கமான வாழ்வினை மறந்தாள், தூக்கம், படிப்பு, கல்லூரி நண்பர்கள், மற்றும் சாப்பாடு அனைத்தும் மறந்தாள். அவள் உலகிலேயே மிக அதிகம் நேசித்த தனது அன்புத் தங்கையிடம் கூட பேச மறந்தாள். நாளுக்கு நாள் உடல்மெலிந்து மனநிலை பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுவதைக்கன்ட அவளது தங்கை மிகவும் கவலை கொன்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். மருத்துவரும் ஒன்றும் கன்டுபிடிக்க முடியாமல் கை விரித்துவிடார். ஒருநாள் அவள் தனது அன்புத்தங்கையை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டாள். அதுகுறித்து அவள் கவலையோ வருத்தமோ கொள்ளவில்லை. ஏன் கொன்றாள் என்று போலீசால் கன்டுபிடிக்கமுடியவில்லை.
ஏன்கொன்றாள்?
இது மனவியல் பாடத்தில் வரும் ஒரு புதிர் ஆகும். அவள் கொன்றதின் சரியான காரனத்தை கன்டுபிடித்துவிட்டால், உங்களுக்குள் சைக்கோ தனம் புதைந்து இருந்தாலும் இருக்கலாம் என்று சொல்லலாம்.
இதைவிட எளிமையான கேள்வி இருக்கின்றது.
பாலாவின் அடுத்த படத்தை வெளியான முதல் நாளே பார்ப்பீர்களா?

‬ 
நான் சத்தியமா ‪#‎தாரைதப்பட்டை‬ பார்க்கலைங்க.
#தாரைதப்பட்டை #தாரை தப்பட்டை

4 comments:

காரிகன் said...

அக்கா தங்கையை கொன்றதன் காரணம் மீண்டும் அந்த இளைஞனை காண வேண்டும் என்பதற்காக. தன் தந்தையின் இறப்பிற்கு வந்தவன் தங்கள் உறவினர்களில் ஒருவனாகவே இருப்பான் என்ற எண்ணத்தில் அவள் இந்தக் கொலையை செய்தாள்.

இதை வேறுவிதமாக சொல்லியிருந்தால் விடை சற்று கடினமாக இருந்திருக்கும்.

உடனே என்னையும் பாலா லிஸ்டில் செர்துவிடுவீர்களே ?

உங்கள் இரண்டாம் கேள்விக்கான பதில்; கண்டிப்பாக இல்லை. நான் டி வி யில் கூட பாலா என்ற மனநோயாளியின் படத்தைப் பார்க்க மாட்டேன்.

உசிலை விஜ‌ய‌ன் said...

கரிகாலன் ஆகா, நீங்கள் சைக்கோ இல்லை.

காரிகன் said...

மன்னிக்கவும் விஜயன் கரிகாலன் என்ற பெயரில் ஒரு பதிவர் இருக்கிறார். நான் காரிகன்.

உசிலை விஜ‌ய‌ன் said...

ஆமாம் காரிகன். மன்னிக்கவும் இது ஐபோன் தவறு.