Monday, August 22, 2016

செவாலியே விருதுக்கு தகுதியான நபர்தான் ‪#‎கமல்‬ ஹாசன்

செவாலியே விருதுக்கு தகுதியான ஒரே நபர் ‪#‎கமல்‬ ஹாசன் தான். சரியான தெரிவு. பத்மஸ்ரீ சிவாஜிகனேசன் அவர்களுக்கு அடுத்து நடிப்பை உயிராக நினைத்து மதித்து தொழில் செய்யும் ஒருசிலரில் இவரே முதலிடம். இவரது நடிப்புப் பசிக்கு தீனிபோட்ட்ட ஒரேபடம் என்னைப்பொறுத்த வரை "‪#‎சலங்கை‬ ஒலி" தான். நாட்டிய கலையின் மீதுள்ள மோகத்தில் என்னற்ற கனவுகளை இளமையில் கண்களிலும் இதயத்திலும் சுமந்து எதிர்பார்த்து இருக்கையில் காலம் வ்ழக்கம்போல வாழ்க்கையை தன்போக்கில் இழுத்துச்செல்ல, சாதிக்க முடியாமல் போய்,, அனைத்து வகையிலும் ஏமாற்றத்தை சந்தித்து, கதியற்றுப் போய் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தனது கலைத்திறமையை தன்னோடு சாகவிடாமல் கடைசியில் ஒரு சிஷ்யைக்கு கற்ப்பித்து விட்டு இவ்வுலகை நீங்கும் பத்திரத்தில் பிச்சு உதறி இருப்பார்.
காதல் மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் அது, இசை மற்றும் பாடல்கள் சொல்லவே வேன்டாம், மேஸ்ட்ரோ இளையராஜா தான்.
அதுபோல ஒரு படம் #கமல் க்கு வராதா என்று ஏங்கித்தவிக்கின்றேன்.
வியாபாரப் புயலில் அடித்துச்செல்லப்பட்ட கலைப்படகு வேறுவழியில்லாமல் வணிகத்துடுப்போடுகின்றது. கலைத்துடுப்போடும் நாள் எந்நாளோ.
அதுமட்டுமல்லாமல், நகைச்சுவையிலும் நாகேஷுக்கு வாரிசு என்று இவரைச்சொல்லலாம். ராணித்தேனீ என்ற பழைய படத்தில் தனி நகைச்சுவை ட்ராக்கில் வந்து கலக்கி இருப்பார். அது போன்ற தனி நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து நம்மை எல்லாம் இன்புறச்செய்ய வேன்டும் என்று வேன்டிக்கேட்டுக்கொள்கின்றேன்.

No comments: