Friday, November 03, 2023

கல்வி தேவையா?.

கல்வி தேவையா?. SIN, COS TAN போன்ற கணக்கீடுகள் னது வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும்பொழுது அதை எதற்க்காக படிக்கவேண்டும் போன்ற கேள்விகள் சங்கித்தனமான பரப்புரைகள், பிக்பாஸ் மற்றும் நீயா நானா புண்ணியத்தில் மக்களிடையே விவாதப்பொருட்கள் ஆகி இருக்கின்றன.

மொழி, அறிவியல், கணக்கியல் போன்ற தொழில்முறை அல்லாத பொதுக் கல்வியில் கற்ற வித்தைகள் வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ யாரும் பயன் படுத்தப்போவதே இல்லை என்றுதான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

கூட்டமாக தத்தனித்தனி இனமாக வாழ்ந்து மற்ற இனத்தினை சண்டையிட்டு அழித்து பொருட்களை கொள்ளையிட்டு வாழ்ந்திருந்தத மனித இனம்.

சண்டையிடுவது தவறு, இன்றைக்கு இருக்கும் உணவு எத்தனைபேருக்கு இத்தனைநாள் தேவைப்படும் எவ்வளவு சேமித்துவைக்கவேண்டும். மற்றும் உணவை நாமே எப்படி தயாரிக்கலாம் என்றல்லாம் எண்ணி நாகரீக முன்னேற்றம் அடைந்ததெல்லாம் என்னவென்று நினைக்கிண்றீர்கள்?

சமூகவியல், கணக்கியல், அறிவியல் போன்ற கல்விகளினால்தான் நிகழ்ந்தது இது என்பதுதான் உண்மை..

இதெல்லாம் பொது அறிவுதான் இதை கல்வி என்று சொல்ல முடியாது என்று நினைப்பீர்களேயானால் அது தவறு.

பொது அறிவு கொண்ட ஒருவர் அவைகளை மற்றவருக்கு அறிவுறுத்தி கடத்தினால் மட்டுமே இது செயலாக்கம் ஆகும். அந்த அறிவுறுத்தல் என்பதுதான் கல்வி ஆகும்.

கல்வியானது தேடும் ஆர்வத்தை உண்டாக்கி, சிந்திக்கும் சக்தியை அதிகரித்து , குழப்ப சிக்கலுக்கு தீர்வு காணவும் , புதிய உத்திகளை உருவாக்கவும் கற்றுத்தருகின்றது. எந்த ஒரு தொழிலுக்கும் இவைகள் மூன்றும் தேவைதான்.

கல்வி என்பது மிக முக்கியமானது ஆகும். விவசாயம் செய்பவர்களும் வியாபாரம் செய்பவர்களும், கண்டவர்கள் பேச்சை கேட்டு கல்வியை கைவிடல் ஆகாது.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

பள்ளிப் படிப்பு அல்லது கல்லூரி படிப்புக்குப் பிறகுதான் நமக்குள் என்ன ஆர்வம் இருக்கின்றது என்று தெரியும். அதன் பிறகு அதற்க்கு தகுந்த தொழில் கல்வியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அப்படி சிரமப்பட்டு படிக்கவேண்டுமா என்றால் இல்லைதான். முடிந்த அளவிற்கு சற்று முயற்சி செய்யத்தான்வேண்டும்.

என்னதான் செய்தாலும் நமக்குள் இருக்கும் ஆர்வத்தை அறிந்துகொள்ளலாமே தவிர நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மையான திறமையை அந்த கடவுள் தவிர யாராலும் அறியமுடியாது.எனக்குத்தெரிந்து இந்த உலகில் தான் கொண்ட திறமைக்கேற்ற தொழிலை பெற்றவர்கள் இரண்டே பேர்தான்,

1). இளையராஜா
2). பீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குனர்)

இரண்டு கேள்விகள் உங்களுக்கு

1).அணில் அம்பானி மகனுக்கு கல்வி தேவையா?
2). SIN, COS கணக்கீடுகளை வாழ்க்க்கையில் போட்டுப்பார்காத மனிதனே இவ்வுலகில் இருக்கமுடியாது. வாழ்க்கை தேவைக்கு நீங்களும் போட்டுத்தான் இருக்கிறீர்கள் எப்படியென்று தெரியுமா?



No comments: