Thursday, August 25, 2016

உலகின் முதல் பகுத்தறிவாளன் தோன்றிய ஏதன்ஸ் நகரின் தற்பொழுதைய நிலமை



உலகின் முதல் பளிங்குக் கற்களால் நவீன கட்டுமான உத்தியுடன் 2500 வருடங்களுக்கு முன்னர் ஏதன்ஸ் நகரில் கட்டப்பட்ட பார்த்தனான் கட்டிடத்தை பார்க்க ஆவலாக சென்றிருந்தேன். பார்த்தவுடன் திகைப்பும் சோகமும்தான் கொன்டேன்.

நாமெல்லாம் 1000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலை சிலாகித்துப்பேசுகின்றோம். ஆனால் 2500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட பார்த்தனான் கட்டிடத்தை சிறப்பாகக் கட்டி திறமையை பூரிப்புடன் உலகுக்கு வெளிப்படுத்திய கிரேக்கர்கள் அதை பறிகொடுத்து விட்டு கலைத்திறமைக்கு மைல் கல்லாயிருந்த கட்டிடங்கள், சிற்ப்பங்களை அனைத்தும் தொலைத்து சோகத்துடன் இருப்பதுதான் கொடுமை. தொலைந்தவைகளை தேடிஎடுத்து எழுப்பிக் கொன்டேதான் இருக்கின்றனர்.

பாருங்கள் தற்பொழுதுள்ள கட்டிடத்தில் எத்துனை ஒட்டுக்கள்.

எதீனா எனும் பெண் கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோவில் கட்டிடம் 2ம் நூற்றாண்டிலேயே கிருத்துவ மதவெறியர்களாக் தீக்கிரையாக்கப்பட்டது. பின்னர் கத்தோலிக்க சர்ச் ஆக்கப்பட்டது. அந்தக்காலத்திலேயே க்ரேக்க நாட்டில் பல கலை அம்சங்கள் அழிக்கப்பட்டன. சிலைகள் எல்லாம் உடைத்து எறியப்பட்டன.

பிறகு 12ம் நூற்றாண்டில் இது லத்தீன் சர்ச் ஆக்கப்பட்டது.

பின்னர் 14ம் நூற்றாண்டில் துருக்கி ஓட்டோமன் கிரேக்கத்தை கைப்பற்றி பிரமாண்டமான இந்த கிரேக்கர்களின் கோவிலை, இதை மசூதியாக்கினான்.

16ம் நூற்றான்டில் துருக்கியின் மொரோசினி இக்கட்டிடத்தை வெடிகுண்டு வைத்து தரக்த்தான், கடவுள் சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டன.

ஏதன்ஸ் மக்கள் இதையெல்லாம் வேதனையுடன் பார்த்துக் கண்ணீர் வடிப்பதைத்தவிற ஏதும் செய்ய இயலவில்லை. அன்றிலிருந்த்து அதன் கலைப்பொருக்கள் எல்லாம் திருடு போகத்தொடங்கின.

இங்கிலாந்தின் எழாம் எல்ஜின் இதில் இருந்த பளிக்குச்சிலைகளைஎல்லாம் பெயர்த்து எடுத்து இங்கிலாந்துக்கு கொன்டு சென்றுவிட்டான்.

தற்ப்பொழுது அவைகள் எல்லாம் லண்டனின் பிரிடிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளன. பெரும்பான்மையான சிலைகள் மற்றும் கலைப்பொருட்க்கள் எல்லாம் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகத்தில் உள்ளன.

#ஏதென்ஸ் நகரில்உள்ளனைத்து பழமைகட்டிடங்களிலும் சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு தலைகள் இல்லாமல் உடல்கள் மட்டுமே இருக்கின்றன.

சுயத்தை மற்றும் தங்களது அடையாளத்தை தொலைத்த கிரேக்கர்கள் அதை மீட்டெடுக்க அனைத்து நாடுகளையும் திருப்பிக்கொடுக்கும்பட் கெஞ்சி கேட்டுக்கொன்டிருக்கின்றார்கள்.

இந்த கட்டிடம் கிரேக்கர்களின் வாழ்வினை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கின்றது. ஏதன்ஸ் தெருக்களில் நடந்து செல்லுகையில், சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்ட்டாடில் மற்றும் பலர் நடந்த வீதி அதில் நானும் நடக்கின்றேன் என்று பெருமையாக இருந்தது. உலகிற்கே நாகரீகத்தை, வாழும் கலையை, பகுத்தறிவை போதித்த கிரேக்கம், இப்பொழுது பன்நாட்டு அரசியல் மற்றும் வியாபாரிகளின் சதியால், சுரண்டப்பட்டு பார்த்தனான் கட்டிடத்தை போன்றே சக்கையாக இருக்கின்றது. விவசாயம், மற்றும் மீன்ப்பிடித்தலில் தன்நிறைவு கொன்டிருந்த கிரேக்கம், உலகமயமாக்குதலின் தந்திரமான சதியில் சிக்கி சின்னாப்பின்னமாகிக் கிடக்கின்றது.

இருந்தாலும் தங்களின் சுயத்தை மீட்க்க முடிந்த அளவு போராடிக்கொன்டுதான் இருக்கின்றனர். உலகின் முதல் பகுத்தறிவாளன் சாக்ரடீஸை, இளைஞர்களின் மனங்களை கெடுக்கின்றார் என்று பொய்க்குற்றம் சுமத்தி மரண தன்டனை கொந்து விஷமருந்தி சாகவைத்தனர். அதை இப்பொழுத்து நினைத்துப்பார்த்து வருந்தி சாக்ரடீஸை தலையில் தூக்கி வைத்து கொன்டாடுகின்றனர்.

இதிலும் ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது. திவாலான கிரேக்க தேசத்தின் மக்கள் வாழ்க்கைத்தரம், பொருளாதாரத்தில் ஒளிரும் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தினை விட 20 மடங்கு மேலாகத்தான் இருக்கின்றது.

No comments: